காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, இம்மாதம் 10ஆம் தேதி மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் - அலியார் தெருவிலுள்ள தஃவா சென்டர் வளாக முன்புறத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், இஸ்லாமிய அழைப்பாளரும் - எழுத்தாளருமான சிவசுப்பிரமணியம் என்ற சிராஜுத்தீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “சாதி ஒழிந்தது” எனும் தலைப்பில் சிறப்பரையாற்றவுள்ளார்.
இஸ்லாமிய மார்க்கத்தைத் தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்ட ஆண்களும், பெண்களும் இவ்விழாவில் தமது அனுபவங்களை உரையாகத் தரவுள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறும் தஃவா சென்டர் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை பின்வருமாறு:-
|