காயல்பட்டினம் காயிதேமில்லத் நகர் - 1ஆவது குறுக்குத் தெருவில், கே.எம்.டி. மருத்துவமனையையடுத்து அமைந்துள்ளது அன்னை கதீஜா மத்ரஸா. இங்கு, குர்ஆன் ஓத பயிற்சியளிக்கும் குர்ஆன் மக்தப், வாராந்திர தீனிய்யாத் - மார்க்கக் கல்வி வகுப்பு, ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடராக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மத்ரஸாவின் 3ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி, 29.05.2012 செவ்வாய்க்கிழமையன்று, மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
சன்மார்க்கப் போட்டிகள்:
காலையில் துவங்கிய நிகழ்ச்சியில் மாணவர்கள் எஸ்.அப்துல் அஜீஸ் கிராஅத் ஓத, ஏ.கே.அஸ்மினா அதன் தமிழாக்கத்தை வழங்கினார். பின்னர், ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக கிராஅத் போட்டியும், அதனைத் தொடர்ந்து துஆக்கள் போட்டியும் நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, மாணவி ஏ.டபிள்யு.ரிஃப்கா - தமிழாக்கத்துடன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி, திருக்குர்ஆன் சூராக்கள் மனனப் போட்டி - ஏ, பி பிரிவுகளுக்கு நடத்தப்பட்டது.
இரவு நிகழ்ச்சியில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. எம்.என்.அஹ்மத் ஸாஹிப் போட்டியை வழிநடத்த, மத்ரஸா மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
சிறப்புரை:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ மற்றும் மவ்லவீ எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பரிசளிப்பு:
பின்னர் பரிசளிப்பு நடைபெற்றது.
ஏ பிரிவு கிராஅத் போட்டியில், எஃப்.ஆதிலா ஃபாத்திமா முதற்பரிசும், எஸ்.நஜ்மா பீவி இரண்டாவது பரிசும் பெற்றனர்.
பி பிரிவு கிராஅத் போட்டியில், கே.மர்யம் முதற்பரிசும், எஸ்.ஏ.டி.நூர் ஜஹான் இரண்டாவது பரிசும், எஸ்.எச்.சித்தி ஃபாத்திமா மூன்றாவது பரிசும் பெற்றனர்.
சி பிரிவு கிராஅத் போட்டியில், அப்துல் அஜீஸ் முதற்பரிசும், எம்.ஐ.இஸ்மாஈல் இரண்டாவது பரிசும், ஜவாஹிருல்லாஹ் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
டி பிரிவு கிராஅத் போட்டியில் எஸ்.எச்.முஹ்யித்தீன் ஸாஹிப் முதற்பரிசும், ஏ.ஹனீஃபா இரண்டாவது பரிசும், எம்.எம்.அம்மார் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
துஆ மனனப் போட்டி ஏ பிரிவில், எஸ்.ஏ.டி.நூர் ஜஹான் முதற்பரிசும், எஸ்.அப்துல் அஜீஸ் இரண்டாவது பரிசும், எம்.ஐ.இஸ்மாஈல் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
பி பிரிவு துஆ மனனப் போட்டியில் ஐ.ஃபாத்திமா ஜவாதா முதற்பரிசும், எஸ்.எம்.அய்யூப் அன்ஸாரீ இரண்டாவது பரிசும் பெற்றனர்.
சி பிரிவு துஆ போட்டியில் என்.எம்.ஜுல்ஃபா முதற்பரிசும், எம்.ஏ.நூர் ஃபாத்திமா இரண்டாவது பரிசும், எம்.ஏ.ஷஃபீக் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில், ஷாஹுல் ஹமீத் மகள் எஸ்.எச்.சித்தி ஃபாத்திமா முதற்பரிசும், எம்.எச்.அப்துல் வாஹித் மகள் ஏ.டபிள்யு.ரிஃப்கா இரண்டாவது பரிசும், காதர் மகள் கே.மர்யம் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
சூரா மனனப் போட்டி ஏ பிரிவில், செய்யித் அபூதாஹிர் மகள் எஸ்.ஏ.டி.நூர்ஜஹான் முதற்பரிசும், ஷாஹுல் ஹமீத் மகள் எஸ்.எச்.சித்தி ஃபாத்திமா இரண்டாவது பரிசும், எம்.எச்.அப்துல் வாஹித் மகள் ஏ.டபிள்யு.ரிஃப்கா மூன்றாவது பரிசும் பெற்றனர்.
சூரா மனனப் போட்டி பி பிரிவில், நுஸ்கீ மகன் என்.முஹம்மத் அலீ முதற்பரிசும், முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ மகன் எம்.எம்.அம்மார் இரண்டாவது பரிசும் பெற்றனர்.
வினாடி-வினா போட்டியில், எம்.எம்.அம்மார், எஸ்.ஐ.இஸ்மாஈல், அக்ஷத், ஏ.ஹபீப் மரைக்கார் ஆகியோரடங்கிய பி அணி முதற்பரிசைப் பெற்றது. நஜ்மா, அஸ்மினா, அஃப்ரா, ஆதிலா ஃபாத்திமா ஆகியோரடங்கிய டி பிரிவு இரண்டாம் பரிசைப் பெற்றது. கே.என்.ஆஷிகா, டபிள்யு.ஏ.வனீஸா, கே.ஆர்.ரிஃப்கா, பீர் முஹம்மத் முஸ்தஃபா, அப்துல் ஃபஹீம் ஆகியோர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்.
பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. லெமன் அன்ட் ஸ்பூன் போட்டியில் நஜ்மா முதற்பரிசையும், ஜவாதா இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
சாக்கு ஓட்டப் போ்டியில் ஏ.டபிள்யு.ரிஃப்கா முதற்பரிசையும், நஸீமா இரண்டாவது பரிசையும் பெற்றனர். மற்றொரு பிரிவில், ஸுலைமான் முதற்பரிசையும், ஹஸீமுல்லாஹ் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
ஓட்டப்பந்தயத்தில் ஹஸீமுல்லாஹ் முதற்பரிசையும், ஸுலைமான் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
பார்வையாளருக்கான போட்டிகளில், ஃபாத்திமா, ஷகீலா, ஹாஃபிழ் செய்யித் முஹம்மத், லாஃபிர் ஆகியோர் பரிசுகளைப் பெற்றனர்.
பரிசளிப்பைத் தொடர்ந்து, நன்றியுரைக்குப் பின் கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
|