Re:ஹாங்காங் ஐக்கியப் பேரவையி... posted bymackie noohuthambi (kayalpatnam)[12 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18816
மனசுக்கு வயசு இல்லை என்பதும் நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும் என்பதும் எவ்வளவு யதார்த்தமானது என்பதை இந்த சுற்றுலா சென்ற 2 வயது முதல் 60 வயதையும் கடந்து சென்று கொண்டிருப்பவர்களின் உற்சாகத்தை காணும்போது உணரமுடிகிறது. மாஷா அல்லாஹ். எனது கெழுதகை நண்பர் ஏகேஎஸ் முஸ்தபா அவர்களும் எனது சகலை MR NICE என்று செல்லமாக அழைக்கப்படும் அப்துர் ரவூப் அவர்களும் ஜமால் மாமா அவர்களும் நிழல் படத்தில் மட்டுமல்ல என் உள்ளத்திலும் நிழலாக வந்து செல்கிறார்கள்.
1960களிலே நானும் முஸ்தபா அவர்களும் மறைந்த எஸ்.கே. அவர்களும் மற்றும் பலரும் தமிழர் உரிமைக்காக அப்போதே மறியல் போராட்டம் மட்டக்களப்பில் நடத்தினோம். "குண்டாந்தடி முருங்கை தடி, சிறைச்சாலை பூஞ்சோலை" என்ற எழுச்சி மிக்க சுலோகங்களுடன் கச்சேரி முன்னால் உண்ணாவிரதம் இருந்தோம். தமிழர் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் ஆரம்பித்த சாத்வீக போராட்டம் இறுதியில் வன்முறையாக மாறி திசைமாறிய பறவைகளாக தமிழினம் இன்னும் தத்தளித்து கொண்டிருக்கிறது
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே.....வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross