செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் விரைவில் நிறைவேற்றம்! நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ரூ.50 லட்சம் நன்கொடை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சேவைக்கு உதவுங்கள் posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[25 December 2010] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1784
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
2 வது பைப்லைன் குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்ற இருப்பது மகிழ்ச்சியை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
அதற்கு நமது நகர்மன்றத் தலைவர் அவர்கள் தன் சொந்தப்பொறுப்பில் ரூபாய் ஐம்பது இலட்சம் நன்கொடையாக தர இசைந்திருப்பது மாஷா அல்லாஹ்! அவர்களது பொதுச்சேவையையும்,
பெருந்தன்மையையும் பிரதிபலிக்கிறது.
வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் அதிகமான பரக்கத்தையும் , ஆரோக்கியமான வாழ்வையும் கொடுத்து இன்னும் அதிகமான சேவையை செய்யக்கூடிய ஆற்றலையும் கொடுப்பானாக ஆமீன்.
------------------------------------------------
டெண்டர் எந்நேரத்திலும் விடப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் , விடப்பட்ட 18 மாதத்திற்குள்
2 வது பைப்லைன் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விடும் என்று சொல்லும்போது இன்ஷா அல்லாஹ்! எப்படியும் இன்னும் இரண்டு வருடத்திற்குள் நம்ம ஊருடைய தண்ணீர் பிரச்சினை தீர்ந்து,
எல்லோருக்கும் தடை இன்றி தண்ணீர் கிடைக்கும் என்பது உறுதி அல்ஹம்துலில்லாஹ்.
-----------------------------------------------
புதிய இணைப்பு தொகை நிதியாக பெறப்படும் என்றும் அதற்கு உத்தரவாதமும் கொடுக்கபடுகிறது. ஆகையால் பொது மக்களுக்கு முறையாக இதுகுறித்த தகவல் அறிவிக்கப்பட்டதும், தேவைப்பட்டோர் மட்டுமில்லாது தேவை இல்லாதோரும் முன் பணம் கட்டி பதிவு செய்து உதவினால் இந்த திட்டம் விரைவில் நிறைவேறும்.
திட்டம் நிறைவேறி தண்ணீர் வரத்தொடங்கியதும், முன் பணம் கட்டியவர்கள் தேவைபட்டால்
இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம் தேவை இல்லை என்றால் வேறு யாருக்காவது மாற்றிக் கொள்ளலாம்.
இப்படி நாம் முன் பணம் கட்டுவதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. நம் பணம் இரண்டு வருடத்திற்கு
பேங்கில் போட்டு வைத்தமாதிரி பத்திரமாக இருக்கும்.
எனவே மக்களே! அறிவிப்பு வந்ததும் முன் பணம் கட்ட முந்துங்கள் , பொது சேவைக்கு உதவுங்கள் ,
உங்களோடு என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross