Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted byM.I. மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[01 April 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18012
அஸ்ஸலாமு அலைக்கும்.
பொருள் எண் : 3
பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு சாலையின் சந்திப்பில் காலை 7 மணி முதல் 10 மணி வரை கட்டிட தொழிலாளர்கள் பிரித்து அனுப்பும் வேலை நடைபெறுகிறது. இவ்விடத்தில் கட்டிட தொழிலாளர்கள் 100 நபர்களுக்குமேல் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே அவர்களை பேருந்து நிலைய வளாகத்தில் மாற்றியமைக்கவும். மேலும், இவ்விடத்தில் கோழி வியாபாரம் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனையும் வேறு இடத்திற்க்கு மாற்ற ஆவண செய்யவும். (paste & Copy)
இந்த தீர்மானத்தை கொண்டு வந்த 16-ம் வார்டு உறுப்பினர் மதிப்பிற்குரிய அன்பர் சாமு சிஹாபுத்தீன் ஹாஜி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
உறுப்பினர் சொல்லியுள்ள கருத்துப்படி, போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாது, அதனால் நாங்கள் பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.பல சமயங்களில் சண்டை சச்சரவுகள் நடைபெற்று உள்ளது. மேலும் பெண்கள் காதால் கேட்க முடியாத வார்த்தைகளாலும் நாங்கள் அவதிப்பட்டு உள்ளோம்.
ஒரு நாள், அவர்களுக்குள் அடிபிடி தகறாறு ஏற்பட்டு, பின்னர் நான் போய் சப்தமிட்டு அவர்களை அவ்விடத்தில் இருந்து காலி செய்தேன். பின்னர் மீண்டும் மறுநாள் முதல் பழைய குருடி கதவை திறடி கதை தான்.
மேலும் இதனால் communal clash ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனை சாக்காக வைத்து அவர்களை தூண்டி விடக்கூடிய சில சக்திகள் அவ்விடத்தில் இருப்பதை அறிந்துக் கொண்டு நாங்கள் அமைதியாக மௌனமாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மேலும் விரிவாக எழுத விரும்பவில்லை.
எனவே நகராட்சி தலைவர், உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை முக்கிய பிரச்சனையாக கருத்தில் கொண்டு மேலும் பிரச்சனைகள் வளராமல் இருக்க ஆவண செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross