Re:அபூதபீ கா.ந.மன்ற செயற்குழ... posted byVilack SMA (Hong Shen , Siacun)[18 April 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 18357
மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு " கல்வி வழிகாட்டு செயல்திட்டம் " நல்ல ஒரு முற்போக்கான யோசனை . 10 ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் , 12 th முடித்தவர்களுக்கும் தனித்தனியாக நடத்தலாம் . இன்றைய சூழ்நிலையில் எந்த மதிப்பெண் பெற்றாலும் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்ற நிலை . ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் , பொறியியல் படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களும் ஏதோ ஒரு உந்துதலால் ( பெற்றோர்களின் ஆசையாகவும் இருக்கலாம் ) பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பிறகு சிரமப்பட்டு , படிப்பை பாதியில் விட்டு கலை , அறிவியல் கல்லூரியில் சேர்வதை பார்க்கிறோம் . சரியான வழிகாட்டுதல் இல்லாமையே காரணம்.
எந்த படிப்பை படித்தாலும் , ஆர்வம் இருப்பின் சாதனை படைக்கலாம்.
ஒருமுறை ஜலாலியாவில் IAS , IPS படிப்பு பற்றிய நிகழ்ச்சியில் அவர்கள் சொன்னது , கல்வி அறிவில் பின்தங்கிய பீகார் மாநிலத்தில் இருந்துதான் அதிக அளவில் IAS , IPS வருகிறார்கள் . காரணம் , பள்ளிப்பருவத்திலேயே சரியான வழிகாட்டுதலால் , IAS IPS என்ற கனவு அவர்களின் மனதில் வேரூன்றி விடுகிறதாம் . கல்லூரியில் கலை , அறிவியல் பாடத்தையே தேர்வு செய்கிறார்களாம் . அப்போதுதான் IAS , IPS படிப்பிற்கு பயிற்சி செய்ய முடியும் , சுலபமாக தேர்வாக முடியும் என்று காரணம் சொல்கிறார்களாம் .
ஆக , எந்த துறையிலும் மாணவர்களை சிறந்த வல்லுனர்களாக ஆக்க முடியும் , தேவை , சரியான வழிகாட்டுதல் ஒன்றே . அபுதாபி காயல் நல மன்றம் இதை செய்ய முன்வந்ததற்கு மிக்க நன்றி .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross