காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் பணியாற்றி வரும் இமாமுக்கு தங்கும் அறை கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி 09.06.2012 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் நடைபெற்றது.
பள்ளி இமாம் - மேலப்பாளையத்தைச் சார்ந்த ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் - இறைப்பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இப்பள்ளிக்கு இடம் நன்கொடையளித்த ஸ்டார் குடும்பத்தைச் சார்ந்த - சென்னை மாதவரம் ஸ்டார் மெட்டல் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் ஹாஜி எம்.எஸ்.அப்துல் காதிர் முதல் கல்லை கட்டுமானப் பணியாளரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து, பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,
இக்கட்டிடம் சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படவுள்ளது... பொருளாதாரத்திற்கு அல்லாஹ்வுக்கடுத்து பொதுமக்களை மட்டுமே நம்பியிருக்கும் இப்பள்ளி நிர்வாகத்தின் சிரமத்தைப் போக்கிடும் வகையில், இக்கட்டுமானப் பணிக்கு பொதுமக்கள் தாராளமாய்த் தந்துதவி, ஸதக்கத்துன் ஜாரியா எனும் நிலையான நற்கூலியைப் பெற்றிட வேண்டுகிறேன்...
என்று தெரிவித்தார். |