ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,63,500 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணையினால் எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 31ஆவது செயற்குழு கூட்டம், கடந்த 07.06.2012 வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்கு பின் ரக்வா மன்ற தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
மன்ற துணைத்தலைவர் ஹாஜி ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஹாஜி எஸ்.எம்.பி.ஸாலிஹ் அவர்களால் இறைமறை வசனங்கள் ஓதி துவங்கப்பட்டது.
காயல் மாநகர் நல பணிகள் பற்றி அலசி ஆராய்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1 - துணைச் செயலாளர் பொறுப்பிற்கு புதியவர் தேர்வு:
எமது மன்ற துணைச் செயலாளர் ஹாஃபிழ் பி.எம்.ஸர்ஜூன் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டதால், அவரின் பொறுப்புக்கு பொறியாளர் முஹிய்யதீன் ஸதக்கதுல்லாஹ் அவர்களும், செயற்குழு பொறுப்புக்கு ஹாஜி ஆதம் அபுல்ஹஸன் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
தீர்மானம் 2 - வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு பொருளுதவி:
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தின் படி, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் புனித ரமளானில் நமதூர் வரிய மக்களை கண்டறிந்து பொருளுதவி வழங்குவது எனவும் இது வகைக்கு பங்கு ஒன்றுக்கு 100 சவுதி ரியால் என்றும், அதற்காக நமது ரக்வா உறுப்பினர்களும்,மற்ற எல்லா சகோதரர்களும் வாரிவழங்கி சதக்கதுன்ஜாரிய்யா என்னும் நீடுழி கால நன்மையை அடையுமாறும் கேட்டுகொள்கிறது.
தீர்மானம் 3 - அடுத்த பொதுக்குழு:
எமது மன்றின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் எதிர்வரும் புனித ரமலான் மாதம் ஆகஸ்ட் 03ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணி அளவில் பத்ஹா ஹால்ஃப் மூன் ரெஸ்ட்டாரன்ட் பார்ட்டி ஹாலில் நடைபெற இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் மற்றும் காயல் மக்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 - மணவாழ்த்து:
இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்திருக்கும் எமது சங்க மூத்த உறுப்பினர் அப்துல் ரஷீத் அவர்களின் அன்பு மகன் ஏ.ஆர்.இப்ராஹீம் பைசல் மற்றும் மணவிழா காண இருக்கிற சகோ சட்னி எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதர் இவ்விருவரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ எம்மன்றம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 5 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் ஏழை-எளிய மக்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நன்மையை நாடி எளியவர் துயர் துடைக்கும் சீரிய பணிக்கு தாரளமாக உதவிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்களையும், துஆக்களையும் இம்மன்றம் தெரிவிக்கிறது.
(அ) ஒன்பது நபர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1,33,000/- வழங்கவும்
(ஆ) மூன்று நபர்களுக்கு சிறு தொழில் (தையல் மெஷின்) வகைக்கு ரூபாய் 30,500/- வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஹாஃபிழ் பி.எஸ்.ஜே.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் நன்றி கூற, துஆ இறைஞ்சப்பட்டு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் கூறப்பட்டு நனி சிறப்புடன் நிறைவுபெற்றது எமது செயற்குழுக் கூட்டம், அல்ஹம்துலில்லாஹ்! இக்கூட்டத்தில் எம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பாக,
S.M.முஹம்மத் லெப்பை,
செய்தித் தொடர்பாளர். |