காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிர்வாகத்தால் நடத்தப்படும் ஜாவியா அரபிக்கல்லூரியின் தீனிய்யாத் - மார்க்கக் கல்வி பிரிவான மக்தபத்துர் ராஸிய்யா மாணவர்களின் சன்மார்க்க பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் இம்மாதம் 29ஆம் தேதி துவங்கி, ஜூலை மாதம் 01ஆம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது.
இம்மாதம் 29ஆம் தேதியன்று மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை ஜும்றா மற்றும் தீனிய்யாத் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, திருக்குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மற்றும் நபிமொழிகள் மனனப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
30ஆம் தேதியன்று மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை, ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள் பங்கேற்கும் கிராஅத் போட்டி, அஸ்மாஉல் ஹுஸ்னா, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
நிறைவு நாளான 01.07.2012 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பேச்சுப்போட்டி, சூரா மனனப் போட்டி, பாங்கு போட்டி மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அன்று மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில், பேச்சுப்போட்டி, வினா-விடை போட்டி, பைத் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
அனைத்து போட்டிகளிலும் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும், ஜாவியாவின் தீனிய்யாத் பிரிவான மக்தபத்துர் ராஸிய்யாவில் 8 ஆண்டுகள் பயின்று பயிற்சியை நிறைவுசெய்துள்ள மாணவர்களுக்கு இவ்விழாவில் சான்றிதழ்களும், ஷஃபான் பிறை 17 - 08.07.2012 அன்று வழங்கப்படவுள்ளது.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளையும் பெண்களும் கேட்பதற்காக, அம்பல மரைக்கார் தெருவிலுளள் ஜரூக்குல் ஃபாஸீ பெண்கள் தைக்காவில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நிகழ்ச்சிகளும் ஜாவியா நிர்வாகத்தின் மூலம் இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. காயல்.டி.வி. இணையதளத்திலுள்ள ஜாவியாவிற்கான சிறப்புப் பக்கத்திலும் இந்நேரலையைக் கேட்கலாம்.
|