செய்தி: ஜித்தாவில் காயலர்கள் சங்கமம்! காயல் பெரியோர்களை சிறுவர்களாக மாற்றியது - காயல் நற்பணி மன்றத்தின் 27 வது பொதுக்குழு மற்றும் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அடடே சொல்லி வந்தும் சோத்துக்குப் போக முடியல்லியே...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[18 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18353
மன்றத்தின் பொதுக் குழு என்றாலே அறிக்கைகளும், உரைகளும், சிறப்பு விருந்தினர் வருகைகளும் என்றிருந்த காலம் போய், இன்று ஒன்று கூடி மகிழ்ந்து உற்சாக வெள்ளத்தில் முங்கிக் குளித்து புத்துணர்வைத் தரும் இது போன்ற நிகழ்வுகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.
என்ன? பிற நாடுகளைப்போல் திறந்த வெளிகளில் இக் கூடலை நடத்த இயலாது காரணம் சவுதி அரசாங்கம் அனுமதியளிக்காது. உள்ளரங்கத்திலேயே சும்மா கலக்கிட்டீங்க போங்க...!!!
முன்பெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளை பிற ஊர்களில் இருப்பவர்கள் வீடியோக் காஸட், வீடியோ சீடிகள் மூலம் தான் பார்க்க முடிந்தது. இன்று இணைய தளங்களின் உதவியால் அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்ப்பது போல் உடனுக்குடன் காண முடிகின்றது. அல்ஹம்ந்து லில்லாஹ்.
சொல்லி வந்தும் சோத்துக்குப் போக முடியாத கதை தான் என் கதையும். லீவில் ஊர் வந்து இருப்பதால் இதில் பங்கு கொள்ள இயலவில்லை! வருத்தம் தான்! ஹில்டன் ஹீரோக்கள், ஷரட்டன் தாதாக்கள், கோடை இடி முழக்கம் ஹுமாயூன் கபீர் காக்கா, தலைவர் - அஹமது முஹையித்தீன் காக்கா இன்னும் பல நண்பர்களைக் கான நேர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்.
குசும்பு:
அது என்ன? உலகலாவியா எல்லா நல மன்றத்திலும் சாப்பாடுதான் சக்கை போடு போடுது. காயல் களறிக்கறி இல்லாமல் ஒரு தீருமானமும் நிறைவேறாது போல! ஷமீம் மச்சான் உனக்கு சாப்பிட தூக்குப்போனி மூடிதான் கிடச்சுதா? மாப்பிள்ளெ! சிராஜ் (உம்முல் குரா) உன் முன்னால் இருக்கும் பருப்பு சட்டியில் குப்புற விழுந்து விடாதே! களப்பணியாற்றி களைத்து விட்ட சிங்கம் சட்னி மீரான் காக்கா வெறும் டீ மட்டுமே குடிப்பது மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross