Re:தமிழக சட்டசபையில் நகர்மன்... posted bymackie noohuthambi (colombo)[05 April 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18077
சகோதரி ஆபிதா அவர்கள் நகரமன்ற தலைவர் வேட்பாளராக களம் இறங்கியபோது அவரை எதிர்த்து கூட்டம்போட்டு முன்னாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக கழக முன்னணி பேச்சாளர் ஒருவர் பேசும்போது, ஆபிதா அவர்கள் தலைவராக வரமாட்டார் அப்படியே ஒரு வேளை அதிசயம் நடந்து அவர் வந்தாலும் புரட்சி தலைவி அவர்களை சந்திக்க சென்றால், யாரிது, ஊரையே எதிர்த்து பெரியவர்களையே எதிர்த்து நின்றவளா, சீ வெளியே போ என்று சொல்லமாட்டார்களா என்று ஏளனம் பேசியவர்கள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள்.
"பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்று சங்கத்தமிழ் நன்றாகவே அன்று சொல்லியிருக்கிறது, "உருவு கண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார உடைத்து" என்று வள்ளுவம் சொல்கிறது. அதை எல்லாவற்றுக்கும் மேலாக நபிகள் நாயகம் இளைஞர்களைத்தான் " YAA MAUSHARA SHABAAB " என்று அழைத்து அவர்கள் கரங்களில் பொறுப்புக்களை ஒப்படைத்தார்கள்.
எனவே இளைஞர்களை உட்சாகபடுதுங்கள். பெரியவர்கள் ஒதுங்க வேண்டாம் அவர்களுக்கு துணையாக இருங்கள். தவறு செய்தால் தட்டி கேளுங்கள். நன்மை செய்தால் தட்டி கொடுங்கள்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகளை சான்றோன் எனக்கேட்ட தாய் எனபது போல் சகோதரி ஆபிதாவின் எழுச்சிமிக்க பயணம் கண்டு அவர்கள் தாய் மகிழ்ச்சி அடைவார்கள். வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பயணம் சட்ட மன்றத்தை பார்வை இட்டதோடு நின்று விடக்கூடாது. "கொக்கொக்க கூம்பும் பருவத்து அதன் குத்தொக்க சீர்த்த இடத்து "என்று வள்ளுவம் சொல்வது போல் அங்கிருந்து முதல்வரை சந்தித்து ஊருக்கு ஏதாவது சாதனைகளை கொண்டுவாருங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross