இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் - தமது பெயர், முகவரிக்கான அடையாளச் சான்றுகளை (ஐ.டி. ப்ரூஃப்) வழங்காமலிருந்தால், இம்மாதம் 30ஆம் தேதிக்குள் தமது வங்கி மேலாளரிடம் சமர்ப்பித்து, வங்கிக் கணக்கு பணப்பரிமாற்றம் செயலிழக்கச் செய்யப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு:-
இவ்வாறு அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் கிளை மேலாளர் குணசேகரன் தெரிவிக்கையில்,
காயல்பட்டினம் ஐ.ஓ.பி. கிளையில், வங்கிக் கணக்கு எண் 18000க்குக் கீழ் எண்ணுள்ள கணக்கை வைத்திருப்போர் அனைவரும் தமது பெயர் மற்றும் முகவரிக்கான அடையாளச் சான்று நகலை அவசியம் வழங்க வேண்டுமென்றும், ஜூன் 30ஆம் தேதிக்குள் வழங்கி, தமது கணக்கில் பணப்பரிமாற்ற வசதி செயலிழக்காமல் பாதுகாத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். |