அண்மையில் திருமணம் செய்துள்ள மன்ற உறுப்பினர்களை வாழ்த்தி கத்தர் காயல் நல மன்றம் சார்பில் அதன் துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருள் சூழ, 27.05.2012 அன்று இல்லறம் கண்டுள்ள எம் மன்ற உறுப்பினர்களும், காயல்பட்டினம் கே.டி.எம். தெரு - ஜனாப் எஸ்.ஒய்.செய்யித் முஹம்மத் அவர்களின் மக்களுமான எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், எஸ்.எம்.காதிர் மீரா ஸாஹிப் ஆகியோரை எமது கத்தர் காயல் நல மன்றம் மனதார வாழ்த்துகிறது.
புது வாழ்வு கண்டுள்ள இவர்கள் தம் தனிவாழ்விலும், பொதுவாழ்விலும் சிறக்கவும், அதன்மூலம் இருலோக நற்பேறுகளை நிறைவாகப் பெற்றுய்யவும், எல்லாம்வல்ல இறைவன் - ஏக வல்லோன் அல்லாஹ்வை இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.
புது மணமக்கள் நீடூழி வாழ்ந்து, நிறைவான மக்கட்செல்வங்களைப் பெற்று சிறக்க எம் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளும், அனைத்து உறுப்பினர்களும் அகமகிழ, உளங்குளிர வாழ்த்துகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |