செய்தி: நகராட்சி தணிக்கை அறிக்கை: குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான உதிரி சாமான்கள் வாங்கியதில் 2.5 லட்சம் ரூபாய் முறைக்கேடு! (பாகம் 1) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாற்காலிக்கு போட்டி போடும், நாங்கெல்லாம்??? posted byFirdous (Colombo)[24 April 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18464
கடந்த நகராட்சியில் தலைவர், உப தலைவர் நகர்மன்றதிற்கு வரவில்லையென்றால், நகரத்தந்தை நாற்காலிக்கு போட்டோ போட்டிதான்! தங்களது வேலையை பார்கிறார்களோ இல்லையோ, அதிகாலையில் வந்து நாற்காலியில் அமர்ந்து கொள்வார்களாம். இப்படி அடித்து கொண்டவர்கள்தான் உறுப்பினராக இருந்துள்ளார்கள். நான் மிகை படுத்தி கூறவில்லை. இதை கண்ணுற்ற எனது நண்பன் மூலம் அறிந்து கொண்டேன்.
மதிப்பிற்குரிய முன்னால் உறுப்பினர் திருதுவராஜின் முயற்சியாலும், தலைவர் அவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்கி திருதுவராஜ் (EB யில் வேலைப்பர்த்தவர்) அவர்கள் தணிக்கை செய்ததாலும் கடந்த நகரமன்றத்தின் இறுதி காலகட்டத்தில் லைட் செலவுகள் 4.5 லட்சமாக குறைக்கப்பட்டது. முன்னால் தலைவர் அப்பழுக்கற்றவர். நகர்மன்றத்தை சூரையாடியவர்களுக்கு மத்தியில் தனது சொந்த பணத்தை நகர்மன்ற செலவுகளுக்காக செலவு செய்தவர். அப்படிப்பட்ட தலைவர் நகர்மன்றத்தில் அதிகமாக வருகை புரிந்திருந்தால் எவ்ளவோ ஊழல்கள் நடக்காது வண்ணம் தடுதிருந்து இருக்கலாம். நமதூர் மக்களின் வரிப்பணம் விரயமானதையும்!
தற்போதைய நகர்மன்ற தலைவர்கோர் வேண்டுகோள். நீங்கள் தவறாது நகர்மன்றதிர்க்கு வருவதை வலை ஊடக மூலமாக அறிகின்றோம். அதேபோன்று ஊழலை ஒழிப்பதில் முனைப்பாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் கொஞ்சம் கண்ணயர்ந்தாலும் November 31, February 30 க்கு பொருள்கள் வாங்கியதாக ஏட்டில் பதியப்படும். கவனம் தேவை!
ஏனென்றால் தற்போதைய உறுபினர்களில் பெரும்பாலோர் உப தலைவரை தேர்ந்தேடுப்பதர்க்காக ஜனநாயகத்தை அடகு வைத்தவர்கள் என்பது ஊரறிந்த இரகசியம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross