செய்தி: ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை படிப்படியாக 10 ஆண்டுக்குள் நிறுத்தவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வசதியுள்ளவர்களுக்குத் தானே வாய்ப்பும் ,கடமையும். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[09 May 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18752
முன்னொரு காலத்தில் ஹஜ் யாத்திரைக்காக நம்மவர் பெரும்பாலானோர் மும்பையிலிருந்து கப்பலில் பயணித்து வந்தனர்.இதனால் கால தாமதம், கடல் நோய்,எனப் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் அரசாங்கம் ஜித்தாவுக்கு கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது.நடுத்தர மக்கள் விமானங்களில் அதிக தொகை கொடுத்து பயணிக்க இயலாமல் போகவே அரசாங்கம் டிக்கெட் வகைக்காக மானியம் வழங்கி ஓரளவுக்கு ஹாஜிகளின் சுமையைக் குறத்தது. இதுவே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது
இந் நிலையில் சங்பரிவார் மற்ரும் முஸ்லிம் விரோத அமைப்புகள் இந்து புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் பலவகை போராட்டங்களில் குதித்தது.
எது எப்படியோ? வசதி படைத்தவர்களுக்கும்,கடன் சுமை இல்லாதவர்களுக்கும், உடல் பலம் படைத்தவர்க்கும் தான் ஹஜ் கடமை! இப்பல்லாம் ஹஜ்,உம்ரா செல்வது தன் பெருமையை வெளிப்படுத்துவதற்காகவே எனத் தோன்றுகின்றது.
அரசு மானியத்தைக் குறைத்தலும், நிறுத்தினாலும் ஹஜ் யாத்திரைக்குச் செல்வோர்ரி எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவத்தில்லை. காரணம் ஹாஜிகள் ஏழையாக மாட்டார்கள் எனும் மெய்யான புனித வேதத்தின் வரிகள் ஒருபோதும் பொய்ப்பத்திலை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross