நாமும் ஒவ்வொரு வருடமும் , " சந்தியுங்கள் முதல் மாணவரை " என்று அந்த மாணவ கண்மணியை இங்கே வரவழைத்து அரியணையில் அமர வைக்கிறோம் . நம்முடைய மாணவர் அந்த அரியணை ஏறும் காலம் எப்போது வருமோ தெரியவில்லை ! அது நமக்கு " எட்டாக்கனியோ " என்றுதான் நினைக்க தோன்றுகிறது .
வெற்றி பெற்றவர்களின் பேட்டியைப்பார்த்தால் , அவர்களுக்கு படிப்பை தவிர வேறு உலகமே தெரியவில்லை . லட்சியத்துடன்கூடிய படிப்பு . Top Scorers பெரும்பாலானவர்கள் hostel இல் தங்கி படித்திருக்கிறார்கள் . படிப்பதர்க்கேற்ற சூழ்நிலை . விளையாட்டையும் , டிவி , சினிமா என்று ஊர் சுற்றுவதையும் மறந்திருக்கிறார்கள் . குடும்ப விழாக்கள் , பொது விழாக்களுக்கு செல்வதை அறவே தவிர்த்திருக்கிறார்கள் . இவர்களின் பெற்றோர்களும் இதுபோன்ற விழாக்களுக்கு இவர்களை அழைப்பதில்லை .
ஆனால் நமதூர் மாணவர்களுக்கு இதுபோன்ற லட்சியம் , தியாகம் , கட்டுப்பாடுகள் வெகுதூரம் என்பது முதல் மதிப்பெண் மற்றும் தேறியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின்மூலம் தெளிவாக புரிகிறது.
இனியாவது , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சங்கமாக விழா எடுத்து , வெற்றி பெற்றவர்களுக்கு 500 கொடுக்கிறேன் 1000 கொடுக்கிறேன் , வினாடிவினா நடத்தி மாணவர்களை விழிப்படைய செய்கிறேன் என்பதையெல்லாம் விடுத்து , State top scorers எவ்வாறு இந்த நிலையை அடைந்தார்கள் என்பதை ஆராய்ந்து , நாமும் அந்த நிலையை எப்படி அடையலாம் என்பதை சொல்லிக்கொடுங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross