Re:பழுதடைந்த நிலையில் நகர்மன... posted bySalai.Mohamed Mohideen (USA)[16 April 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18288
ஒரு சாதாரண (?) செய்திக்கு 45 (33 + 12 நிராகரிக்கப்பட்டது) கருத்துக்கள். நான் இதை 'டைப்' பண்ணி முடிப்பதற்க்குள் இன்னும் இரண்டு கருத்துக்கள் பதிவாகி விட்டது. போகின்ற கருத்து பரிமாற்றங்களை பார்த்தால் 'இது' ஒரு முடிவுக்கு வராது போல் தெரிகின்றது. ஒரு கருத்து பதிவிற்க்கு தோராயமாக 30 நிமிடம் என்று எடுத்து கொண்டால்... மொத்தம் 47 கருத்து பதிவிற்க்கு 23 மணி நேரங்கள் செலவிட்டுள்ளோம். இக்கருத்து பரிமாற்றம்... பிறருக்கு உபயோகமானதாக அல்லது குறைந்த பட்சம் ஆரோக்கியமானதாக இருந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.ஆனால்...
நாம் ஒவ்வொருவரும் நகராட்சி / நகராட்சி தலைவர் /அரசியல் சம்பந்த பட்ட செய்திகளை எப்பவுமே எக்ஸ்ரே கண் கொண்டு ஊடுருவி அலசி, கருத்து பதிவதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டுகின்றோம். இதே போக்கை, நமது இணையதளத்தில் வரும் கான்சர், DCW மற்றும் city of lights போன்ற செய்திகளுக்கும் (நமக்கு தெரிந்த கருத்துகளை / உணர்வுகளை அதிகதிமாக பதிவு செய்வதன் மூலம்) கடை பிடித்தால் நன்மையாக இருக்கும்.
நம்முடைய ஒவ்வொரு நகராட்சி தலைவரும் தங்களுடைய அனுபவதிட்கும், வயதிட்க்கும், சக்திக்கும்.... (இன்னும் என்னவெல்லாம் சேர்த்து கொள்ளனுமோ சேர்த்து கொள்ளவும்) உட்பட்டு தங்களால் முடிந்த நன்மைகளை நமதூருக்கு செவ்வென செய்துள்ளார்கள்... செய்து வருகின்றார்கள்.
மனிதன் என்ற முறையில் அதில் ஒரு சில குறைபாடுகள் கூட இருக்கலாம் / இருந்திருக்கலாம். 'முன்னே' இருந்தவர்களை விட, 'புதிதாக' வருபவர்கள் மிக சிறப்பாக பணியாற்றுவதட்காகத் தான்... அதற்க்கு தகுதியானவர்களை அப்பதவிக்கு நாம் தேர்வு செய்கின்றோம்.
ஆகவே அவர்களின் செயல்பாட்டை / செயல்திறனை 'மற்றவர்களுடன்' ஒப்பிட்டு பார்ப்பதோ அல்லது நாமே விளம்பர யுக்தி / செயல் திறனற்றவர், மீடியா 'ஒத்து' ஊதுகின்றது என்று கற்பனையாக (?) நினைத்து உடனே ஒரு தவறான முடிவுக்கு வருவது... நமக்கும் நமதூருக்கும் எவ்வித பயனும் அளிக்காது.
நமதூர் ஊடகங்கள் (குறிப்பாக KOTW) நகராட்சி அல்லது ஊர் சம்பந்த பட்ட நன்மையான ஏனைய விசயங்களிலும், தங்கள் சக்தியையும் / கடமையையும் தாண்டி, தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு 'அரிய பல' தகவல்களை நமக்காக சேகரித்து தருகின்றார்கள் என்பதனை மட்டும் என்னால் தெள்ளதெளிவாக உணர முடிகின்றது.
நம் தலைவியோ அல்லது நகரமன்ற உறுப்பினர்களோ தங்களுடைய கடமை தவறும் போது வழக்கம் போல் அதையும் எப்பொழுதும் சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
நமது சகோதரத்துவ செல்ல சண்டைகளை (கருத்து விவாதத்தை) கொஞ்சம் உறங்க வைத்து விட்டு, ஒற்றுமை என்ற அசூர பலம் கொண்டு நமதூரில் தலை விரித்தாடும் முக்கியமான பிரச்சனைகளை களைந்தெறிவோம். வல்ல ரஹ்மான் தௌபீக் செய்வானாக!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross