MLA/MP தொகுதி வளர்ச்சி நிதிகள்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[18 April 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18372
அரசு நூலக கட்டிட விரிவாக்கத்திற்காக பாடுபடும் அத்தனை நல்லுலங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இப்பணிக்கான பொதுமக்களின் பங்களிப்பு 50 விழுக்காடுகளுக்கு மேலிருப்பின், பங்களிக்கும் சமூக ஆர்வலர்கள் மூலமே அரசு நூலகத்தை கட்டலாம் என்பதற்க்காக... மொத்த தொகையின் 50 % ஆகிய 7 லட்சத்தை பொதுமக்களிடம் வசூல் செய்வதை விட 1 /3 பங்கு அதாவது 4 .5 லட்சத்தை செலுத்தி அரசை முறைப்படி கட்ட சொல்லலாம். எது நமக்கு குறைந்த பொருச்சுமையை தருகின்றதோ அதுவே எல்லோருக்கும் ஈசியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அதே நேரத்தில், நாமே முன் நின்று கட்டினால் சற்று தரமாக இருக்கும் என்பதனை ஒத்து கொள்கிறேன்...அதற்காக நாம் 2 .5 லட்சம் அதிகமாக வசூல் பண்ணி கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஏற்கனவே நமது தலைவி அவர்கள் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வாடகை இடம் மற்றும் நிலம் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மட்டுமன்றி இது போன்று 'தன்னிறைவு திட்டம்' மூலம் இன்னும் பல பணிகள் வருங்காலத்தில் நமதூரில் நிறைவேற்ற படவேண்டிய சூழல் வரலாம். அதற்க்கும் நாம் பொது மக்களிடம் தான் இது போன்று நிற்க வேண்டும். அதில் சிரமம் (பொருட்சுமை) வரலாம்.
அக்டோபர் 23, 2011 அன்று 25 லட்சம் ரூபாய் செலவில் நகர தனவந்தர்களின் அனுசரணையுடன் மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் இலவசமாக அளிக்கப்பட்டது. இப்பொழுது ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வாடகை இடம் மற்றும் நிலம் தேவை என்று வேண்டுகோள் வேறு. இது எத்தனை லட்சம் செலவாகும் என்பது தெரியவில்லை. வாடகை இல்லா கட்டிடம் தரவும் 50 சென்ட் நிலம் ஒதுக்கவும் கோமான் ஜமாஅத் ஒப்புக்கொன்டிருக்கிறார்கள் என்றாலும் இவைகளை எம்.பிக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி அல்லது எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி அல்லது நகராட்சி நிதி (ஒரு வேலை அதக்கான வாய்ப்பு / நிதி இருந்தால்) மூலம் நிறைவேற்ற ஒரு வேளை முயற்சிகள் எடுக்க பட்டதா என்று தெரிய வில்லை.
நல்ல பல திட்டங்களை இந்நிதியை பயன்படுத்தி நிறைவேற்ற முயற்சிக்கலாம். அதுவே நம்முடைய முதல் முயற்சியாக இருக்க வேண்டும்.
இது போன்ற நல்ல திட்டங்கள் அனைத்தும் மக்கள் பண உதவியுடன் தான் அமைய வேண்டுமா??? ஒரு வேளை நமது MLA /MP தொகுதி + நகராட்சி வளர்ச்சி (?) நிதிகள் முழுமையாக பயன்படுத்த பட்டிருந்தால் அல்லது அந்நிதியை பயன்படுத்துவதட்க்கு தகுதியானவைகள் அல்ல
என்றால் கூட ஏற்றுகொள்ளலாம். ஆனால் அவைகளே முழுமையாக பயன்படுத்த படவில்லை என்பதே என் ஆதங்கம்.
2009-10 நிதியாண்டில் நமது நாடாளு்மன்ற எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியாகிய 'இரண்டு கோடியில்', நமது MP S. R. ஜெயதுரை அவர்கள் வெறும் 95 லட்சம் மட்டும் தனது தொகுதிக்காக செலவு பண்ணியிருக்கிறார். ஆனால் மற்ற சில எம்.பி (குறிப்பாக கனிமொழி போன்றவர்கள்) ஒதுக்கப்பட்ட இரண்டு கோடிக்கும் அதிகமாக செலவு செய்து இருக்கிறார்கள். அப்படியென்றால் நமது தொகுதியில் நிறைவேற்ற தகுதியான நல்ல திட்டங்களோ அல்லது தேவை இல்லையா என்று புரிய வில்லை. 2011-12ம் நிதியாண்டிலிருந்து எம்.பிக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தபட்டுள்ளது. 2 கோடியே நம்மால் முழுமையாக (?) செலவழிக்க துப்பில்லையென்றால்... 5 கோடியாக அநேகமாக உறங்கி கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதற்க்கு காரணம் முறையான திட்டங்களோ அல்லது நம்மை போன்ற தேவையுள்ளவர்கள் எம்.பி ஜெயதுரை அவர்கள் வீட்டு கதவை தட்ட வில்லையென்று நினைக்கிறேன்.
அடுத்து, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இந்த ஆண்டில் ரூ.470 கோடி ஒதுக்கீடு. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கிட்டத்தட்ட இரண்டு கோடி கிடைக்கும். அனிதா அவர்கள் இதற்க்கு முன்னர் தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை என்ன செய்தார் அல்லது எவ்வளவு செலவு செய்தார் என்பது தெரிய வில்லை. இருப்பினும் தற்போதைய தொகுதி மேம்பாட்டு நிதியாவது முறையாக முழுமையாக பயன்படுத்த போகிறார்களா என்று தெரிய வில்லை.
நமது எம்.பி மற்றும் எம்எல்ஏ வீட்டுக்கு ஒரு நடை தான் போயிட்டு வாங்களேன்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross