Re:KCGC, KWAB நடத்திய கல்வி ... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19068
வாழ்த்துக்கள்.
கன்னி முயற்சி என்றாலும் கனிவான, ஜனரஞ்சகமான முயற்சி. எடுத்த எடுப்பிலேயே வெற்றி கண்டுள்ளது உங்கள் முயற்சி. பெற்றோர் மாணவர்கள்தான் வரவேண்டும் என்ற உங்கள் அழைப்பிதழ் சற்று ஏமாற்றம் தந்தது. ஆனால் காக்கும் கரங்கள் தலைவர் நேரில் வந்து என்னை அழைத்ததால் நானும் கலந்து கொள்ள முடிந்தது. என் போன்றவர்களுக்கும் நிகழ்ச்சி பயன்தருவதாகவும் உற்சாகம் தருவதாகவும் அமைந்திருந்தது.
ஜனகரன் அவர்களை வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அற்புதமான பேச்சு, அசத்தலான சொல்வடிவு, பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பாசறையில் வளர்ந்தவர்போல் தெரிகிறது,இருந்தாலும் அவர் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய விதம் புதியது, பாராட்டுக்குரியது
.நிகழ்ச்சி அமைப்பு, அற்புதம். வேகும் வெயில் என்றாலும் ஷாமியானா அமைப்பு, குளிர்பானம் பிஸ்கட் அன்பளிப்பு வெக்கையை மறக்கடிக்க செய்தது.
கொட்டிகிடக்கும் வேலைவாய்புகள் அதற்கான படிப்புக்கள் இது வரை சொல்லப்படாத செய்திகள்.நீங்கள் அழைத்துவந்திருந்த எல்லோருமே அருமையான செய்திகளை தந்தார்கள்.
ஆனால் நீங்கள் இடைவேளை விட்டபோது தொழுகைக்கான அழைப்பு விடும் நேரம். அதையே தொழுகைக்கு விடப்பட்ட இடைவேளையாக அறிவித்திருந்தால், தொழுகை முடித்துவிட்டு அடுத்த அமர்வுக்கு வந்திருக்க முடியும், எல்லோரும் ஆர்வமாக வந்திருந்த மாணவ மாணவிகள்தான். மார்க்க கல்வியை பற்ற்யும் கலாச்சார சீரழிவுகள் பற்றியும் அதிக கவலை கொண்டுள்ள நீங்கள் இந்த நொடியில் சற்று கண்ணயர்ந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன் ஆனாலும் இது ஒரு குறை. இல்லை. வெறும் பாராட்டும் புகழுரையும் மட்டும் சரியான விமர்சனம் ஆகாது. நல்லவைகளை பாராட்டவும் அல்லவைகளை சுட்டிக்காட்டவும் ஒரு முறையான விமர்சகன் தயங்கமாட்டான்.அதை ஒரு SPORTS ஆக நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்றும் நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி.
A GOOD START IS HALF DONE என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் உங்கள் ஆரம்பமே நன்றாக அமைந்துள்ளது. கடல் நடுவே தத்தளிக்கும் கப்பலுக்கு ஒரு கலங்கரை விளக்கு வழிகாட்டுவதுபோல் என்ன படிப்பது, எங்கு படிப்பது என்று கைபிசைந்து கொண்டு நிற்கும் மாணவர்களுக்கு நீங்கள் ஒரு கலங்கரை விளக்கம். திசை காட்டி .வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross