செய்தி: தங்க நகைகள் மீது வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, நகைக்கடைகள் 3 நாள் கடையடைப்பு போராட்டம்! காயல்பட்டினம் நகைக்கடைகளும் அடைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தங்க நகைகள் மீது வரி உயர்... posted bymackie noohuthambi (colombo)[19 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17764
கடை அடைப்புகளால் நஷ்டம் வியாபாரிகளுக்கு மட்டுமல்ல, அரசுக்கும்தான் என்பதை அரசுகள் உணரவேண்டும். எத்தனை கோடி ரூபாய் தொழில் பாதிப்பு அரசுக்கு எவ்வளவு வருமானம் இழப்பு. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று மத்திய அரசு விரக்தியின் விளிம்பில் இருக்கிறது. மற்றவர்கள் தோளில் ஏறி தான் திருவிழா பார்க்கவேண்டும் என்ற நிலை. எனவே திராவிட முன்னேற்ற கழகமோ மம்தா பணர்ஜீயோ ஒரு சத்தம் போட்டால் போதும். அரசு இதை திரும்பபெற்றுக்கொள்வார்கள். கவலைப்படாதீர்கள்.
எனக்குள்ள ஆதங்கமெல்லாம் எப்படிப்பட்ட பொருளாதார வல்லுனராக தன்னை அடையாளம் காட்டி கொண்டு வீறு நடை போட்ட மன்மோகன் சிங்க் இப்படி பெண்களின் பிடியில் (மம்தா, ஜெயலலிதா), கருணாநிதி ஆகியோரின் பிடியில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்களே, காங்கிரசுக்கு போதாத காலம் என்ன செய்வது. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? சுதந்திர போராட்ட வீரர்கள், இன்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக எவ்வளவு கீழே இறங்கி போகிறார்கள். போனால் போகட்டு போடா, இந்த பூமியில் நிலையாய் ஆண்டவர் யாரடா என்று துண்டை உதறி போட்டு போக மனமில்லையே. இதனை பார்த்து பொருதுக்கொண்டிருக்கும் நமது தமிழ் மண்ணின் தலைவர்களாவது பொங்கி எழ மாட்டார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross