Re:நகராட்சியில் விடப்பட்ட ஏல... posted bySalai.Mohamed Mohideen (USA)[31 May 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19113
நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள கிணற்றில் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுக்கும் உரிமம் - ஒரு வேளை அது வற்றாத ஜம் ஜம் கிணறாக மாறிவிட்டதோ. போன முறை வெறும் ரூபாய் 9000,௦௦௦ ஏலம் போனது இந்த முறை ரூபாய் 1,01,101 க்கு போய் உள்ளது. போனமுறையும் அண்ணன் G. காளிதாஸ்தான் ஏலம் எடுத்தாரா?
ஓடைக்கரையில் உள்ள மச்ச ஓடை மீன் பிடி உரிமம் ஏலம் - ரூபாய் 300 க்கு ஏலம் போனது இந்த முறை ரூபாய் 25,000 க்கு ஏலம் போயுள்ளது. தங்க மீன் எதுவும் ஓடுதா என்ன?
1000 சதவீதம் கூடுதலாகவும்... 8200 சதவீதம் கூடுதலாகவும் - இதைத்தான் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம் என்பார்களோ?
தற்போதைய நகர்மன்றத்தின் நிர்வாகத் திறமைக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். மற்ற ஏலங்களை விட மேலே உள்ள இரண்டு ஏலத்தையும், முந்தைய நகர்மன்றத்தின் நிர்வாகத் திறமையின்மை (?) என்று எண்ணாவிட்டாலும்...
ஏதோ ஏலத்தில் நடக்கும் ஒரு உள் கூட்டு / சதி நடந்தது போல தெரிகிறது. அதன் விளைவே அடிமாட்டு ஏலத்திட்க்கு இவைகள் அன்று எடுக்க பட்டுள்ளது.
எது எப்படியோ போன முறை ஏலத்திட்க்கு எடுத்தவர்கள் காட்டில் மழை தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross