குற்றமற்ற காயல் மாநகரை உருவாக்குவோம்.............. posted byShameemul Islam SKS (Chennai)[23 March 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 17829
அவசர காலத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்பது போல நமதூரில் கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவதைப் பற்றியும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் சிந்திக்காமல் அனைவரும் ஒரே விதமாக பெண்கள் பாதுகாப்பு பற்றித் தான் பதிவு செய்துள்ளார்கள்.
காலையின் வசந்தக் காற்றில் கடற்கரை ஓரமாக நடை சென்று உடலை கட்டுப்பாடாக வைக்க விரும்பும் தாய்மார்களுக்கு இது ஒரு கசப்பான கருத்தாகவே இருக்கும்.
எங்கு பார்த்தாலும் குற்றங்கள். குற்றவாளிகளை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் என நாட்டு நிர்வாகம் சிந்திப்பதைப் போல நாமும் உடனுக்குடன் பாதுகாப்பு பற்றி கவலையுற முனைகிறோம்.
அமைதியான சூழலுக்கு உள்ள தடைகளைக் களைந்து குற்றமற்ற ஊர் காயல்பட்டணம் என்பதை உருவாக்க முயற்சிப்பதே சரியாக இருக்கும்.
தீமைகளின் ஊற்றுக் கண்களை முதலில் அழிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின் வரவுள்ள ஒரு காலத்தை நினைவு படுத்தினார்களே ஞாபகம் இருக்குதா.
சன்ஆ முதல் ஹதரமௌத் (யமன்) வரை ஒரு பெண் தன்னந் தனியாக பயணிப்பாள். இறை அச்சத்தைத் தவிர வேறெந்த பயமும் அப்போது அவளுக்கு இருக்காது என்றார்களே.
அதற்குத்தேவை சிறந்த சமூகம் உருவாக சில அர்ப்பணிப்புகள் ; சில தியாகங்கள். அவ்வளவு தான்.
அந்த தியாகத்தின் நடுவே நின்றுகொண்டு நபி இடம் இறைவனைப் பிரார்த்திக்க வினவிய ஒரு நபித்தோழருக்குப் பகர்ந்த ஆறுதல் வார்த்தைகள் தாம் இவை.
எனவே கொலைகளைத் தடுப்போம். அவை உருவாகக் காரணமான விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்வோம். குற்றமற்ற காயல் மாநகரை உருவாக்குவோம். இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross