Re:நகரில் ப்ளாஸ்டிக் சாலை அம... posted bymackie noohuhambi (kayalpatnam)[04 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18660
நமது நகர்மன்றத்தில் அவர் எடுத்துவைத்த கருத்துக்கள் புதுமையானவை. சுமார் இரண்டு மணி நேரம் நின்றுகொண்டே செயல்விளக்கம் கொடுத்தார். அவர் போட்டுக்காட்டிய குறும்படம் வியக்க வைத்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்கு வியூகம் வகுத்து தருகிறார்.
தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் சாலை அமைப்பதானால் வெளி நாட்டிலிருந்து பிளாஸ்டிக் இறக்குமதி செய்யவேண்டும் போல் தெரிகிறது. 2002இல் ஆரம்பித்த அவரது வெற்றிப் பயணம் பத்து வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் நமதூருக்கு அறிமுக பயணமாக மிக தாமதமாக வந்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் வங்கி BANKRUPT ஆகினால் நமதூரில் அதன் அதிரடி அன்று விடியு முன்னமே தெரிந்து விடுகிறது. அப்படியிருக்க மதுரையில் இருக்கும் இந்த தொழில் நுட்ப வல்லுநர் நமது கண்களுக்கு படாமல் இருந்தது ஆச்சரியமே. நமது நகரமன்ற நிர்வாகம் அவரது திறமையை பயன்படுத்தி கொள்ளும் என்று நினைக்கிறோம்.
சாதனையாளர்கள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கபடுகிறார்கள். அவர் போன்ற சிந்தனையாளர்கள், மாற்றி சிந்திக்க கூடியவர்கள் நம்மில் எவ்வளவோ பேர் இருப்பார்கள்.அரைத்த மாவையே அரைக்காமல் புதிய கோணத்தில் சிந்திப்பார்கள்." NECESSITY IS THE MOTHER OF INVENTION". அவர்களை இனம் கண்டு ஊக்கம் கொடுத்தால் நமதூரிலும் சாதனைகள் நிகழ்த்த முடியும்.இவை எல்லாம் இறைவன் எனக்கு அருளியது என்ற அவரது தாரக மந்திரம் நம்மை வியக்க வைக்கிறது.
சுலைமான் நபி சொன்னது போல் "இது எனது இறைவனின் அருட்கொடை" என்று நாம் எல்லோரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நமது செயல்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும். நமது வெற்றிக்கும் புகழுக்கும் அவனே காரணம் என்று மனதார அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். INNAL HAMDHA LILLAAH, LAA HAWLA VA LAA QUWWATHA ILLAA BILLAH. வாழ்த்துக்கள் டாக்டர் வாசுதேவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross