அமைதியின் திரு உருவம் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றது ! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[27 April 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 18559
ஒரு மனிதனின் வாழ்வின் சிறப்பு அவனது முடிவில் தெரியும் என்பார்கள். சாதாரண எளிய வாழ்வை மேற்கொண்டவர்கள் . இளஞ்சிரிப்பு எப்போதும் முகத்தில் தவழும். பேச்சில் அமைதி...நிதானம் ...தெளிவு . நடையிலும் கூட மிருதுவான தன்மை வெளிப்படும். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை சகஜமாக பழகக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் . தேவையானவர்களுக்கு தருணத்தில் கை கொடுத்து உதவி புரிபவர்கள். இப்படி அவர்களின் நற்குணத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். இறை இல்லத்தை பராமரிக்கும் பணியை சிரம் ஏற்று செம்மையாக செயல் பட்டவர்கள் .அல்லாஹ்வின் அருளை அழகிய முறையில் தானும் பெற்று மற்றவர்களையும் அதில் ஈடுபாடு கொள்ளச் செய்பவர்கள் .
என் சகோதரர் சென்னையில் கிட்னிக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் , நான் அவர்களோடு அறிமுகம் ஆனதோடு மட்டும் அல்லாது, நல்ல ஒரு நெருக்கத்தையும் பெற்ற அந்த தருணத்தில், எனக்கு ஒரு தகப்பனார் போன்றே, தகுந்த சமயத்தில் நல்ல பல அறிவுரைகள்...ஆலோசனைகளை வழங்கி என் தனிமையை போக்கி ..கவலையை கலையச்செய்து எனக்கு ஒரு சுறு சுறுப்பை ஏற்படுத்தியவர்கள். கடைசிவரை அன்போடு , மருமகனே ...என்று வாய் நிறைய கூப்பிட்டு , என்னை மகிழ்வித்த அந்த மாமனிதர் இன்று அல்லாவின் அழைப்பை ஏற்றார்கள். ..இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .
வல்ல ரஹ்மான் , அன்னாரின் மண்ணறையை சுவனத்து தென்றலை சுவாசிக்கும் சுகந்த இடமாக ஆக்கி வைப்பானாகவும் !அவர்களின் நல்ல அமல்கள் அனைத்தையும் அங்கீ கரித்து,
பெருமானார் நபிகளாரின் சபா அத்தோடு , உயரிய சுவனப் பதி அடையச் செய்வானாகவும் . அன்னாரின் இழப்பை தாங்கும் அழகிய பொறுமையை , மர்ஹூம் மதார் மாமாவின் குடும்பத்தார் அனைவருக்கும் வழங்குவானாகவும், ஆமீன் ..ஆமீன்...யா ரப்பல் ஆலமீன்.
மிகவும் வருத்தத்துடன் ,
K.V.A.T.குடும்பத்தினர்
காயல்பட்டினம் மற்றும் கத்தார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross