செய்தி: “தொலைநோக்கு பார்வையில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு” பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும்! ஐக்கியப் பேரவை தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது பரிந்துரை மட்டுமே...! posted bySK Salih (Kayalpatnam)[23 December 2010] IP: 59.*.*.* India | Comment Reference Number: 1762
சகோதரர் சட்னி செய்யித் மீரான் கூறியுள்ளது போல, மாஷாஅல்லாஹ் நமதூர் மக்கள் பொதுச்சேவையில் சோர்ந்தவர்கள் அல்ல. ஊரில் உள்ள ஒவ்வொரு ஜமாஅத்துக்கு என பாரம்பரியமிக்க அமைப்புக்கள் உண்டுதான்...
குறிப்பிட்ட சங்கங்களின் மூலம் ஏன் இப்பரிந்துரை சமர்பிக்கப்பட்டது எனில், இப்பரிந்துரையை - ஐக்கிய பேரவைக்கு எடுத்து செல்லும் போது, குறிப்பிட்ட சில நபர்களோ அல்லது ஒரேயொரு அமைப்போ மட்டும் கொண்டு சென்றால் நன்றாக இருக்காது என்றும், ஆகவே விரைவாகவும் - அதே நேரத்தில் முடிந்தளவு பரவலாகவும் கலந்தாலோசித்து சமர்பிக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவுமே, ஏழு சங்கங்கள் மட்டும் துவக்கத்தில் அணுகப்பட்டன.
இன்ஷாஅல்லாஹ், மஹல்லாக்களுக்கு இப்பரிந்துரைகளை சமர்பிக்கும்போது, நகரில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் இதன் சுருக்கம் கொடுக்கப்படும். இது ஊர் நலனைக் கருத்தில் கொண்டு பெரியவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட செயல்திட்ட முன்வடிவு மட்டுமே! இது மக்கள் யாவரையும் சென்றடைந்து, அவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெறப்பட்டு முடிவு எடுக்கப்படவேண்டிய விஷயம்.
இது நடைமுறையில் வெற்றி பெற அனைத்து மக்களின், அனைத்து சங்கங்களின் மற்றும் அனைத்து ஜமாஅத்களின் முழு ஆதரவு மற்றும் உழைப்பு அவசியம் தேவை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross