மக்கள் தீர்ப்பு....!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக், (காயல்பட்டணம்.)[06 March 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 17513
ஒரு நாள் அடையாளக் கடையடைப்பு முழு வெற்றியைப் பெற்றது. கூடங்குளம் அணு மின் நிலயத்தைத் திறக்க ஆதரவு தெரிவித்து தான் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவில்லை. மாறாக, நம் நகரில் நிலவும் அரசு அறிவிக்காத தொடர் மின் வெட்டைக் கண்டித்து தான் இப் போராட்டம் வெற்றி பெற முழு ஒத்துழைப்பை தந்துள்ளனர். என்பது தான் உண்மை!
உள்நகர், புறநகர், தெருக்களில் உள்ள 99 சதவிகித கடைகள் அடைத்தே இருந்தன. ஆட்டோ, வேன்கள் கூட ஓடாத்தால் தெருக்கள், பிரதான வீதி, புதிய பேருந்து நிலையம் ஆகியவை வெறிச்சோடிப் போய் கிடந்தன.
நேற்று கடையடைப்பிற்கு மறுப்பு தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த பிரசுரத்தின் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவேயில்லை! எப்படியோ? நகரின் தேவைக்காக முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைப்பினர்க்கும், வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் அனைவர்க்கும் நன்றி!!!
குசும்பு அல்ல:
கல்யாணப் பந்தியில் தாளஞ்சோத்துக்கு மட்டுமல்ல, தக்க சமயத்தில் தகுந்த ஒத்துழைப்பையும், ஒற்றுமையையும் தருவதில் காயலர்கள் ஒரு படி மேல் என்பதை இந் நிகழ்வின் மூலம் உலகுக்கு உணர்த்தி விட்டனர். வாழ்த்துக்கள்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross