காயல்பட்டினம் நகராட்சியில் நேற்று (மே 29) நடந்த பொது ஏலம் மூலமாக முந்தைய ஆண்டுகளை விட - பல மடங்கு அதிக வருவாய் நகராட்சிக்கு ஈட்டப்பட்டுள்ளது. ஏலத்திற்கு விடப்பட்ட 13 இனங்கள் மூலம் சுமார் ரூபாய் 6,40,000 நகராட்சி பெற்றுள்ளது. இது கடந்த முறை இதே பொருட்கள்/சேவைகளுக்கு நடந்த ஏலத்தில் ஈட்டப்பட்ட தொகையை விட சுமார் 87 சதவீதம் கூடுதலாகும்.
ஒரு இனம் (நகர்மன்ற வளாக கிணறு) முந்தைய தொகையை விட (ரூபாய் 9,000) 1000 சதவீதம் கூடுதலாகவும் (ரூபாய் 1,01,101), மற்றொரு இனம் (ஓடக்கரை மச்ச ஓடை மீன் பிடி உரிமம்) முந்தைய தொகையை விட (ரூபாய் 300) 8200 சதவீதம் கூடுதலாகவும் (ரூபாய் 25,000) ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
காலையும், மாலையும் நடந்த ஏலத்தினை நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக்கின் மேற்ப்பார்வையில், ஆணையர் அசோக் குமார் நடத்தினார். நகர்மன்ற உறுப்பினர்கள் சிலரும் உடனிருந்தனர்.
அறிவிக்கப்பட்ட ஏல இனங்களும், அதனை வென்றவர்/தொகை விபரங்களும் வருமாறு:-
(1) நகராட்சி மூலம் கட்டிடங்கள் அகற்றப்பட்ட ரப்பீஸ் ஏலம்
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 10,000
(a) R.P. ராஜா - ரூபாய் 45,000 (ஏலம் வென்றவர்)
(b) A. ஹனீபா - ரூபாய் 28,000
(c) V. கண்ணன் - ரூபாய் 15,000
(d) ஜாகிர் - ரூபாய் 20,000
(e) T. சத்தியராஜ் - ரூபாய் 12,200
(f) ரஞ்சன் - ரூபாய் 23,000
(g) R.S. கோபால் - ரூபாய் 22,000
(h) செய்யத் அலி - ரூபாய் 20,000
(2) நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள கிணற்றில் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுக்கும் உரிமம் (காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை)
குத்தகை காலம் - 01.06.2012 முதல் 31.03.2013 முடிய
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 50,000
(a) S. சந்திரசேகர் - ரூபாய் 57,000
(b) முஹம்மது மீராசாஹிப் - ரூபாய் 30,000
(c) A. செல்வம் - ரூபாய் 55,000
(d) G. காளிதாஸ் - ரூபாய் 1,01,101 (ஏலம் வென்றவர்)
(e) சங்கர குமார் - ரூபாய் 70,000
(f) மூக்காண்டி தேவர் - ரூபாய் 61,000
(g) R.S. கோபால் - ரூபாய் 55,000
முந்தைய ஏலம் - ரூபாய் 9,000
முந்தைய தொகையை விட கூடுதல் சதவீதம் - 1023 சதவீதம்
(3) நகராட்சி பேருந்து நிலையத்திலுள்ள 2 கிணறுகளில் வாகனம் மூலம் தண்ணீர் எடுக்கும் உரிமம் (காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை)
குத்தகை காலம் - 01.06.2012 முதல் 31.03.2013 முடிய
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 1,16,700
(a) சந்தியா - ரூபாய் 1,45,000
(b) S. விஜயன் - ரூபாய் 1,45,000
(c) J. கோபால் - ரூபாய் 1,30,000
(d) சிங்கராஜ் - ரூபாய் 1,52,700 (ஏலம் வென்றவர்)
முந்தைய ஏலம் - ரூபாய் 1,16,700
முந்தைய தொகையை விட கூடுதல் சதவீதம் - 30.84 சதவீதம்
(4) நகராட்சியின் ஆடு, மாடு அறுக்கும் தொட்டி ஏலம்
குத்தகை காலம் - 01.06.2012 முதல் 31.03.2013 முடிய
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 1,00,000
(a) K.M. காதர் மொஹிதீன் - ரூபாய் 1,45,000
(b) S. விஜயன் - ரூபாய் 1,81,700 (ஏலம் வென்றவர்)
(c) A. செல்வம் - ரூபாய் 1,50,000
(d) M.H. அப்துல் வாஹித் - ரூபாய் 1,26,999
முந்தைய ஏலம் - ரூபாய் 1,00,000
