| 
 காயல்பட்டினம் அப்பா பள்ளிவாசலையடுத்து அமைந்துள்ளது ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி. 
  
மூன்றாண்டு பாடத்திட்டத்தைக் கொண்ட ஆலிமா கல்வி, மூன்று மாத இஸ்லாமிய ஆரம்பக் கல்வி, திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு), மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.காம்., அஃப்ஸலுல் உலமா, பி.சி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்புகள், சிறுமியருக்கான வாராந்திர தீனிய்யாத் வகுப்பு, இல்லத்தரசியருக்கான ஓராண்டு கல்வித் திட்டம், தையல் பயிற்சி வகுப்பு, திருமண தகவல் திட்டம், ஃபத்வா - மார்க்கத் தீர்ப்பாயக் குழு, சொற்பயிற்சி மன்றம் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி நடைபெற்று வருகிறது இக்கல்லூரி. 
  
இக்கல்லூரியின் 23ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா 31.05.2012 மற்றும் 01.06.2012 தேதிகளில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 
  
31.05.2012 வியாழக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை, கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தீனிய்யாத் பிரிவு சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  
01.06.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டம் பெறும் மாணவியர் சார்பில், கீழக்கரையைச் சார்ந்த மாணவி சுமய்யா ஃபாத்திமா, “கல்வி அறிவின் திறவுகோல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 
  
அதனைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த மாணவி தஹானிய்யா அரபியில் உரையாற்ற, புளியங்குடியைச் சேர்ந்த மாணவி தஸ்ஃபியா பானு அதற்கு தமிழாக்கமளித்தார். பின்னர், தீனிய்யாத் பட்டம் பெறும் மாணவியரின் சிறப்புரை நடைபெற்றது. 
  
மாலை நிகழ்ச்சிகள் ஆண்கள் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - சென்னை யூனிட்டி பப்ளிக் பாடசாலையின் அரபி ஆசிரியர் மவ்லவீ அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார். 
  
அதனைத் தொடர்ந்து, பட்டம் பெறும் மாணவியரின் பெயர்களை கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ ஆண்கள் பகுதியிலிருந்து வாசிக்க, பெண்கள் பகுதியில், கல்லூரியின் ரக்கீபாக்கள் (கண்காணிப்பாளர்கள்) அவர்களுக்கான பட்டச் சான்றிதழ்களை வழங்கினர். 
  
துவக்கமாக, கல்லூரியில் மூன்றாண்டு கல்வித் திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு “ஆலிமா சித்தீக்கிய்யா” பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் பெற்ற மாணவியர் விபரம் பின்வருமாறு:- 
  
(01) ஏ.ஆஃப்ரின் 
(த.பெ. அப்துல்லாஹ்)  
பொள்ளாச்சி, கோவை மாவட்டம். 
  
(02) ஏ.ஆஷா பர்வீன் 
(த.பெ. அப்துல் மாலிக்)  
சென்னை. 
  
(03) ஜே.எஸ்.புகாரீ ஃபாத்திமா 
(த.பெ. ஜஃபர் சாதிக்)  
காயல்பட்டினம். 
  
(04) எஸ்.ஃபாத்திமா பஸரிய்யா 
(த.பெ. ஷாஜஹான்)  
காயல்பட்டினம். 
  
(05) எம்.ஃபாத்திமா ரிஃபாயா 
(த.பெ. முஸ்தஃபா)  
புது வலசை, இராமநாதபுரம் மாவட்டம். 
  
(06) எம்.ஹைருன்னிஸா 
(த.பெ. முஹம்மத் கனீ)  
வி.கே.புரம், அம்பாசமுத்திரம் தாலுகா, நெல்லை மாவட்டம். 
  
(07) எஸ்.கதீஜா ஃபாத்திமா 
(த.பெ. ஷேக் முஹம்மத்)  
உடன்குடி. 
  
(08) எஸ்.ஜெரீனா பேகம் 
(த.பெ. ஷம்சுத்தீன்)  
பாபநாசம், நெல்லை மாவட்டம். 
  
(09) எச்.லைலா ஃபாத்திமா 
(த.பெ. ஹாமீம்)  
பரமன்குறிச்சி. 
  
(10) எச்.முஹ்ஸினா (தஃவா சென்டர்)  
(த.பெ. ஹபீபுல்லாஹ்)  
காயல்பட்டினம்
  
(11) என்.மர்ஃபினா 
(த.பெ. நஸீர்)  
ஆஸாத் நகர், குளச்சல், கன்னியாகுமரி மாவட்டம். 
  
(12) எம்.மெஹ்ராஜ் நிஸா 
(த.பெ. எஸ்.முஹம்மத் இஸ்மாஈல்)  
தென்காசி, நெல்லை மாவட்டம். 
  
(13) எம்.யு.நஸ்ரீன் நிஸா 
(த.பெ. முஹம்மத் ஹுஸைன்)  
ராமநாதபுரம் மாவட்டம். 
  
(14) யு.நிஸ்யா 
(த.பெ. உமர் ஃபாரூக்)  
ஜீவா நகர், குனியமுத்தூர், கோவை மாவட்டம். 
  
(15) ஏ.ரஹ்மத் நிஸா 
(த.பெ. அப்துர் ரஸ்ஸாக்)  
வாலிநோக்கம், ராமநாதபுரம் மாவட்டம். 
  
(16) எஸ்.சுமய்யா ஃபாத்திமா 
(த.பெ. சீனி முஹம்மத்)  
கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம். 
  
(17) எஸ்.சுமய்யா 
(த.பெ. சிக்கந்தர்)  
மதுரை. 
  
(18) எஸ்.செய்யித் கதீஜா 
(த.பெ. ஷாஹுல் ஹமீத்)  
காயல்பட்டினம். 
  
(19) கே.சுர்மினா பானு 
(த.பெ. ஏ.கபீர்)  
தூத்துக்குடி. 
  
(20) எம்.சஜீனா பீவி 
(த.பெ. முஹம்மத் கயாஸ்)  
பூந்துறை, தூத்தூர். 
  
(21) கே.ஷேகும்மாள் 
(த.பெ. காஸிம் முஹம்மத்)  
தூத்துக்குடி. 
  
(22) ஜே.சாரா அஸ்னா 
(த.பெ. ஜெயபால்)  
சென்னை. 
  
(23) ஏ.ஸஃபிய்யா 
(த.பெ. முஹம்மத் அன்வர்)  
சென்னை. 
  
(24) எம்.சுபைதாள் பீவி 
(த.பெ. முஹம்மத் ஹனீஃபா)  
நெல்லை மாவட்டம். 
  
(25) எம்.தாஹிரா பானு 
(த.பெ. முஹ்யித்தீன்)  
புளியங்குடி, நெல்லை மாவட்டம். 
  
(26) எஸ்.தஸ்ஃபியா 
(த.பெ. ஷாஹுல் ஹமீத்)  
புளியங்குடி, நெல்லை மாவட்டம். 
  
(27) பர்வீன் நிஸா 
(த.பெ. பொன்ராஜ்)  
சுரண்டை, நெல்லை மாவட்டம். 
  
(28) இசட்.ஃபாத்திமா தஹானிய்யா 
(த.பெ. ஜுஹைர்)  
கொழும்பு, இலங்கை. 
  
இவ்வாறு, 28 மாணவியருக்கு ”ஆலிமா சித்தீக்கிய்யா” ஸனது - பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 25 மாணவியருக்கு, தீனிய்யாத் கல்வி முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அம்மாணவியர் பட்டியல் பின்வருமாறு:- 
  
(01) ஏ.எஸ்.முஹம்மத் முன்ஷிரா 
(த.பெ. ஆர்.அல்தாஃப் ஷம்சுத்தீன்)  
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். 
  
(02) கே.ஆயிஷா பீவி 
(த.பெ. எம்.ஏ.காஜா முஹ்யித்தீன்)  
மேல சித்தன் தெரு, காயல்பட்டினம். 
  
(03) என்.ஃபாத்திமா மஃப்ரூஹா 
(த.பெ. எஸ்.எம்.நாஸர்)  
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம். 
  
(04) எஸ்.எச்.என்.ஃபாத்திமா ஷர்மிளா 
(த.பெ. எஸ்.ஐ.எஸ்.நவாஸ்)  
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். 
  
(05) எஸ்.ஃபாத்திமா முபீனா 
(த.பெ. எம்.ஷாஜஹான்)  
சுலைமான் நகர், காயல்பட்டினம். 
  
(06) எஸ்.ஓ.பி.ஃபாத்திமா அஃப்ரா 
(த.பெ. எம்.எம்.செய்யித் உமர் புகாரீ)  
மரைக்கார்பள்ளித் தெரு, காயல்பட்டினம். 
  
(07) ஏ.ஜே.இப்றாஹீமா அல் அரூஸிய்யா 
(த.பெ. இசட்.ஏ.அப்துல் ஜலீல்)  
மேல சித்தன் தெரு, காயல்பட்டினம். 
  
(08) எஸ்.எம்.பி.கதீஜா பீவி 
(த.பெ. எம்.கே.செய்யித் முஹம்மத் புகாரீ)  
நெய்னார் தெரு, காயல்பட்டினம். 
  
(09) எஸ்.எச்.முஷ்ஃபிகா 
(த.பெ. எம்.எச்.ஷாஹுல் ஹமீத்)  
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம். 
  
(10) என்.எஸ்.மும்தாஜ் ரஸ்ஃபியா 
(த.பெ. எம்.ஏ.ஜே.நூஹ் ஸாஹிப்)  
அலியார் தெரு, காயல்பட்டினம். 
  
(11) கே.எஸ்.நமீரா 
(த.பெ. ஏ.ஆர்.ரிஃபாய் சுல்தான்)  
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம். 
  
(12) எஸ்.எச்.நவ்ஃபா 
(த.பெ. எஸ்.ஏ.டி.ஷாஹுல் ஹமீத்)  
மரைக்கார் பள்ளித் தெரு, காயல்பட்டினம். 
  
(13) எம்.ஐ.நூர் பெனாஸிர் 
(த.பெ. டி.முஹம்மத் இப்றாஹீம்)  
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம். 
  
(14) எஸ்.எச்.ஸபூரா மஃபாஸா 
(த.பெ. எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத்)  
சின்ன நெசவுத் தெரு, காயல்பட்டினம். 
  
(15) எஸ்.எச்.சாரா நவ்ரீன் 
(த.பெ. எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத்)  
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். 
  
(16) எச்.எஸ்.ஸல்மா முஃப்ரிஹா 
(த.பெ. ஜே.ஹமீத் சுல்தான்)  
சின்ன நெசவுத் தெரு, காயல்பட்டினம். 
  
(17) எஸ்.எச்.சாமு ஸஃப்ரீன் 
(த.பெ. எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத்)  
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். 
  
(18) எம்.ஜே.ஷரீஃபா 
(த.பெ. எம்.ஏ.முஹம்மத் ஜாபிர்)  
அலியார் தெரு, காயல்பட்டினம். 
  
(19) பி.எம்.சேகு ஜாபிரா 
(த.பெ. கே.எம்.பஷீர் மஹ்மூத்)  
மரைக்கார் பள்ளித் தெரு, காயல்பட்டினம். 
  
(20) ஏ.எஸ்.செய்யித் மீரா பர்ஸீனா 
(த.பெ. எஸ்.ஏ.சி.அஹ்மத் சுலைமான்)  
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம். 
  
(21) ஏ.எம்.சுமய்யா 
(த.பெ. ஐ.அப்துல் மஜீத்)  
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். 
  
(22) எம்.எச்.சுமய்யா ஹாஜரா 
(த.பெ. எஸ்.முஹம்மத் ஹஸன்)  
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம். 
  
(23) எம்.ஏ.ராபியா முஷ்ரிஃபா 
(த.பெ. எம்.ஏ.முஹம்மத் அலீ)  
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம். 
  
(24) எஸ்.எச்.ஜீனத் முஃமினா 
(த.பெ. டி.ஷாஹுல் ஹமீத்)  
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். 
  
(25) எஃப்.ஆர்.சி.நஸீஹா ஃபாத்திமா 
(த.பெ. எஸ்.ஏ.ஃபைஸல் ரஹ்மான் சாகுளா)  
கீழ நெய்னார் தெரு, காயல்பட்டினம். 
  
இவ்வாறாக, 25 மாணவியர் தீனிய்யாத் கல்வி முடித்ததற்கான சான்றிதழ் பெற்றனர். அடுத்து, ஓராண்டு கல்வித் திட்டத்தின்கீழ் பயின்ற 7 மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவியர் விபரம் பின்வருமாறு:- 
  
(1) எஸ்.ஐ.ஆபிதா 
(த.பெ. செய்யித் இப்றாஹீம்)  
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். 
  
(2) எஸ்.கதீஜா ஆரிஃபா 
(த.பெ. முஹம்மத் ஹஸன் ஷேக்னா)  
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம். 
  
(3) கே.எம்.முஹம்மத் ரினோஸா 
(த.பெ. கிதுரு முஹம்மத்)  
பரிமார் தெரு, காயல்பட்டினம். 
  
(4) என்.நஸீமா பேகம் 
(த.பெ. நஸீர் அஹ்மத்)  
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம். 
  
(5) ஆர்.ஷகீலா பானு 
(த.பெ. ரஹ்மத்துல்லாஹ்)  
சத்தாம் ஹுஸைன் தெரு, புதுப்பட்டினம். 
  
(6) ஏ.மஹ்பூப் ஷமீமா 
(த.பெ. அபுல் ஹஸன்)  
காயிதேமில்லத் நகர், காயல்பட்டினம். 
  
(7) எம்.கே.சித்தி ரஃபீக்கா 
(த.பெ. முஹ்யித்தீன் அப்துல் காதிர் 
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம். 
  
இவ்வாறாக, ஓராண்டு கல்வித் திட்டத்தின் கீழ் பயின்று முடித்த மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
  
பின்னர், கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, பட்டம் பெற்ற மாணவியருக்கு அறிவுரை வழங்கினார். 
  
 
  
நிறைவாக, கல்லூரியின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. 
  
 
  
பெண்கள் பகுதி நிகழ்ச்சிகள் அனைத்தும் கல்லூர மாணவியர் விடுதி உள் வளாகத்திலும், ஆண்கள் நிகழ்ச்சி, கல்லூரி கேளரங்கத்தின் கீழ்ப்பகுதி வெளிப்புறத்திலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், உள்ளூர் - வெளியூர்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
  
 
  
   |