Re:நகராட்சிக்கு புதிய கட்டிட... posted bySalai.Mohamed Mohideen (USA)[21 April 2012] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 18404
“இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகப் போறாங்க... துவா செய்யுங்க”. எதனால் பணியாற்ற பிடிக்காமல் என்று கொஞ்சம் விரிவா / தெளிவா சொல்லுங்க சார்.
ஊழல் எதுவும் பண்ண முடிய வில்லையே என்பதற்க்காக 'ட்ரான்ஸ்ஃபர்' என்ற option நம் கவுன்சிலர்களுக்கு இல்லாததினால் , அவர்களில் எவரும் பதவி விலகி... 'நல்லவர்களுக்கு' வழிவிடும் ஐடியா எதுவும் இருக்கிறதா???
நல்லவர்கள் மட்டும் பணியாற்றட்டும்... மற்றவர்கள் 'விடை' பெறட்டும் என்று எல்லோரும் துஆ செய்கின்றார்கள் என்பதனை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.
எதோ தங்கள் அரசியல் கட்சி பொதுக்குழு கூட்டம் (வீட்டு விசேசம்) நடப்பது போல, ஜன்னலை சாத்துங்கள் என்று கூறும் நம்ப கவுன்சிலர்களா அக்கூட்டத்தை வீடியோ எடுத்து இணைய தளங்களில் 'போட' அனுமதிக்க போகின்றார்கள்???
ஏற்கனவே தலைவி மீதும், 'இவர்கள்' மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணை ஊத்திக்கொண்டு திரியும்... நம் மீடியா மீதும் பயங்கர 'காண்டில்' கூட இருப்பார்கள். யாருக்கு தெரியும்... 'எளவு காத்த கிளி போல' எப்படா வாய்ப்பு கிடைக்கும் இவர்களை யெல்லாம் பலி வாங்கலாம் / ஒழித்து கட்டலாம் என்று சூழ்ச்சி கூட செய்து கொண்டிருப்பார்கள்.
போன தடவை (அல்லது முந்திய கவுன்சிலர்கள்) மாதிரி இந்த தடவை நம்மால் 'நிறைய' சம்பாதிக்க முடியவில்லையே என்ற ஒரு ஏக்கம் ஒரு சிலருக்கு (?)இருக்கலாம். என்னதான் இவர்கள் கூப்பாடு போட்டாலும், பண பலம் உள்ள ஒரு சிலரின் ஆசிர்வாதம் (blessings ), தங்களுக்கு இருக்கும் வரை 'தங்களை' யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மமதையில் இருக்கும் இவர்களை... விபரம் தெரிந்த அன்பர்கள் வேணுமென்றால் இங்கே அடையாளம் காட்ட தயங்கலாம்... ஆனால் 'காலம்' அவர்கள் யார் அவர்களை ஆட்டுவிக்கும் சக்தி எது / யார் என்பதனை மக்களுக்கு நிச்சயம் இனம் காட்டும். ஒரு வேளை பூலோகம் விட்டாலும் மேலோகம் இவர்களை விட்டுவிடவா போகின்றது?
அது என்னமோ தெரியவில்லை. இந்த நகராட்சி தேர்தல் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எதோ ஒரு பண பலம் நல்லவர்களையும் தீய வழியில் அழைத்து செல்ல பயன்படுத்தபடுகின்றது என்பதனை மட்டும் பல கமனட்களின் வாயிலாக உணர முடிகின்றது.
வல்ல இறைவன் ஒரு குடும்பத்தில் 'ஒருவருக்கு' மட்டும் அதிக பணத்தை 'அளக்கிறான்' என்றால், அவரை கொண்டு அவருடைய குடும்பம் முன்னேறவும் அவருடைய உற்றார் உறவினர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக. அது போல், ஊரில் ஒரு சிலருக்கு மட்டும் வல்ல ரஹ்மான் நல்லதொரு பரக்கத்தை அதிக செல்வத்தை தந்திருக்கிறான் என்றால்... அவர்களை கொண்டு அவர்கள் குடும்பமும், முஹல்லாவாசிகளும் அது போல ஊர் மக்களுக்கும் தங்களால் முடிந்த நன்மையை செய்வதகாகத்தான். ஊருக்கு / ஊர் மக்களுக்கு நன்மை செய்ய முடிய வில்லை என்றாலும் கூட பரவா இல்லை... தீமைக்கு ரப்பு தந்த செல்வத்தை உரமாக்காதீர்கள். ரப்பு தந்த அளவிலா செல்வத்திட்க்கும் மறுமையில் கேள்வி கணக்கு இருக்கிறது என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்து நடப்போமாக!!
இறுதியாக....நகர தெரு விளக்குகள் ஊழல் விசயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைதான் என்ன???
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross