செய்தி: நகராட்சி தணிக்கை அறிக்கை: குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான உதிரி சாமான்கள் வாங்கியதில் 2.5 லட்சம் ரூபாய் முறைக்கேடு! (பாகம் 1) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகராட்சி ஊழல்கள் (தொடர்ச்சி) posted bySalai Mohamed Mohideen (USA)[23 April 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18457
நமது இணைய தளம் தங்களது சாட்டையை முழுவீச்சில் சுழற்ற ஆரம்பித்து விட்டார்கள் போல் தெரிகிறது.
இன்னும் என்னென்ன நாற்றம் எடுக்க போகின்றதோ. இத்தனை வருடத்தில் எவ்வளவோ கோடி ஊழல்கள் நடந்தும் எதுவுமே வெளிவராத நிலையில்... பாவம் ஒருத்தர் மட்டும் ஏதோ 'செக்' மோசடியில் சப்பையாக (?) சிக்கி 'டாக் ஒப் தி டவுன்' ஆக பேசபட்டார்.
இது விசயத்தில் நமது 'மெகா' அமைதி காண்பிக்கிறதே. இவைகளெல்லாம் அவர்கள் எல்லைக்குள் வரவில்லையோ? ஒரு வேளை மெகா மற்றும் மற்றும் தன்னார்வ சமூக நல அமைப்புகள் நம் இணைய தளம் வெளிக்கொணரும் ஊழல்கள் உண்மையாக இருப்பின், அவர்களுடன் சேர்ந்து... நீங்களும் சாட்டையை சுழற்றினால் தான் ஊழல் பெருச்சாளிகளுக்கு சரியான சவுக்கடி கிடைக்கும்.
அதுவரை, நீங்கள் தோண்டித்துருவி வெளிக்கொணரும் ஊழல்கள்... அதனை புரிந்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப் படாதவரை, இவைகளைனைத்தும் 'விழலுக்கு இறைத்த நீர்' மற்றுமன்றி வாசகர்கள் உணர்வுகளைத் தூண்டும் (BP) வெறும் செய்திகள் / தொடர்கள்... அவ்வளவுதான்.
மேலும் இது விசயத்தில் சம்பந்த பட்டவர்கள், என்னதான் நீங்கள் ஊழல் குற்ற சாட்டுகளை வெளிக்கொனர்ந்தாலும், வாசகர்கள் கருத்து என்ற பெயரில் குமுறினாலும்... 'நம் மீது எவர் நடவடிக்கை எடுக்க முடியும் அல்லது எடுக்க போகின்றார்கள்' என்று மிகச்சாதரணமாக இருப்பார்கள் அல்லது இதை பொருட்படுத்தவே மாட்டார்கள்.
ஒருதலை பட்சமின்றி, இது போன்ற சாட்டையை, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நகர்மன்ற தலைமையிலும் ஏதாவது ஊழல்கள் (இது வரை எதுவும் நடந்துள்ளதா???) நடந்தாலும் சுழற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.
"தீயது நடந்தால் கைகளால் தடுங்கள்; இல்லாவிட்டால் வாயால் தடுங்கள்; அதுவும் முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள். இதுதான் ஈமானின் கடைசி நிலை" என்ற நபிமொழிக்கு ஏற்ப செயல்படுங்கள்
தணிக்கை அறிக்கையை ஆதாரமாக கொண்டு, இது போன்றவர்களை அவர்களின் பெயர், வகித்த பதவிகளை தைரியமாக வெளியிட்டு விட்டீர்கள். ஆனால் திரை மறைவில் புது பைப் / கரண்ட் கனக்சன் ரோடு கான்ட்ராக்ட் என்று லஞ்சத்தை அன்பளிப்பாக கேட்க்கும் 'மற்றவர்கள்' மீது சாட்டையை சுழற்ற போவது விக்கி லீக்ஸ் போன்று நமது இணைய தளங்களா அல்லது சமூக அமைப்புகளா அல்லது பொது மக்களா... பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஹிஜாஸ் மைந்தன் பாணியில் ஒரு குசும்பு :- ஏற்க்கனவே சில மணி நேரங்கள் தான் கரண்ட் இருக்கின்றது... எப்பவாவதுதான் தண்ணியும் வருகின்றது. அநேகமாக இளையதள நிர்வாகிகள்/அங்கத்தினர்கள் வீட்டிற்க்கு இவைகள் முற்றிலுமாக இன்று முதல் வராமல் போகலாம் (தடை செய்ய படலாம்). ஏன், தேவையில்லாத சில மெயில்கள் அலைபேசி அழைப்புகள் கூட வரலாம். நீங்கள் உடனே அதற்க்கும் இச்செய்தியின் வெளிப்பாடே என்று தவறாக மட்டும் எண்ணி விடாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross