Re:DCW ஆலை விரிவாக்கத்திற்கு... posted bySalai.Mohamed Mohideen (USA)[15 March 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 17696
பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை...நல்லதொரு முயற்சி. முயற்சி திரு வினையாக்கும். ஒவ்வொரு வீடு வீடாக சென்று இதனை சேகரியுங்கள்.
Avaaz போன்று வெளியூர் வெளிநாட்டு வாழ் காயலர்களிடமும் online petition மூலம் கையெழுத்து வேட்டையை நடத்துங்கள். அதே நேரத்தில், தனி மரம் தோப்பாகாது. முடிந்த வரை நம்மை போல் பாதிக்கப்பட்டுள்ள மற்ற ஊர் மக்களையும் ஒருங்கிணைந்து இது போன்ற தொடர்ந்து போராடினால், நச்சை கக்கும் DCW என்ற கொடிய அரக்கன்னுக்கு ஒரு மூடு விழா எடுக்க முடியும் .
கூடங்குளம் தொழிற்சாலை சூடு பிடித்திருக்கும் இத்தருணம் நமக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. நம்முடைய குரலையும் ஓங்கி ஒழிக்க. ஏனென்றால் கூடங்குளமும் DCW வும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே. நம்முடைய குரல்கள் குமுறல்கள் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்!!
துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!!
இறைவன் அருளால் உங்களுடைய இந்த தொடர் போராட்டங்கள் ஒரு நாள் வெற்றியை அடைந்தே தீரும். அந்நாள் வெகு தொலைவில் இல்லை!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross