செய்தி: ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை படிப்படியாக 10 ஆண்டுக்குள் நிறுத்தவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட... posted bySalih (Chennai)[09 May 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18762
அரசு வழங்கும் மானியம் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளவரை அடைவதில்லை என்பது சரியான வாதமாக தெரியவில்லை.
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள கட்டணத்தை ஹஜ் குழு நிர்ணயம் செய்கிறது. அக்கட்டணத்தில் - மக்காவில் தங்குவதற்கான செலவு, மதினாவில் தங்குவதற்கான செலவு, சவுதி நிறுவனங்கள் அரபாத் போன்ற இடங்களில் தங்க/பயணிக்க கேட்கும் தொகை ஆகியவை - அடங்கும். அத்தொகைகள் - சவுதி நிறுவனங்கள் என்ன தொகையை கேட்க்கின்றனவோ, அதனையே - ஹஜ் குழு - பயணியரிடம் இருந்து வாங்கும். ஆனால் விமான டிக்கெட் விசயத்தில் அப்படி அல்ல.
விமான டிக்கெட்டை பொறுத்த வரை - இந்திய ஹஜ் குழு ஒவ்வொரு பயணியரிடம் இருந்து ரூபாய் 12,000 மட்டுமே வாங்குகிறது. அதாவது சென்னையில் இருந்து ஜித்தாஹ் செல்ல, மீண்டும் ஜித்தாவில் இருந்து சென்னை திரும்ப. ஆனால் விமானப்பயணத்திற்கு இவ்வளவுதான் செலவாகுமா?
இது எவ்வாறு சமாளிக்கப்படுகிறது என்றால் - விமான சேவை பொறுப்பை ஏர் இந்தியா நிறுவனம் பார்த்துக்கொள்கிறது. அது ஒவ்வொரு டிக்கெட் விலையை சுமார் 35,000 என நிர்ணயிக்கிறது. இந்திய ஹஜ் குழு - தான் பயணியரிடம் இருந்து பெற்ற 12,000 ரூபாயை டிக்கெட் வகைக்கு ஏர் இந்தியாவிற்கு கொடுக்கிறது. மீதி ரூபாயை - பயணியர் சார்பாக அரசாங்கம் - ஏர் இந்தியாவுக்கு வழங்குகிறது. இது தான் மானியம்.
35,000 சரியான தொகையா என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. 100,000 பயணியருக்கு மேல் ஏற்றிச்செல்ல வாய்ப்பிருக்க - ஏர் இந்தியாவுக்கு நல்ல லாபம் தானே என்ற வாதம் உள்ளது. உலகளவிலான டெண்டர் விட்டால் இதை விட குறைவான தொகைக்கு பயணியரை ஏற்றிச்செல்லலாம் என்ற வாதமும் உண்டு. இதில் ஓர் அளவு உண்மை இருக்கலாம். இருப்பினும் - டிக்கெட் விலை - கண்டிப்பாக 12,000 ரூபாய்க்கு கூடுதலாக தான் இருக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் - சென்னையில் இருந்து ஜித்தாஹ் செல்லும் விமானம், ஜித்தாவில் இருந்து திரும்பும் போது காலியாக தான் திரும்பும். ஏன் எனில் இது ஒரு சார்டர்ட் விமானம். அது போல - ஹஜ்ஜுக்கு பிறகு பயணியரை திரும்ப கொண்டு வரும்போதும், காலியாக தான் ஜித்தாஹ் சென்றடையும்.
ஆகவே - அனைவரும் பொதுவாக சென்னை - ஜித்தாஹ் மார்க்கத்தில் - டிக்கெட் வகைக்கு செலவு செய்யும் தொகையோடு ஹஜ் குழு மூலம் மேற்கொள்ளும் பயணத்திற்கு ஆகும் டிக்கெட் செலவோடு சமமாக பார்க்கக்கூடாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross