Re:தொடர் மின்வெட்டைக் கண்டித... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்.)[08 March 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17547
சகோ. விளக்கு SMA அலி அவர்களே,
மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.
இந்த ஆலை ஆரம்பிக்கும் முன்பு அரசும், பல நிறுவனங்களும் இதை மிகவும் பாதுகாப்பான ஆலை என்றும், விபத்துக்கள் தடுக்க அதி நவீன உத்திகள் எல்லாம் உண்டு என்றும், மாசுக்கட்டுப்பாடு சரியாக உள்ளது என்றும், அங்கு உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும் என்றும், அரசாங்கத்திற்கு அந்நிய செலவானியும் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று எல்லாம் சொன்னார்கள் தானே. இப்போ..சங்கு கூட ஊத முடியவில்லை..எங்கே பால் ஊத்த..!
இது ஒரு தகவலுக்கு தான்.
ஆக, விபத்து வந்து அனைவர்களும் மாண்ட பின்பு, வழக்கு தொடர்ந்து, 25 வருடங்களுக்கு பின்பு சோளப் பொரியை தூவின மாதிரி இழப்பீடு கொடுத்தார்களே "யூனியன் கார்பைடு" நிறுவனம்.. இவனாவது சில்லறை காசாவது கொடுக்க சம்மதித்தான், ஆனால் இந்த அணு உலை அமைக்கும் நிறுவனமோ, இந்த சரத்தை ஒப்பந்தத்தில் எழுதக்கூட ஒத்துக்கொள்ளவில்லையே..
வல்ல இறைவன் நம் அனைவர்களையும் ஆபத்துக்களில் இருந்து காப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross