காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, 21.06.2012 வியாழக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
17ஆம் நாளான்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் (மஹ்ழரா) பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, மதுரை மாவட்டம் மேலூர் திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ எம்.ஏ.முஹம்மத் லெப்பை புகாரீ ஆகியோர் வழங்கினர்.
18ஆம் நாளான்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த மவ்லவீ அப்துஸ் ஸலாம் ஜலாலீ வழங்கினார்.
19ஆம் நாளான்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் இமாமுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ வழங்கினார்.
20ஆம் நாளான நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் - கோழிக்கோடு குட்டிகாட்டூரிலுள்ள ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஹ்யித்தீன் மஸ்லஹீ வழங்கினார்.
21ஆம் நாளான இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, பரமன்குறிச்சி ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ வழங்குகிறார்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,
ஜாஃபர் சுலைமான்.
|