Re:குத்பா பெரிய - சிறிய பள்ள... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244)[28 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18575
அஸ்ஸலாமு அ;லைக்கும்! ஹாஜி எஸ் ஏ ஷெய்ஃக் மதார் அவர்கள் மரணம்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
என் அன்பிற்கினிய 5௦ வருடகால நன்பர் ஹாஜி ஷேக் மதார் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து கவலையும் திடுக்கமும் அடைந்தேன் . பழகுவதற்க்கு ள்ள பண்பான ஒரு நல்ல மனிதர். கழா கத்றின் கட்டுப் பாட்டில் சபூற் செய்து துஆ செய்து கொள்கிறேன். அல்லாஹும்மங் ஃபிற் லஹூ வர்ஹம்ஹூ. குடும்பத்தார் களுக்கும் குறிப்பாக தம்பி மத்தீன் அவர்களுக்கும் எனது இரங்கலையும் தெரிவித்து உங்கள் அனைவருக்கும் சபூற் எனும் பொறுமையும் தந்தருள 2 ரகஅத்து நஃபிலும் தொழுது துஆ வும் செய்கிறேன்.. நீங்களும் இவ்விதமே துஆ செய்து கொள்ளுங்கள்.
1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
மைய்யித்தின் இஸ்லாமிய சட்ட திட்டங்கள். (நம் தமிழ் நாட்டில் நடப்பவை)
மையித்துக்கு ஃபற்ழ் நாலு. 1. மரணம் உறுதியான உடன் குளிப்பாட்டுவது. 2வது. உடன் கஃபனிடுவது. 3வது. உடன் தொழவைப்பது. 4வது. உடன் அடக்கம் செய்வது. இந்நாலு பர்ழையும் தொடர்ந்து செய்ய வேண்டியதும் ஸுன்னத்தாகும்..
1. மையித்தைக் கஃபனிட்டபின் ” தீதாற் ” என்னும் மக்கள் பார்வைக்காக வைப்பதில் மையித்தை அடக்க சுணக்குவதில் ரெம்ப எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது கண்டிப்பாக இருக்கவேண்டும் . மையித்தை கஃபனிட்ட பின்பு சரீ அத்தில் சொல்லப்பட்ட காரணம் இன்றி “ தீதாற் “ என்ற மக்கள் பார்வைக்காண காரியத்துக்காக சுணக்குபவர்களுக்கும்,அதற்காகப் பொருந்திக் கொள்பவர்களூக்கும் .அதனை தடுக்காதவர் களுக்கும் மிகுந்த குற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
மற்ஹூமின் வீட்டுக்காறர்கள் முதன் முதலில் மிக முக்கியமாக செய்யவேண்டிய அமல்கள்
ஒருவர் மரணித்தது உறுதியானால் உடனிருப்பவர்கள் 1.உடனடியாக மையித்தின் இருகண்களின் இமைகளையும் கசக்கி மூடவேண்டும்.
2.நாடியைச் சுற்றி தலையையும் சுற்றி ஒரு (நாடிக்கட்டு)கட்டவேண்டும்.
3.கைகால் களை ஓரிரு தரம் நீட்டி, மடக்கி கையை தக்பீற் கட்டுவது போல் தொப்புழின் அடுத்தாற்போல் நெஞ்சுக்குக் கீழ் இருக்கும்படி வைக்க வேண்டும்.
4. கால்களை ஒன்று சேர்த்து இருகால் பெரு விரல்களையும் ஒன்றிணைத்து லேசாக ஒரு கட்டு
பக்கம் 2
கட்ட வேண்டும் இப்படி செய்வது மையித்தின் உடல் உரு மாறாமல் அழகாக இருக்கும்.
5. நார் கட்டில் போன்ற உயரமான (கீழே தண்ணீர் வடியும் படியான அதிகமான ஓட்டைகள் உள்ள) ஒரு கண் கட்டிலில் மையித்தை (தலை கிப்லா வுக்கு எதிர் திசையிலும்) கால் கிப்லா பக்கமும் அமையும் படியாக கிடத்தி வைக்கவேண்டும்.
