காயல்பட்டினம் தீவுத்தெரு பெண்கள் தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் புதிய கல்வியாண்டிற்கான பாடங்கள் 07.06.2012 வியாழக்கிழமையன்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு, மவ்லவீ ஃகல்ஜீ ஃபாஸீ தலைமை தாங்கி, திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) பிரிவில் புதிதாக இணைந்துள்ள 7 மாணவியருக்கு பாடத்தைத் துவக்கிக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆலிமா பட்டயப் படிப்பிற்காக புதிதாக இணைந்துள்ள 17 மாணவியருக்கு, கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, பேராசிரியர் மவ்லவீ முஹம்மத் அப்பாஸ் காஷிஃபீ ஆகியோர் துவக்கப் பாடத்தை நடத்தினர்.
பின்னர், புதிய மாணவியருக்கு கல்லூரியின் விதிமுறைகள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
மத்ரஸாவின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ முஹ்யித்தீனின் துஆவுக்குப் பின், கஃப்ஃபாரா, ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல்:
ஹாஜி தைக்கா றஹ்மத்துல்லாஹ். |