காயல்பட்டினம் சுலைமானியா ரியல்ஸ், ஐக்கிய சமாதானப் பேரவை, தூத்துக்குடி ஸ்காட் தொண்டு நிறுவனம் ஆகிய அமைப்புகள், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, கண் மருத்துவ பரிசோதனை இலவச முகாமை, இன்று காலை 08.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நடத்தின.
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர்களான டாக்டர் அதிதி ஜெய்ன், டாக்டர் பக்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இம்முகாமில் பங்கேற்று, பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
ஸ்காட் தொண்டு நிறுவனத்தின் சார்பில், டாக்டர் க்ளிட்டஸ் பாபு, நாகராஜன், மில்கி, மனோகரன் மற்றும் செவிலியர் குழுவினர் முகாமை ஒருங்கிணைத்தனர்.
இம்முகாமில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 208 பயனாளிகள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். அவர்களுள் 24 பேருக்கு கண் கண்ணாடி முகாமிலேயே இலவசமாக வழங்கப்பட்டது. 9 பேர் அறுவை சிகிச்சைக்காக முகாம் நிறைவுற்ற பின்னர் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, ஐக்கிய சமாதானப் பேரவை அலுவலக மேலாளர் எம்.புகாரீ தலைமையில், எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான், எம்.என்.ஷாஹுல் ஹமீத், மரைக்கார் தம்பி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
|