Re:பொதுமக்களுக்கு கோமான் நற்... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852)[12 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17625
துபாய் கோமான் நற்பனி மன்ற அங்கத்தினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்ஹம்து லில்லாஹ்!! இந்தமாதிரியான ஊர் நலம் பேணி கல்விப்பணிக்கு நல்ல ஒரு ஏற்பாடுகளை செய்து வரும் பல காயல் நல மன்றங்கள் போல் கோமான் நற்பணி மன்றம் இந்த கல்வி சேவையில் இணைந்திருப்பது ரெம்பவே வரவேற்று நன்றியும் கூறி வாழ்த்து கிறோம். தொய்வின்றி தொடர துஆவும் செய்கிறோம்.. JAZZAAKKU MULLAAHU KHAIRAA. WA KHAIRAN JAZEELAAH.ஆமீன்.!!
அத்துடன் மிக முக்கியமாகவும் அவஷ்ஷியமாகவும் கவணிக்க வேண்டியது பொருளாதாரக்கல்விக்கு (பாட சாலைமற்றும் காலேஜ் படிப்புகளுக்கு) நாம் செலவு செய்வதை விட மார்க்கக்கல்விக்குத்தான் அதிகமாக செலவு செய்ய வேண்டும். அது தான் இம்மை மறுமை இரண்டிற்க்கும் ஆதாரமாக இருக்கும். இல்லையேல் இந்தக்கல்வி கற்ற்வருக்கும் அதற்காக செலவிட்டோருக்கும் அதன் பயன் இவ்வுலகத்தோடு நின்று விடும்.
அல்ஹம்து லில்லாஹ் நமது கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த நமது பெண்களின் சன்மார்க்கக் கல்வியில் நமதூர் தீவுத்தெரு, அறூஸுல் ஜன்னாஹ் மத்றஸதுந் நிஸ்வானில் ஓதி தேர்ச்சி பெற்று ஆலிமாக்கள் ஸனது பெற்ற சுமார் பத்து பதினைந்து பெண்களும், சுமார் 4-5 ஹாஃபிழாக்களும் இருக்கிறார்கள். அது ஒரு,மகத்தானதும், மகிழ்ச்சிக்குரியதும் ஒரு குறிப்பான பாராட்டுக் களும் செய்ய வேண்டியதும் இருக்கிறது. இவர்களிலும் ஏழு வருடங்கள் ஆம்பூர் பெண்கள் மத்றஸாவில் ஓதி ஆலிமா ஸனது பெற்றவர்களும் உண்டு என்றால் இன்னும் ஒரு படி போற்றற்குரியது தானே. மாஷா அல்லாஹ்.
இம்மாதிரியான சன்மார்க்கக் கல்விக்கு நாம் என்ன முயற்சி கள் செய்தோம், ஆண் மக்கள் பெண் மக்கள் பால் என்ன முயற்சிகள் செய்கிறோம்? மற்ற தெரு வாசிகள் நமக்காக இவ்வளவு சிரத்தை எடுப்பது ஏன் என்பதை சிந்தித்து சன்மார்க்க்க் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து. நமது நாயகம் (ஸல்) அவர்களின் பிரத்தியேகமான துஆ வாகிய ”ALLAAHUMMANSUR MAN NASARA DHEENA MUHAMMADHIN (SAL) WAJ ALNAA MINHUM,- WAKHUZUL MAN KHAZALA DHEENA MUHAMMADHIN (SAL) “எனும் இந்த துஆ வின் மக்பூலை பெற்றவர்களாக ஆகுவோமாக. ஆமீன்!!
இதனை வலியுறுத்துமுக மாகவே அல்லாஹ் திருக்குற் ஆனில் விடுத்த கீழ் காணும் எச்சரிக்கையய்யும் நிணைவு கொள்ள வேண்டியவை யாக இருக்கிறது. அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக. இந்த அறிவிப்பு ஒவ்வொரு முஸ்லிமான வருக்கும். உள்ளதே.
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross