Re:ஏப்.06இல் துபை கா.ந.மன்றம... posted bymackie noohuthambi (colombo)[28 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17945
காதலர் தினம் கொண்டாடியவர்கள், அல்லது அதை தவற விட்டவர்கள் இங்கு வந்து கூடிவிட்டால் என்ன செய்வீர்கள். காயலர் தினம் நமதூரை காதலிப்பவர்கள் கூடும் தினமாக ஏற்றம் பெற வாழ்த்துக்கள். காதல் என்றவுடன் அதை விரசமாக பார்க்கும் மனோநிலை ஏனோ நம் மக்களிடம் இருந்த காலங்கள் இருண்ட காலங்களை நான் நினைத்துப்பார்க்கிறேன். இப்படி சந்தோஷமாக கொண்டாட அழைப்பு கொடுத்துள்ள புஹாரி காக்காவின் வயதில் பத்து குறைந்து விட்டதே. மனசுக்கு வயசு மூப்பு எனபது கிடையாது என்பார்கள்.உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது உயர்ந்த உள்ளங்கள், மற்றவருக்கு உதவும் உள்ளங்கள் என்றும் இளமையாகவே இருக்கும்.
கவிக்கோ அவர்கள் ஒரு கவிதை சொல்வார்கள்."இறைவன் நமக்கொரு காதல் கடிதம் எழுதினான். அதுதான் திருமறை, அதை கொண்டுவந்தவர்தான் நபிகள் நாதர். காதலிக்க தெரியாத கசடர்கள் நாம் என்று காதலிக்கவும் கற்றுக்கொடுத்தார்கள். (குர் ஆனில்லுள்ள அர்த்தங்களையும் நமக்கு சொல்லி தந்தார்கள்). எனவே காதலிப்போம் ஒவ்வொருவரும் ஒவ்வோவுருவரையும். காதல் வேறு காமம் வேறு. காதலை வளர்ப்போம்.காமத்தை வெறுப்போம். காயலர் தின வாழ்த்துக்கள், காயலர் காதலர் தின வாழ்த்துக்கள்.
இந்த வாழ்த்துக்காக எனக்கும் ஒரு சிறப்பு பரிசு வழங்கவேண்டும் என்று துபாய் காயல்நலமன்ற தலைவர் புகாரி காக்கா அவர்களை கேட்டுக்கொள்கிறேன். எதிர்பார்த்திருக்கிறேன். மக்கி நூஹுதம்பி 0094775131287
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross