காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, 21.06.2012 வியாழக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
22ஆம் நாளான நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ வழங்கினார்.
23ஆம் நாளான இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ வழங்குகிறார்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,
ஜாஃபர் சுலைமான்.
|