Re:சிங்கை கா.ந.மன்ற செயற்குழ... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 May 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18706
மாஷா அல்லாஹ்..அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பித்து விட்டார்கள்.. மக்களுக்கு நன்மையையும், அவர்களுக்கு வல்ல ரஹ்மானிடம் நல்-அருளையும்.
மரியாதைக்குரிய ஆலிம் அஹ்மத் அப்துல் காதிர் அவர்கள் (எனக்கு திருமணம் நடத்தி வைத்தவர்கள் - தேங்க்ஸ்), கூற்று முற்றிலும் உண்மை. பல குடும்பங்கள் தங்களுடைய உணவு தேவைகளை கூட மற்றவர்களிடம் கேட்க வெட்கப்படுகிறார்கள். சிங்கை மன்றம் அவர்களை பொறுக்கி எடுத்து தான் சமையல் உதவிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது. மிக்க மகிழ்வு.
ஒருமுறை, என் தாயார் சில பொருளையும், பணத்தையும் ஒரு குடும்பத்திற்கு கொடுக்கச்சொல்லி என் மகனிடம் கொடுத்தார்கள். நான் என் மகனை அழைத்துச்சென்று, அவன் காட்டிய வீட்டிற்கு அருகில் நிறுத்தினேன்.
ஒரு வீட்டின் கதவை அவன் தட்டியதும் எனக்கு அதிர்ச்சி. உடனே மகனை பட படப்போடு திரும்ப அழைத்து, "என்ன இந்த வீட்டை தட்டுகிறாய், இது பணக்கார வீடுடா..".
"இல்லை வாப்பா. இந்த வீடு தான்.. நோன்பில் கூட நான் இங்கு பணம் கொண்டு வந்து கொடுத்துள்ளேன்..சரியான வீடு தான்"
எனக்கு படபடப்பு, அதிர்ச்சி, ஆச்சரியம் கலந்த கவலை ஆகியவை நீங்காமல், என் தாயாருக்கு போன் போட்டு விசாரித்து உறுதிப்படுத்தித்தான் மகனின் கையை விட்டேன்.
பின்பு விசாரித்ததில் அவர்களின் பெரிய வீட்டிற்கும், வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. என் மகனுக்கு பதிலாக நானோ, என் குடும்பத்தில் யாருமோ சென்று கொடுத்தால், வெட்கப்பட்டு, இந்த வீடு இல்லை என்று வாங்க மறுத்து விடுவார்களாம். என் தாயார் அல்லது என் மகன்.. இருவர் மற்றும் தான் செல்லனும்.
இப்படி பல கண்ணீர் கதைகளுடன் கூடிய குடும்பங்கள் அதிகம் அதிகம் உண்டு நம்மிடையே.
எல்லாம் வல்ல அல்லாஹ்.. அனைவர்களுடைய கஷ்டங்களையும் போக்கி, நிம்மதியான வாழ்வை கொடுப்பானாக..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross