விளாத்திகுளம் அரசு மருத்துமனையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் 29.05.2012 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருந்தகம், ஸ்கேன் எடுக்கும் கருவி, உள் நோயாளிகள் பிரிவு, சமையலஅறை, கழிவறைகள் என அனைத்து பிரிவுகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அதன் செவிலியர்களுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். பின்னர் அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனைக்குத் தேவையான குடிநீர் தடையின்றி வழங்கிட டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு உத்திரவிட்டார்.
பின்னர், கீழவேம்பார், சிப்பிகுளம், குழந்தை ஏசு நகர், குண்டலபெருமாள் புரம், கல்லூரனி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனுடன் சென்று குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வோர் இடத்திற்கும் வருகின்ற தண்ணீரின் அளவு மற்றும் அது முறையாக வழங்கப்படுகிறதா என்பன குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
குடிநீர் வரும் பாதையில் முறைகேடாக உறிஞ்சுவோர் மற்றும் வேறு பயன்பாட்டிற்கு அந்நீரைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சிறப்புக் கவணம் செலுத்தி கண்காணித்திடவும், முறைகேடுகளில் யாரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின்போது கோட்டாட்சியர் பொன்னியின் செல்வன், வட்டாட்சியர் குமார், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர். |