காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வந்த இஸ்லாமிய மாத இதழான ”முத்துச்சுடர்” - அதன் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் மறைவையடுத்து நின்று போனது.
இந்நிலையில், அவ்விதழை மீண்டும் வெளியிடுவதற்கு, மறைந்த ஆசிரியரின் மகனான மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், “முத்துச்சுடர்” மாத இதழ் வெளியீட்டு விழா, 28.05.2012 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. காயல்பட்டினம் புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் - மாலை அமர்விற்கும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ இரவு அமர்விற்கும் தலைமை தாங்கினர். நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
மாணவர் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். ஹாஜி எம்.என்.ஷாஹுல் ஹமீத் வாழ்த்துப்பாடல் பாடினார். மன்னர் பாதுல் அஸ்ஹப் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
“முத்துச்சுடர்” நூலாசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ நூல் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், “முத்துச்சுடர்” முதற்பிரதி வெளியிடப்பட்டது. நகரப் பிரமுகர்களில் சிலர் வெளியிட, வேறு சிலர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர். மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, ஹாஜி எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில், நகரின் பல பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஐக்கிய சமாதானப் பேரவை அலுவலக மேலாளர் எம்.புகாரீ தலைமையில், “முத்துச்சுடர்” மாத இதழ் வெளியீட்டு விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
|