Re:பழுதடைந்த நிலையில் நகர்மன... posted byHameed Rifai (Yanbu (KSA))[16 April 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18285
Comment Ref No. 18282
................தலைவியை விடுங்க சார். அவங்களை புகழ்கிறேன் பேர்வழி என்று மற்றவர்களை மட்டம் தட்டுகிறீர்களே. இது வேண்டாத வேலை இல்லையா? முன்னாள் தலைவர்கள் செய்த நல்ல காரியங்களை எல்லாம் மறந்து விட்டு பேசுகிறீர்களே. இது நியாயமா? இன்று வந்தவர்கள் செய்யும் காரியங்கள் முன்னாள் இருந்தவர்கள் செய்த நல்ல நல்ல காரியங்களை அழித்து விடுமா? (Copy/Paste)
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசுவதில் மன்னர்களே! இச்செய்தியில் முன்னாள் நகர்மன்றத் தலைவரின் பெயரை வம்புக்கு இழுத்தது யார்? செய்தியை வெளியிட்டவர்களா அல்லது இச்செய்தியை ஆதரித்து கருத்து வெளியிட்டவர்களா? அல்லது எதிர்த்து கருத்து வெளியிட்ட திருவாளர்களாகிய நீங்களா?
கருத்துப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில், கொஞ்சம் கூட பக்குவமின்றி பெரியவர் ஒருவரை வம்புக்கு இழுத்து, தேரை இழுத்து தெருவிலும் விட்டுவிட்டு, சரியான சவுக்கடி விளக்கம் கிடைத்ததும் ஏன் இந்த மீசையில் மண் ஒட்டாத பழக்கம் திருவாளர்களுக்கு? சும்மா இருந்த பெரியவர் பெயரை இங்கே வம்புக்கு இழுத்து இப்போது மீசையில் மண் ஒட்டாமல் கருத்துக்களை வெளியிடும் திருவாளர்களின் நோக்கம்தான் என்ன?
இந்த இணையதளத்தில் வாசகர் கருத்துப் பகுதி இதற்கு முன் இருந்ததில்லை. வாசகர் கருத்துப் பகுதியை அறிமுகப்படுத்தியபோது ஆட்சேபணை செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், “நாங்க வெளியிடும் தகவல்களை பார்ப்பது மட்டும்தான் உங்கள் கடமை என்றில்லாமல், இதுகுறித்து விமர்சிக்க உங்களுக்கும் வாய்ப்புள்ளது என்பதை அறிவிக்கத்தான் இந்த வாசகர் கருத்துப்பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்கள். இப்பகுதி மூலம், செய்தியை வெளியிடும் அவர்களுக்குத் தெரியாத சில தகவல்கள் வாசகர் கருத்து மூலம் இடம்பெறவும்,. செய்தியிலுள்ள கவனக்குறைவான தவறுகள் சுட்டிக்காட்டப்படவும், பொது காரியங்களுக்கு நன்கொடை கேட்கும் செய்திகளில் உடனுக்குடன் தமது விருப்பத்தைத் தெரிவிக்கவும் இதுபோன்ற காரியங்களுக்கு இந்த வாசகர் கருத்துப் பகுதியை பயன்படுத்துவோர் வெகு சிலரே.
ஆனால், ஊர் ஏன் அமைதியாக இருக்கனும்? இங்கே வெளிநாட்டில் இருக்கும் நமக்கு பொழுது போகனும்னா கமெண்ட்ஸ் பகுதியை கலக்கனும் (இதை நான் யூகத்தில் சொல்லவில்லை) என்று கூறிக்கொண்டு, ஒருசிலர் தமக்குள்ளேயே பேசி வைத்துக்கொண்டு இதுபோன்ற ஈன வேலைகளில் ஈடுபடுவது உண்மையிலேயே என்னைப் போன்றவர்களை விட இந்த தளத்தை நடத்துவோரை மிகவும் வருத்தப்படச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross