செய்தி: புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜித்தா கா.ந.மன்றம் சார்பில் குறும்படம் தயாரிப்பு! நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குறும்படம் posted bykavimagan (dubai)[30 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1905
அன்புநிறை ஜித்தா மன்ற சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!!
எண்ணற்ற சமூக நலப்பணிகளை ஏற்றமுடன் செய்துவரும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
புற்றுநோய் தொடர்பான குறும்படங்கள் நூற்றுக்கும் மேலானவை பல்வேறு தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு,மக்கள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
தாங்கள் டாக்டர் திரு.கோவிந்தராஜன் (காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின்
சிறப்பு மருத்துவர்) அவர்கள் நடத்திவரும் ROSE GARDEN இலவச புற்றுநோய் அரவணைப்பகத்தின் மேலாளர் திரு.சாலை பாதர் அவர்களை 9500069985 என்ற கைப்பேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு, உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும் பட்சத்தில், குறும்படங்கள் பற்றிய உபயோகமான தகவல்
பல, இன்ஷாஅல்லாஹ், உங்களுக்கு கிடைக்கக்கூடும். மேற்குறிப்பிட்ட சாலைபாதர் அவர்கள், கர்ப்பப்பைவாய்
புற்றுநோயற்ற காயல் நகரம் 2020 என்ற திட்டத்தின் செயலாளர் என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன்.
நிறைவாக, ஆளுக்கொரு திசையில் பயணிக்காமல், ஏற்கனவே அமைக்கப்பட்டு களப்பணியில் முழுவீச்சில்
செயல்பட்டுக் கொண்டிருக்கும் CFFC யை,பலப்படுத்துவதே காலத்திற்கேற்ற சரியான முடிவாக இருக்கும் என்ற
எனது கருத்தினை பணிவுடன் பதிவு செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross