Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:30:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8628
#KOTW8628
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 17, 2012
காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினரின் தன்னிலை விளக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 11778 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (62) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 17)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சில உறுப்பினர்களது உரையாடல் ஒலிப்பதிவு காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் 14.06.2012 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், 16.06.2012 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடக் கோரி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

அவரது தன்னிலை விளக்கம் பின்வருமாறு:-

தன்னிலை விளக்கம்

நகர்மன்ற உறுப்பினர் பதவி என்பது நான் ஆசைப்பட்டு இதற்காக கடும் முயற்சி செய்து பெற்றது அல்ல. இந்த பொறுப்பு எங்கள் கோமான் ஜமாஅத்தால் என் மீPது அமானிதமாக தரப்பட்டதாகும். நான் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செலவிட்ட தொகை Rs.4000 மட்டும்தான். நான் பொறுப்பேற்ற போது, இறைவன் மீது சத்தியமாக லஞ்சத்தை கேட்டும் வாங்க மாட்டேன். அவர்களாகவே தந்தாலும் பெறமாட்டேன் என்று கூறிய வாக்கை இன்று வரை கடைபிடித்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் இனியும் கடைபிடிப்பேன். நான் பணத்தை மட்டும் லஞ்சமாக கருதவில்லை. முறையான வழியில் அல்லாமல் வரும் பதவியும் லஞ்சம் போன்றதுதான்.

பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் தலைவியைப் பற்றி சில குறைகள் சொல்லப்பட்டாலும் எல்லோர்களும் பொறுப்புக்கு புதிது என்பதால் உடனடியாக யாரையும் குறை சொல்லக் கூடாது என்று எண்ணி அவற்றையெல்லாம் புறக்கணித்து தலைவியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகத்தான் பலர் இருந்து வந்தோம்.

நல்ல நிர்வாகத்தை தர வேண்டும் என்ற ஆர்வம் தலைவிக்கு இருந்தாலும் அதை செயலுக்கு கொண்டு வருவதில் தீர்க்கமான எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை. தனக்குள்ள அதிகாரம் என்ன என்பதை மிகுந்த முயற்சி எடுத்து அறிந்து கொண்ட தலைவியால் அந்த அதிகாரத்தை கவுன்சிலர்களிடம் காட்ட தெரிந்ததே தவிர அலுவலர்களிடம் காட்டத் தெரியவில்லை. தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு பொறுமை மிக அவசியம். அதற்காக நான் அடங்கிப்போகச் சொல்லவில்லை. தலைவி அவர்கள் சில உறுப்பினர்களிடம் கடுகடுத்த முகத்துடன் கடுஞ்சொற்களை உபயோகித்த சம்பவங்களும் உண்டு.

எங்களைப் போன்ற சில கவுன்சிலர்களின் ஆலோசனைகளை பரிசீலிப்பதற்கு கூடத் தலைவி தயாராக இல்லை. குறிப்பாக ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பாக முந்தைய மாதக் குறைத்தீர்க் கூட்டத்தின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப் பற்றி ஆராய வேண்டும் என்று கூறினால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த மாதக் கூட்டத்தை நடத்துகிறார்.

விளைவு முதல் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் சுமார் 70 மனுக்கள் வந்தது. படிப்படியாக குறைந்து ஒற்றைப்படை எண்ணிக்கையாகி விட்டது. மக்கள் இதன் மீது நம்பிக்கை இழந்து விட்டது தான் காரணம். மக்களின் குறைகள் தீர்ந்த பாடில்லை.

மீன் கடை பிரச்சனையாகட்டும், ஆட்டுத்தொட்டி ஏலம் பிரச்சனையாகட்டும் இவற்றில் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றி முற்கூட்டியே ஆலோசனை செய்யாமல் பிரச்சனை முற்றிய பிறகு முடிவு காண முயற்சி செய்கிறார். இதைப் பற்றி எச்சரித்தாலும் அதை புறக்கணித்து விடுகிறார்.

இதேபோல் தெருவிளக்கு பிரச்சனையாகட்டும் குடிநீர் பிரச்சனையாகட்டும் சரியான நேரத்தில் அவரால் முடிவெடுக்க முடியவில்லை. இது சம்பந்தமாக உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்கள் எல்லோர்களும் ஒன்றுகூடி இந்தப் பிரச்சனைகள் எப்படி தீர்ப்பது என்று முடிவெடுக்க கடந்த 08.06.2012 அன்று 18 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சில கோரிக்கைகளை தலைவருக்கு அனுப்பி வைத்து, அடுத்த நாள் நானும் 18-வது வார்டு உறுப்பினர் திரு. E.M. சாமி அவர்களும், தலைவி அவர்களை சந்தித்து, அவர்களின் முடிவு என்ன என்று கேட்டபோது அவர் ஒட்டுமொத்தமாக எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஒன்றாக அமர்;ந்து பேசுவதற்கு கூட தயாரில்லை என்று கூறியதோடு, ஒட்டுமொத்தமாக எல்லா உறுப்பினர்களையும் உங்களுக்கு லஞ்சம் வாங்க முடியாமல் போனதால் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கூறி எங்களையும் கொச்சைப்படுத்தினார்.

இதன் பிறகு இவரிடம் பேசி எந்த உபயோகமும் இல்லை என நான் நினைத்து வெளியில் வந்தபிறகு சகோதரர் சாமி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசிக்க சம்மதிக்கவில்லை.

இதன்பிறகு எல்லா கவுன்சிலர்களும் ஒன்றுகூடி தண்ணீர் பிரச்சனையை முதலில் சமாளிப்பதற்கு ஆலோசித்து நகாpல் குடிநீர் பிரச்சனை தீரும் வரை லாரியில் தண்ணீர் சப்ளை செய்ய முடிவெடுத்து லாரிகாரர்களை அழைத்து பேசி இப்போது வார்டுகளில் லாரியில் தண்ணீர் சப்ளை நடைபெற்று வருகிறது.

இரண்டாவதாக தெரு விளக்கு பிரச்சனையைப் போக்குவதற்கு மின்வாரிய அதிகாரியிடம் உறுப்பினர்கள் பேசி இதற்காக தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் நேற்று Kayalpatnam.com-ல் சில உறுப்பினர்களின் உரையாடல்களை வெளியிட்டதை காண நேர்ந்தது. இது என் மனதை மிகவும் பாதித்தது.

இதில் அந்த உரையாடலில் ஈடுபட்டவர்களின் யோக்கியதை வெளிப்பட்டது மட்டுமல்லாது, எல்லா உறுப்பினர்களையும் அவர்களுடன் இணைப்பது போன்று பேசியது. அவர்களின் எல்லா நோக்கங்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது.

இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அது சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும். அந்தக் காரியங்களில் நேர்மை இருப்பதும் சந்தேகம் தான்.

பொதுநலச் சேவை என்று வந்துவிட்டால் இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது என சிலர் கூறலாம்.

என்னைப் பொறுத்தவரை தனி மனித ஒழுக்கமும் சுய கௌரவமும் தான் முதலில் முக்கியம். அதன் பிறகு தான் பொதுநலச் சேவை.

நல்ல செயல்களையும் கூட நல்ல உள்ளம் கொண்டவர்களுடன் சோ;ந்து தான் செய்ய வேண்டும் என்பதுதான் எண் கருத்து. அப்படியென்றால் இப்போது இருக்கும் 18 உறுப்பினர்களும் நல்லவர்கள் தானா? என்று நீங்கள் கேட்கலாம். நான் யாருக்கும் நல்லவர்கள் என்றோ, கெட்டவர்கள் என்றோ சான்று தரப்போவதில்லை. அவர்களின் கெட்ட செயல்கள் எப்போது நேரிடையாக காண நேர்கிறதோ அல்லது ஆதாரபூர்வமாக தெரியவருகிறதோ அப்போது மட்டும் தான் அவர்களைப் பற்றி கருத்து கூறமுடியும்.

எனவே எனது சக நகர்மன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பது என்னவென்றால் இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்களை புறக்கணித்து விட்டு, ஆலோசனைகள் நடத்தினால் மட்டும் தான் நான் கலந்து கொள்ள இயலும். கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நாம் நல்லது செய்தால் இறைவனிடம் நன்மை கிடைக்கும் என சில நண்பா;கள் கூறலாம். இறைவனிடம் நன்மை கிடைப்பதற்கு பல நல்ல அமல்கள் இருக்கின்றன. அதைச் செய்து நன்மைகள் பெற்றுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட பொது வாழ்வு தேவையில்லை.

இன்னும் சில காலங்கள் அவதானித்து, நான் தீமையில்; ஈடுபடாமல் பொது வாழ்வில் நன்மைகள் செய்ய முடியுமா? என்று பார்ப்பேன். முடியாவிட்டால் இந்த பதவியைத் தூக்கி எறிந்து விடுவேன்.

இறுதியாக ஒன்று, நான் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை நான் யாரிடமாவது லஞ்சம் பெற்றிருந்தால், அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாவதாக!

என்னைப் பற்றியும் என் உள்ளத்தைப் பற்றியும் வல்ல அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.

வஸ்ஸலாம்.


இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by kudack bukhari (doha-qatar) [17 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19377

சலாம் லுக்மான் பாய் ,மிக அருமையாக உங்கள் விளக்கத்தை தந்திருகிறீர்கள் ,நகராட்சியில் தலைவி குறைந்த பட்சம் உங்கள் ஆலோசனைக்காவது செவி சாய்த்திருக்க வேண்டும், துரதிஸ்டம் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை,

இந்த தலைவியை தேர்ந்தெடுக்க பாடுபட்டவர்கள் தலை மறைவாகி விட்டார்கள், இந்த தலைவியை கொண்டு நல்லதோர் நகராட்சி தர முடியாது என்று நிரூபணம் ஆகிஉள்ளது, உண்மையை உரக்க சொன்னீர்கள் , தொலை பேசியில் உரையாடிய அந்த கருப்பு ஆடுகளை அடையாளம் காட்டுங்கள் மக்களுக்கு ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by sulaiman (abudhabi) [17 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19378

அஸ்ஸலாமு அழைக்கும், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதை உள்ளச்சத்தோடு பேணி பாதுகாப்பவர்களுக்கு அல்லாஹ்வின் கருணையும்,உதவியும் கிடைக்கட்டும். சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்காக அயராது உழைத்து முனைப்புடனும் ,வீரியத்துடனும் பிரசாரம் செய்த இணையதளமும், புதியதாக முளைத்த அமைப்பும். நகராச்சி தலைவி அவர்கள் இந்த எட்டு மாத காலத்தில் செய்த குளறுபடிகளையும், தவறுகளையும், நிர்வாகதிறமை இன்மையும் சுடிகாட்டவில்லையே ஏன்?

மக்கள் முன்பு கொண்டுவரவில்லையே ஏன்? பிரசாரம் செயும்போது இருந்த முனைப்பும், வீரியமும் இபொழுது என்கேபோச்சி? ஊருநலனில் அக்கறை உள்ளவர்கள் என்று சொல்லகூடியவர்களே!இது நியாயம்தானா? நமது பிள்ளைதானே என்று அது தவறு செயும்போது கண்டிக்காமல்,சுட்டிக்காட்டாமல் ,கண்டும் ,காணாதுபோல இருந்தால் நாளடைவில் அது தருதலைபிள்ளையாகிவிடும் சகோதரர்களே! அல்லாஹ்பாதுகாபனாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நான் சொல்வதெல்லாம் உண்மை. 999.9 உத்தரவாதம்.
posted by s.s.md meerasahib. (riyadh) [17 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19379

அஸ்ஸலாமு அலைக்கும். நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினரின் தன்னிலை விளக்கம் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். தலைவருக்கு அனுபவ குறைவு என்பதை சாதாரண நிலையில் தான் சுட்டிக்காட்டினோம். ஆனால்....... எல்லோராலும் 999.9 உத்தரவாதம் கொடுக்கப்படும் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினர் A.லுக்குமான் அவர்கள்...... தலைவிக்கு அகங்காரமும், சந்தேகப்புத்தி நோயும் இருப்பதை சுட்டிக்காட்டி விட்டார்கள்.

நான் அடித்த கமாண்டுகள் பொய் உரைக்கவில்லை என்பதை லுக்குமான் அவர்களின் விளக்கத்தில் இருந்தே....... தெரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [17 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19380

தப்பு செய்த / தவறுதலுக்கு துணை போகும் மனதுடையவர்க்கு உள்ளம் குறுகுறுக்கும். அல்லாஹ் நன்கு அறிவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Salai. Mohamed Mohideen (USA) [17 June 2012]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 19381

ஓலி நாடாவுக்கான தன்னிலை விளக்கம் அந்த குரல்களுக்கு சொந்தக்கார்கள் தரபோகிறார்கள் என்று எதிர்பார்த்தால்... அன்று முதல் இன்று வரை இறைவன் மீது சத்தியமிட்டு (அதனை உங்களை தவிர மற்ற கவுன்சிலர்கள் செய்வதற்க்கான வாய்ப்ப்புகள், கரை படியாத கைகளுக்கும் / பணக்கார முதலைகளின் அடிவரூடியாய் இல்லாமல் இதற்கான துணிச்சல்கள் / ஆர்வம் உள்ளதா அல்லது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு வேளை திருதுவராஜ் அவர்கள் இன்று நம் நகர்மன்றத்தில் இருந்திருந்தால் நிச்சயம் 'கருத்தர் மீது ஆணையாக' என்று உங்களை மாதிரியே செய்திருப்பார் என்பது வேற விஷயம்) "முபாஹலா" செய்கிறேன் என்று கமன்ட் மூலம் கூறிய எவரும் சந்தேக பட முடியாத அந்தகுரலுக்கு சொந்தக்கார் அல்லாத சகோதர் அவசரமாக / உடனே தன்னிலை விளக்கம் தந்துள்ளார். மிக சந்தோசம்!!

ஓலி நாடவை விட தலைவியை பற்றி தான் அதிகம் உள்ளது என்பதினால்... இந்த தன்னிலையின் நோக்கம், அந்த ஒலிநாடாவுக்கு தானா அல்லது குறிப்பாக தலைவியின் நகர் மன்ற செயல்பாடுகளை விமர்சிப்பதட்காகவா அல்லது மக்களுக்கு தெரியபடுத்துவதட்க்காக என்று தெரிய வில்லை.

எது எப்படியோ, இதனை ஒரு நல்ல சகோதரர் எழுதியிருப்பதனால் அனேகமாக இது யாருடைய தூண்டுதலின் பெயரில் தன்னிலை விளக்க செய்தியாக அல்லது கட்டுரையாக வரைய பட்டுள்ளது என்று நினைக்கவும் முடியவில்லை. ஒரு வேளை இது வெறும் அனுமானங்களாய் இல்லாத உண்மையென்றால், இதற்கான தகுந்த விளக்கம் (காரண சூழ்நிலைகள் பற்றி) தலைவியால் தரப்படும் மற்றும் உண்மையான குறைபாடுகள் என்றால், இதனை தலைவி திருத்தி கொள்வார் என்றும் எண்ணுகின்றேன்.

"இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன்.... "

-- தலைவியின் செயல்பாடுகள் பற்றி உன்னிப்பாக கவனித்து தெள்ளதெளிவான சிந்தனையுடன் இங்கே எழுதபட்டுள்ளதினால் இந்த வரிகளை படித்தவுடன் ஒரு சிறு ஆச்சர்யம். ஏழு மாதமாக கவுன்சிலராக இருக்கும் எல்லோருக்கும் நிச்சயம் பரிச்சயபட்ட குரல்கள். ஒன்றிரண்டு செகண்ட்ஸ் ஓடக்கூடிய ஆடியோ அது வல்ல. ஒருவேளை யாரெண்டு கணிக்க முடியவில்லை என்று சொல்ல. யார் என்று உண்மையிலேயே தெரியவில்லையா அல்லது அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட விருப்பமில்லையா /தையிரியம் எவருக்கும் இல்லையா அல்லது மற்றவர்கள் வாயிலிருந்து வரட்டும் என்ற எதிர் பார்ப்பா என்று தெரிய வில்லை. ஒரு வேளை அவர்கள் யாரெண்டு தெரிந்தால் மட்டும் என்ன செய்ய முயும்???

மகா கணம் பொருந்திய நமது கவுன்சிலர்களில் எத்தனை பேர் இவ்விவகாரத்தை இம்மாத நகர் மன்ற கூட்டத்தில் கேள்வி மற்றும் சம்பந்தவர்கள் மீது action எடுங்கள் அல்லது அவர்களை பதவி விலக சொல்லும் மன தையிரியம் எத்தனை பேருக்கு உள்ளது என்று பொதுமக்களாகிய நாங்களும் மிக ஆவலுடன் உள்ளோம்.

இந்த தன்னிலையை படித்தவுடன் தலைவிக்கு corporate - யில் சொல்லப்படும் leadership skills / team work தெரியவில்லை என்றெல்லாம் நாம் (குறிப்பாக corporate world யில் இருப்பவர்கள்) என்ன கூடும். இவையிரண்டையும் தாண்டி ஊழலை அடியோடு ஒழிக்க பட்டாலும் கூட நாம் எண்ணும் leadership skills / team வொர்க் அடி வாங்கி விடும். எவரும் cooperate பண்ண மாட்டார்கள். coroporate world வேறு.... அரசியல் வேறு.

ஊழலை கண்டுக்காம இருங்கள். உங்களை விட மிக சிறந்த அனுபவ மிக்க, மேன்மை பொருந்திய, கண்ணியம் வாய்ந்த, ஆளத் தெரிந்த தலைவர் / தலைவி எவரும் இவ்வுலகில் இல்லை. நம்ம தலைவர் நல்லவருங்கோ என்று எல்லோரும் சொன்னால் கூட ஆச்சர்யம் இல்லை.

In general - சத்தியங்களும், எவரவர் (தலைவி /கவுன்சிலர்கள் உட்பட) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், தடை கற்களாய் உள்ளார்கள், ஒவ்வொருவரையும் ஆட்டி வைக்கும் சக்தி என்ன என்ற உண்மைகளும் பலநாட்கள் உறங்கியதாக சரித்திரம் இல்லை. நிச்சயம் வெளிவந்தே தீரும். அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உணர முடிகின்றது.

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவனே அனைத்துக்கும் சாட்சியாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [17 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19383

தன்னிலை விளக்கம் அளித்திருக்கும் லுக்மான் காக்கா அவர்களுக்கு KUDOS.

காக்கா அவர்கள் தலைவி மீது சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தருவது தலைவி அவர்களின் கடமையாக தொக்கி நிற்கிறது. தலைவி சரியான நேரத்தில் உரிய பதிலைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இதைப்போல மற்ற உறுப்பினர்களிடமிருந்தும் ஹக்கான தன்னிலை விளக்கங்கள் அல்லது உறுதி மொழிகளை வாங்கி அதே ஹக்கோட எங்களுக்கு தெரியப்படுத்துங்களேன்.

முடிஞ்சா இந்த கோடாலி காம்புகளுக்கு பிடி போடுற வேலையை செய்யுற அந்த பரோபகாரி பெயரையும் அதே ஹக்கோட வெளிய கொண்டு வாங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [17 June 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19384

லுக்மான் பாய், உங்களுடைய தன்னிலை விளக்கம் உண்மையாக இருப்பின் தலைவி இவ்விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இருப்பினும் உங்களுடைய குற்றச் சாட்டுகளுக்கு தலைவி என்ன காரணங்களை கூறப் போகிறார்களோ! என்னவோ!!! இரு தரப்பாரிடமும் விளக்கங்களை கேட்டு முடிவெடுப்பதுதானே இஸ்லாம் நமக்கு கற்று தரும் பாடம்.

kayalpatnam.com, தலைவியிடமும் தன்னிலை விளக்கம் பெற்று வெளியிடுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. எலி எப்போது மாட்டும் என பூனை காத்திருக்கிறது!
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [17 June 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19386

தன்னிலை விளக்கம் கொடுத்து தன்னை நீரூபிக்க முனைந்துள்ள கவுன்சிலர் லுக்மான் அவர்களுக்கு ஒரு சபாஷ்.

அதே நேரத்தில், எடுப்பார் கைப்பிள்ளையாகவோ - பிறரின் பினாமியாகவோ கருத்தோ, கட்டுரையோ எழுத எண்ணமில்லாமல், சுயமாக சிந்திக்கும் நிலையில் இருக்கும் என்னால் சில கேள்விகளை மனதிற்குள் போட்டு புதைக்க இயலாததால் இங்கே கொட்டுகிறேன். திருவாளர் லுக்மான் அவர்கள் இதற்கு பதிலளிப்பார்களாக!

(1) சமீபத்தில் இந்த தளத்தில் வெளியிடப்பட்ட ஆடியோ பதிவு சில நகர்மன்ற உறுப்பினர்களின் உரையாடலைக் கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்பேர்ப்பட்ட கறுப்பாடு உறுப்பினர்களைக் கண்டிக்கவும் கவுன்சிலர் லுக்மான் அவர்கள் தவறவில்லை. அதே நேரத்தில் எங்களை விட - ஊரில் இருக்கும் அனைவரையும் விட மிக அருகில் தினமும் இருந்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களுக்கு - அவரது பெயரை வெளிப்படுத்துவதில் என்ன தயக்கம்?

(2) இந்த ஆடியோ பதிவு, அதனைத் தொடர்ந்து தன்னிலை விளக்கம் என எதிலுமே தொடர்பில்லாதவர் நகர்மன்றத் தலைவி அவர்கள். அப்படியிருக்க, தன்னிலை விளக்கம் என்ற பெயரில் கால் பக்கத்திற்கு கவுன்சிலர்களை பெயர் சொல்லாமல் குற்றம் சாட்டும் நீங்கள், மீதி வரிகள் அனைத்தையும் தலைவி பெயரில் புகழ்மாலை பாடி அர்ச்சனை செய்திருக்கிறீர்களே, இது பொருத்தமானதுதானா?

களவுக்குத் துணியும் கவுன்சிலரைக் கூட நாகரிகம் கருதி பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் தங்களுக்கு, தலைவி மீது அப்படி என்ன கோபமோ?

(3) உண்மையிலேயே இந்த தலைவி தாங்கள் சொல்வது போல் குறைகளைக் கொண்டிருக்கலாம். அதற்கான அவர்களின் விளக்கம் கிடைக்காத வரை இதுகுறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. எனது கேள்வி என்னவெனில், தலைவி மீதான தங்கள் அர்ச்சனையை தனி அறிக்கையாகக் கூட அளித்திருக்கலாமே? தாங்கள் செய்யவில்லையா அல்லது இந்த இணையதளத்தினர் அதற்கு மறுத்தார்களா?

(4) தாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை தங்களது வார்டுக்கு என்னென்ன செய்துள்ளீர்கள் என்று பட்டியலிடச் சொன்னால் சிலவற்றை தாங்கள் பட்டியலிலாம். எனது கேள்வி என்னவெனில், தாங்கள் தங்கள் வார்டுக்கு செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டீர்களா? ஆம் என்றால் உங்களை விட சிறந்த கவுன்சிலர் உலகத்திலேயே இருக்க முடியாது. இல்லையென்றால், அது அதுக்கு உரிய காலம் வருமபோது செய்வார்கள் என்று உங்கள் வார்டு மக்களும், நாங்களும் இருக்கவா? அல்லது இது உங்களது நிர்வாகத் திறமையின்மை என்று பிரச்சாரம் செய்யவா? எதை நீங்கள் இது விஷயத்தில் விரும்புகிறீர்களோ, அதை விருப்பத்தை உங்கள் தன்னிலை விளக்கத்திலும் காண்பித்திருக்கலாமே?

(5) தங்கள் வார்டில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகள் அனைத்தும் தாங்கள் மட்டுமே செய்தவையா? அல்லது நகர்மன்றத் தலைவர் என்ற அடிப்படையில் தலைவியின் ஒத்துழைப்பும் தேவைப்பட்டதா?

தலைவியின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது என்றால், தலைவி இது விஷயத்தில் ஒத்துழைத்தார்களா, இல்லையா?

ஒத்துழைத்தார்கள் என்றால், இது அவர்களும், நீங்களும் சேர்ந்து ஊருக்கு செய்த நன்மைகள் இல்லையா? இப்படியிருக்க, தலைவியை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற “தலைவி தலைவலி” தங்களுக்கு என்று ஏற்பட்டது? யார் ஏற்படுத்தியது??

(7) தங்கள் வார்டில் தங்களுக்காக வாக்களித்த - வாக்களிக்காவிட்டாலும் உறுப்பினர் என்ற அடிப்படையில் உங்களை நம்பியிருக்கிற அனைவரிடமும் தாங்கள் நல்ல பெயரை எடுத்துவிட்டீர்களா? இல்லையென்றால் உங்களை பொறுப்பிற்கு தகுதியில்லாதவர் என்று கூறலாமா?

(8) எடுத்ததற்கெல்லாம் தலைவியை விமர்சிப்பதையே தொடர்கதையாகக் கொண்டுள்ளீர்கள் தாங்கள் என்பதை நான் நன்கறிவேன். எனது கேள்வி என்னவெனில், தங்கள் வார்டைச் சார்ந்த ஒருவர் உறுப்பினர் என்ற அடிப்படையில் தங்களிடம் தெருவில் குடிநீர் குழாய் உடைப்பெடுத்துள்ளது என்று (உதாரணத்திற்கு) ஒரு குறையைத் தெரிவித்தால், தாங்கள் முதலில் செய்ய வேண்டியது:-

(அ) அக்குறை சரியானதுதானா என்பதை நேரில் பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

(ஆ) அக்குறையை சரி செய்ய வெண்டிய பொறுப்பில் இருக்கும் ஃபிட்டர் அவர்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.

(இ) அவர் உடனடியாக களத்தில் ஊழியர்களை இறக்குகிறாரா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

(ஈ) வேலை நடக்கும்போது அது சரியாக நடைபெறுகிறதா என மேற்பார்வையிட வேண்டும்.

(உ) தாங்கள் சொல்லியும் ஃபிட்டர் ஆள் அனுப்பாவிட்டால், திரும்பவும் நினைவூட்ட வேண்டும்.

(ஊ) அதற்குப் பிறகும் நடக்கவில்லையென்றால் நகராட்சி ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும்.

(எ) அதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், ஆகக் கடைசியாக நகர்மன்றத் தலைவருக்கு தெரிவித்து நடவடிக்கைக்கு முனைய வேண்டும்.

(ஏ) இத்தனையையும் செய்ய முடியாதவர் அல்லது செய்யத் துணியாதவர் இந்த பொறுப்பிற்கு வந்திருக்கக் கூடாது. வந்த பிறகுதான் இப்படி என்றால், இப்போது ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த முறைப்படிதான் தாங்கள் செய்து வருகிறீர்களா? நான் கேள்விப்பட்ட வரை, தங்கள் வார்டில் தாங்களே முன்னின்று செய்து முடிக்கும் அளவிலான ஒரு சிறு குறையை மக்கள் சொன்னால் கூட உடனடியாக தலைவியின் போன் நம்பரைக் கொடுத்து பேசச் சொல்வதாக அறிகிறேன். (இது தாங்கள் மட்டுமல்ல! கிட்டத்தட்ட அனைத்து கவுன்சிலர்களுக்குமே தற்போது இதுதான் வேலையாக உள்ளது என்றும் அறிந்துள்ளேன்) அது உண்மைதானா? உண்மையெனில், தாங்கள் எல்லாம் தங்களின் பிஸினஸ் கெடாமல் பக்குவமாகப் பார்த்துக்கொள்ளலாம். இயன்ற வேலையைக் கூட செய்யாமல் இருக்கலாம். தலைவி மட்டும் எல்லா கவுன்சிலர்களின் சிரமங்களையும் தலையில் போட்டுக்கொள்ள அவர் என்ன தங்கள் அனைவருக்கும் அடிமை சாசனம் எழுதித் தந்துள்ளாரா?

(9) இத்தனையையும் தாண்டி தங்கள் வார்டில் தலைவி அவர்கள் வராமலேயே தாங்களே முன்னின்று நடத்த வேண்டிய பணிகளில் தாங்கள் இயலாமலோ அல்லது வேண்டுமென்றோ வராமல் இருந்தபோது தலைவி அவர்கள் தங்களது வார்டுக்குச் சென்று செய்த பணிகளுக்காக என்றாவது அவர்களை ஒருமுறையேனும் பாராட்டியதுண்டா?

தலைவி ஒன்றும் செய்யவில்லை என்று தன்னிலை விளக்கத்தின் முக்கால் பகுதியில் மூக்கால் அழுது வடித்துள்ளீர்களே? உண்மை அதுதானா? அப்படியானால்,

(அ) அரசு நூலகத்திற்கு அரசு திட்டத்திலிருந்து தொகை பெற்றுத் தந்ததாகக் கூறப்பட்டதே அது?

(ஆ) ஊழல் பேர்வழிகளுக்கு சாதகமாக ஒளித்து மறைத்து விடப்பட்ட ஏலத்தை திறந்த வெளியில் நடத்தியதன் மூலம் நகராட்சிக்கு நல்ல வருமானத்தை ஏற்படுத்தித் தந்ததாக இந்த தளத்தில் செய்து வெளிவந்ததே அது??

(ஒரு லாரி தண்ணீரை கிணற்றிலிருந்து எடுத்து ஒரு வீட்டில் அளிக்க 1,500 ரூபாய் பெறப்படுகிறது என்று அறிகிறேன். ஒரு நாளைக்கு பத்து லோடு எடுத்தாலே ஒருநாள் வருமானம் 15,000 கிடைக்கும் என்றிருக்க, அந்தக் கிணற்றுக்கு ஒரு வருட குத்தகையையும் வெறும் 9,000 ரூபாய்க்கு எடுத்திருந்தார்களே குத்தகைக் காரர்கள்? இதற்கு முன்னிருந்த தலைவர்களோ, வியாபாரம் செய்யும் தாங்களோ, தங்களது வியாபாரத்தில் ஒப்பந்தம் செய்தால் இப்படித்தான் கவலையின்றி ஒப்பந்தம் செய்வீர்களோ?)

(இ) நகராட்சி பேரூந்து நிலையத்திலுள்ள கடைகளை ஏலம் எடுத்து பல காலமாக வாடகை கட்டாமல் இருந்தவர்களை அழைத்துப் பேசி, வாடகையைப் பெற நடவடிக்கை எடுத்தார்களே அது???

(ஈ) குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் நோக்கத்துடன் தாங்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களையும், சென்னையில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவும், தூத்துக்குடியில் கலெக்டரை சந்திக்கவும் அழைத்துச் சென்றார்களே? அது????

இத்தனையும் எனக்குத் தோன்றிய கேள்விகள் மட்டுமே. சகோதரர் லுக்மான் அவர்களே, தங்களை நான் குறைகாண்பதற்காக இக்கேள்விகளைக் கேட்கவிலலை. மாறாக, சம்பந்தமேயில்லாமல் தறுதலைகளை இனங்காட்ட வேண்டிய தன்னிலை விளக்கத்தில் தலைவி புராணம் பாடியுள்ளீர்களே அதுதான் ஏனென்று புரியவில்லை. இது யாரை திருப்பதிப்படுத்த தாங்கள் செய்தது?

கண்ணியத்திற்குரிய தலைவி அவர்களே, தாங்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஊருக்கு உழைக்கத்தான் இந்தப் பொறுப்பில் இருக்கிறீர்கள் என்பது உண்மையானால், இணையதளம் வரை வந்து விட்ட இந்த அறிக்கைக்கு தகுந்த விளக்கம் தந்து உங்களது மானத்தையும், ஊர் மானத்தையும் காப்பாற்றுங்கள்!

ஒருவேளை தங்களிடம் குறைகள் இருந்தால், கவுரவம் பார்க்காமல் அதனை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வதாக வாக்களியுங்கள்!!

அயராத வேலைப்பளு என்றெல்லாம் காரணம் காட்டி தயவுசெய்து இந்த அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருந்துவிடாதீர்கள்.

அட்மின் உள்ளிட்ட இணையதள நிர்வாகிகளே! கவுன்சிலர் லுக்மான் அவர்களின் அறிக்கையை வெளியிட்டு எங்கள் மனதை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள தாங்கள் அதற்கான விளக்கத்தையும் பெற்று வெளியிடுவதைக் கடமை என்று கருதி செய்வீாகள் என்ற நம்பிக்கையுடன்,

ஹாமித் ரிஃபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by PROF.DR.MOHAMED YASIN (UNIVERSITY OF DAMMAM) [17 June 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19387

Dear Mr.Lukman ,

Peace be upon you

You have written a statement hereby that Though she (Chairman Mrs.Abitha Sheik) had been found unhappy in early days apparently since the days she assumed the charge as Chairman, she is being supported by your panel of councilors.

I strongly disagree the above statement.

I am delighted to say that our chairman has got the sufficient leadership quality and she know to lead the team of councilors. She might be new to the post of chirmanship but she is not new to the responsibilities.