6.கசப்பு மாற்றும் முறைகளை தெரிந்து, அதனை செய்வது மிக மிக நல்லது.
7.ஒரு (வெள்ளைத்) துணியால் உடல் பூரா மூடி, தேவைக்கு மட்டும் திறந்து பார்க்கும் அமைப்பில் வைக்க வேண்டும்.
8.கட்டிலின் கால் களின் வழியே பூச்சி.எறும்புகள் ஏறி மய்யித்துக்கு இடஞசல்வராமல் தடுக்கவேண்டும். அதற்காக நாலு சிறு தட்டைகளில்85 தண்ணீர் ஊற்றி அதினுள் கட்டிலின் கால்களும் உள்ளிலிருக்கும்படியாக அமைக்க வேண்டும். (இக்காலங்களில் டெட்டோல்,டெட்டெர்ஜெண்ட்,கெமிக்கல் மருந்துள்ள- சாக் பீஸ் களும், ப்ரெஷ்ஷர் ஸ்ப்ரேகளும்உள்ளன) .
9.துர்வாடைகளிருந்தால், வரும் மக்களின்
வெறுப்பான ,அதிருப்தியினை போக்க மையித்து வீட்டாரின் வசதிப்படி சாம்பிரானி .சந்தனப்புகை ஊதுபத்தி றூம்- ஸ்ப்றே இவைகளை பாவிக்கலாம்.
10.நமக்கு நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு உடனடியாக நேரில் வெப் ஸைட், அல்லது மொபைல்,ஸெல் ,டெலிஃபோன் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.
11.அடக்கும் நேரம், 12.அடக்கும் இடம் 13.தொழ வைக்கும் இமாம்,இவைகளை மஷூறா அடிப்படையில் முடிவெடுத்து. பின் மஹல்லா. ஊர், உலக மக்களுக்கும் அறிவிப்பு செய்யலாம்.
14. அடக்கப்படும் மைய வாடியின் புனிதத் தண்மைகள் அறிந்த பின், அதன் நிர்வாகிகள் அனுமதி பெறவேண்டும்,(இக்காலங்களில் ஹறாமான ஆக்ரமிப்பு செய்யப்பட்ட மையவாடிகளும் ஊரில் காணப்படுகிறது)
15. அனுபவமிக்க கஃபன் உடை கிழிப்பவர்கள்,குறிப்பாக இதற்கென ஏற்பாட்டில் இருக்கும் மு அஸ்தின் மார்கள்,மையித்து தொழுகை தொழவைக்கும் இமாம்கள், குழி வெட்டும் நஃபர்கள் இவர்களுக்கும் முறையானபடி உடனடி முன் அறிவிப்புக்கள் செய்து அழைத்துவிட விடவேண்டும்.
15.A.இக்காலங்களில் பள்ளி லவ்ட் ஸ்பீக்கர், தந்தி.கடிதம்,கேபிள் T.V., இண்டெர்நெட், இவகளை தம் தம் வசதிப்படி அறிவிப்புகள் செய்ய உபயோகம் பண்ணலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக மையித்துக்கு சம்மந்தப்பட்ட மேற்சொன்ன
ஃபற்ழுகளையும் மற்றும் அநேகமான, சுன்னத்தான அமல்களையும் முறையான உலமாக்களிடமோ, முறைப்படி எழுதிய புத்தகங்களைப் பார்த்தோ ஒரு முஸ்லிம் விவரமாக அறிந்து கொள்வது ஃபற்ழ் எனும் கட்டாயக்கடமையாகும்.
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.ِ
4:78 أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ 4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ 20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம், இவ்வண் :;- மர்ஹூம்.தைக்கா முத்துவப்பா ஆலிம் அவர்கள் குமார்ர். தைக்கா மத்துல்லாஹ்/காயல்பட்டணம்.போன்280852=(இதனை காப்பி(ஜெராக்ஸ்)எடுத்து மற்றவர்களுக்கும் விநியோகம் செய்து ஃதவாபை பெறுங்கள்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross