பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - பெற்று அதனை தொடராக காயல்பட்டணம்.காம் இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது.
தணிக்கை அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் - நான்கு பாகங்களாக வெளியிடப்பட்டிருந்த நிலையில் - காயல்பட்டின நகர்மன்ற உறுப்பினர் ஒருவர், காயல்பட்டணம்.காம் செய்தியாளரிடம் - தணிக்கை தடைகள் என்பது இயல்பு என்றும், அவைகளுக்கான விளக்கங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வழங்கிய பின்னர், அவைகள் அறிக்கையில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
உறுப்பினரின் கருத்தினை தொடர்ந்து, காயல்பட்டணம்.காம் - மீண்டும் உள்ளாட்சி நிதித் தணிக்கை துறையிடம் - காயல்பட்டினம் நகராட்சி குறித்த தணிக்கை தடைகளுக்கு, தங்களின் பதிலாக அதிகாரிகள் வழங்கியிருந்த அனைத்து விளக்கங்களையும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வினவியிருந்தது.
காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் / இந்நாள் அதிகாரிகள், தணிக்கை தடைகள் குறித்து வழங்கியுள்ள விளக்கங்கள் - தற்போது 375 பக்கங்களில் பெறப்பட்டுள்ளது. இதுவரை காயல்பட்டணம்.காம் வெளியிட்டுள்ள 4 பாக செய்திகளில் அடங்கியுள்ள தகவல்களுக்கான மறுப்போ / விளக்கமோ, பெறப்பட்ட புது ஆவணங்களில் இல்லை.
தணிக்கை தடைகள் குறித்து அதிகாரிகள் வழங்கியுள்ள விளக்கங்களும் வருங்காலங்களில் செய்தியாக வெளியிடப்படும்.
[தொடரும்]
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 |