என்ன? இந்த பில்டிங் அலார்ட்மெண்ட் மட்டும் தான் உதைக்கின்றது...!!! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[15 May 2012] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18867
நாட்டின் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வாறு கணக்கிடப்படுகின்றது? சரியான தகவல் மற்றும் கணக்கெடுப்பு நடக்கின்றதா? அதன்படி ஹஜ் கமிட்டி செயல்படுகின்றதா? உச்ச நீதி மன்றம் ஹஜ் கமிட்டியின் செயல்பாடுகளை உற்று நோக்கும் என பகிரங்கமான தீர்ப்பை அளித்துள்ளது.
முற்காலங்களில் ஹஜ் கோட்டாவைப் பயன் படுத்தி கொள்ளை லாபம் அடைந்தோர் பலர். புனித ஹரம் ஷரீஃபிற்குப் பக்கத்தில் இது நாள் வரை பீஹார் மாநிலம் மற்றூம் கேரள மாநிலத்தைச் சார்ந்த ஹாஜிகளுக்குத் தான் தங்குமிடம் ஒதுக்கப்பட்டு வரும் நிலை காலா காலமாக தொடர்ந்து வருகின்றது.காரணம், அம் மாநிலத்தைச் சார்ந்த பலரும் ஹஜ்கமிட்டி,ஜித்தா இந்தியத் தூதரகம் என பல் வேறு அரசு அமைப்புகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
ஹஜ் கமிட்டியின் செயல்பாடுகள்,ஹாஜிகளுக்கு செய்யும் சேவைகளைக் குறைகூற இயலாது.அது ஓரு பெரிய நெட்வர்க்.இலட்சக்கணக்கானோரை அழைத்து வந்து,பாதுகாப்பாக தங்க வைத்து, மருத்துவம்,போக்குவரத்து மற்றும் வழிகாட்டல் ஆகியவைகளை மிக சிரமத்துடன் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் துனையோடு செய்து வருவது அசாத்தியமான செயலே! என்ன?
இந்த பில்டிங் அலார்ட்மெண்ட் மட்டும் தான் உதைக்கின்றது, எப்போதும் நம்மவர்க்கு சற்று தொலைவில்தான் தங்குமிடம்.கேட்டால் மதினாவில் ஹரத்திற்கு அருகில் இடம் தருகின்றோமே? எனும் பதில் தான் வருகின்றது.
இம் முறை புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் வல்ல நாயன் கபூல் செய்தருள்வானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross