Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக... posted byT,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852)[14 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17678
Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக.......
நமதூரின் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் சுற்றம் சூழல் ஆகியவற்றின் முன்னேற்றம் சம்மந்தம் இன்னும் பல எத்தனையோ இயக்கங்கள் கூட்டங்கள் ,ஆராய்ச்சிகள் எல்லாம் நடைபெறத்தான் செய்கின்றன். ஆனாலும் இவை யாவும் அதிகரித்துக்கொண்டே இருப்பதை தவிர குறைந்த பாடில்லை இதனையும் ஆராய ஒரு கூட்டம், அத்துடன் ஒரு இயக்கமும் தேவைப்படுகிறது. அப்படி ஒரு ஏற்பாடு நடக்கும் பட்சத்தில் ஏதாவது காரணம் விளங்கும்.
எதற்கும் அல்லாஹ்வின் கோபப்பார்வை இருக்குமானால் எதையுமே நாம் சாதிக்க முடியாது. அது திண்ணம்.அல்லாஹ்வே நீ தான் எங்களுக்கு எல்லாவற்றிலும் நேர்மையான வழிகாட்டியாக இருப்பாயாக. நாயகம் (ஸல்) அவகளின் ஹதீதுகளின் ஒரு குறிப்பு படி நமக்குள் ஒற்றுமை குறைந்தால் ஒருவரை ஒருவர் வசைபாடி திரிந்தால் துஆ ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது.
எதிர்பாராத விநோத நோய., பஞ்சம் எல்லாம் வருமென்றும் இருக்கிறது. இப்படி இருந்தால் அல்லாஹ்வின் ஜப்பாரியத்தும் வஹ்ஹாபியத்தும் வேலை செய்யாதா? சிந்திப்போமா ......? உலமாக்கள் விளக்கம் தருவார்கள்'
இருந்தாலும் ஒரு யோசனை. அதாவது . ;நமதூரின் பழைய கால வீட்டமைப்புகள் போலன்றி வீட்டில் முற்றம் இன்றி வீடுகள் கட்டி . வெயில் வாடையும் இன்றி கட்டுவதும், டாய்லட் சம்மந்தமான சானிடரி விஷயங்களில் கவனம் செலுத்துவதும் அவைகளை ரிமோட் ஏரியாவில் வைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதும ஒரு நிவாரணம் தரலாம். .ஏனெனில்,நவீன டய்லெட்கள் பாவிக்கும் முறைகளிலும் கவணக்குறைவாய் இருந்தால், முதலில் நஜாஸத்கள் பேணாமல் ஆகி தொழுகை போன்ற வணக்கங்களை அது பாதிக்கிறது. ஸுன்னத்தான முறைகளில் டாய்லெட் பாவிப்போர் விரல் விட்டு எண்ணக்கூடிய மாதிரிதான் நம்மில் இருக்கிறோம். ஃப்ளஷ் அவ்ட் போன்ற டாய்லெட் முறைகளையும் பேணவில்லை. வீடுகளிலேயே இப்படி இருந்தால் பொது டாய்லெட் என்ன பாடுபடும்? யோசிக்கவும்.
எல்லாவற்றிற்க்கு மேலாக ஸவ்ண்ட் பொல்லூஷனை அதாவது ஸீரியலாகவும் அதிக கர்ண கொடூரமான சப்த்தத்திலும் ஸ்பீக்கர்களை கட்டி பொதுமக்களின் உள்ளத்துக்கும், உடலுக்கும் ஊறு விளைவிக்கும் கலாசாரத்தை ஒழித்தாலே அனேக, வியாதிகள் குறைந்து விடும். இவைகளை பிரபல ENT DOCTORகளும் வலியுறுத்தி கூறுகிறார்கள். முயற்சி செய்வோமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross