காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், மாதந்தோறும் கடைசி புதன்கிழமைகளில் இக்கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகிறது.
மே மாத மக்கள் குறைதீர் (நான்காவது) கூட்டம், 30.05.2012 புதன்கிழமை மதியம் 03.00 மணி முதல், மாலை 05.00 மணி வரை, காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
பொதுப்பணி, குடிநீர் குறைபாடுகள், பொதுவான கோரிக்கைகள் என மொத்தம் 20 மனுக்களை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா பொதுமக்களிடமிருந்தும், பொதுநல அமைப்புகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.
நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால் ஆகியோர் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 11:30 pm/31-5-2012]
|