முந்தைய தொகையை விட கூடுதல் சதவீதம் - 81.70 சதவீதம்
(5) பேருந்து நிலையத்தில், பேருந்து நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் உரிமம்
குத்தகை காலம் - 01.07.2012 முதல் 31.03.2013 முடிய
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 68,250
(a) R.S. கோபால் - ரூபாய் 90,000 (ஏலம் வென்றவர்)
(b) R.M.A. இக்பால் - ரூபாய் 85,000
(c) ரஞ்சன் - ரூபாய் 75,000
முந்தைய ஏலம் - ரூபாய் 68,250
முந்தைய தொகையை விட கூடுதல் சதவீதம் - 31.86 சதவீதம்
(6) ஓடைக்கரையில் உள்ள மச்ச ஓடை மீன் பிடி உரிமம் ஏலம்
குத்தகை காலம் - 01.07.2012 முதல் 31.03.2013 முடிய
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 300
(a) A. செல்வம் - ரூபாய் 2,500
(b) K. முத்து முஹம்மது - ரூபாய் 1,500
(c) T. நாராயண நாடார் - ரூபாய் 25,000 (ஏலம் வென்றவர்)
முந்தைய ஏலம் - ரூபாய் 300
முந்தைய தொகையை விட கூடுதல் சதவீதம் - 8233 சதவீதம்
(7) நகராட்சி அலுவலகத்திலுள்ள தென்னை மரங்கள் மேல் மகசூல் உரிமம் ஏலம்
குத்தகை காலம் - 01.06.2012 முதல் 31.03.2013 முடிய
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 410
ஏலம் வென்றவர் - G. காளிதாஸ் - ரூபாய் 755
(8) பேருந்து நிலையத்திலுள்ள தென்னை மரங்கள் மேல் மகசூல் ஏலம்
குத்தகை காலம் - 01.07.2012 முதல் 31.03.2013 முடிய
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 2,325
ஏலம் வென்றவர் - G. காளிதாஸ் - ரூபாய் 4,030
(9) நகராட்சி அலுவலகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தினசரி நாளிதழ் ஏலம் (31.03.2012 வரை சேகரிக்கப்பட்டது) (85 கிலோ)
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 3 (கிலோ ஒன்றிற்கு)
ஏலம் வென்றவர் - R.P. ராஜா - ரூபாய் 765 (கிலோ ரூபாய் 9 * 85 கிலோ)
(10) நகராட்சி அலுவலகம் மற்றும் தெருவிளக்கு பயன்படுத்தப்பட்ட பழைய மின் சாதனங்கள், சோக்கு, ஸ்டார்ட்டர், குழல் விளக்கு ஏலம்
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 10,200
ஏலம் வென்றவர் - R.S. கோபால் - ரூபாய் 24,500
(11) நகராட்சி ஆடு, மாடு அறுக்கும் தொட்டியில் சேகரிக்கப்பட்ட உதப்பை ஏலம்
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 400
ஏலம் வென்றவர் - சுரேஷ் - ரூபாய் 3,450
(12) நகராட்சி குடிநீர் பிரிவில் பயன்படுத்தப்பட்டு பழுதடைந்த பொருட்கள் ஏலம் (270 கிலோ)
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 17.50 (கிலோ ஒன்றிற்கு)
ஏலம் வென்றவர் - R.P. ராஜா - ரூபாய் 7,762 (கிலோ ரூபாய் 28.75 * 270 கிலோ)
(13) சுகாதாரப் பிரிவில் உபயோகப்படுத்தப்பட்டு பழுதடைந்த பொருட்கள் ஏலம்
ஆரம்பக் கேள்வி - ரூபாய் 1,500
ஏலம் வென்றவர் - ஹபீப் - ரூபாய் 6,200
தற்போது நடைபெற்ற ஏலம் முன்னதாக ஏப்ரல் 9 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஏலம் குறித்த அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படவில்லை என்ற புகார்கள் எழுந்ததை அடுத்து - ஏலத்தை தள்ளிப்போட நகர்மன்றத் தலைவர் ஆணையரை அறிவுறுத்தினார். மேலும் - தற்போது நடந்த ஏலம் குறித்த அறிவிப்பு, துண்டு பிரசூரங்கள் மூலம் நகர்முழுவதும் விநியோகிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட தினசரி மார்க்கெட் ஏலம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. |