We feel proud of your honesty and cleanness from the bribes. But, there are three segments in managing a team "Capability, Responsibility and Confidentiality" .

Never mind to say that when she requires to be confidential she must have to be. It doesn't mean that she is not responding.

We should not forget also her honesty and her capability of bringing the notice of higher commissioners and various government officials towards kayalpatnam for its development at various occassions passed.

It is good human ethics that Though we dont appreciate lets not critisize.

Your credit never miss you if you really deserve but lets not aspire to talk about others Credibilty and Capability.

May the Almighty comfort all our lives.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [17 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19390

முதல்ல இந்த நகர்மன்றதோட வரவு செலவு கணக்கு அறிக்கை வெளியிட சொல்லுங்களேன் பார்ப்போம்.

pipe மாட்டுறதுக்கு, FIRE ENGINE க்கு PHONE பண்ணுறதுக்கு எல்லாம் ஒரு தலைவர் போனால்தான் வேலை நடக்குமா? உண்மையாக உழைத்தால் விளம்பரம் தானாக வரும்.

சென்னை போய் வந்ததற்கு பலனாக நம் நகர்மன்றதிற்கு கிடைக்க போகும் திட்டம் மற்றும் நிதி ஆதாரம் என்ன என்ன தெரிவிக்க முடியுமா?

வெளிப்படையான இந்த நகர்மன்ற கூட்டங்களில் நம் ஊரை சேர்ந்த அனைத்து ஊடகங்களுக்கும் அனுமதி உண்டா?

சும்மா பாடுறதை விட்டுட்டு நம் ஊருக்கு ஏதாவது நல்லது செய்யுற வழிய பாருங்கப்பா.

அனைத்து தரப்பையும் அரவனைத்து நல்ல திட்டங்களை ஊருக்கு கொண்டு வருகிற வழியை பாருங்க. முதலில் ஊருக்கு தேவையானதை செய்யுங்க.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by vilack sma (HCM Vietnam) [17 June 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 19391

உண்மையை உறைத்தீர்கள் லுக்மான் காக்கா .இப்படிப்பட்ட தலைவியை தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றினோம் என்று மார்தட்டிய அந்த மெகா பெரியவர் இதற்கு என்ன சொல்வாரோ தெரியவில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Cnash (Makkah) [17 June 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19393

நேற்று முன்தினம் வளைந்து கொடுப்பது எப்படி என்பது பற்றி நமது கவுன்சிலர்களில் விளக்கங்களை பார்த்து இப்படி கொள்ளையடிப்பதற்கென்றே நகர் மன்றத்தில் நுழைந்துள்ள கேடுகேட்டவர்களில் நிலையை நினைத்து நமக்கு நாமே இவர்களை தேர்ந்தெடுத்த பாவத்திற்காக நொந்து கொண்டோம்..

அப்படிபட்ட கயவர்களை கூட கண்டிக்க மனம் இல்லாத சிலர்கள் இங்கே மீண்டும் அதே புராணத்தை தலைவி சரி இல்லை, பெரியோர்களை மதிக்காத தலைமை என்றெல்லாம் புலம்பினார்கள், வீணான குற்றச்சாற்றை இந்த இணையதளம் மீதும் வைத்தனர்.

இந்த தலைவி அவர்கள் கொள்ளைக்கு தடையாய் இருக்கிறார் என்பது மற்றும் எல்லோருக்கும் தெளிவாய் தெரிகிறது! இது போன்ற கொள்ளை பல ஆண்டு காலமாய் நடந்து வருவதும், முந்தைய நகராட்சியில் மதிப்பு மிக்க தலைவர்கள் அவர்கள் நல்லாட்சி தந்தும இவர்கள் போன்று சம்பாதிக்க உள்ளே நுழைந்தவர்களை தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்கி வைக்கவில்லை என்பதை முன்னாள் உறுப்பினர் திரிதுவராஜ் உட்பட நியமான சிலர் மூலமும், அவர்கள் செயல்மூலமும் பட்டவர்த்தமாக அறிய பட்டதே!!

இப்படிபட்ட கொள்ளையர்களை பற்றி பேசி கொண்டு இருக்கும் பொது அவர்கள் யார் என்பதை ஊருக்கு அடையாளம் காட்டும் இந்த தருணத்தில்.. லுக்மான் அவர்கள் நீங்கள் அந்த உரையாடலில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்து இருந்தும் நீங்கள் முந்தி கொண்டு நான் அதில் இல்லை என்று சத்தியம் முதல் முபாஹலா வரை ஏன் சென்றீர்கள் என்று தெரியவில்லை!! அந்த உரையாடலில் ஈடுபட்டவர்கள் 3-4 பேர் மட்டுமே, மற்ற 18 உறுபினர்களில் யாரும் வாய் திறக்காத போது நீங்கள் மட்டும் அவசர மறுப்பு தெரிவிக்க எந்த ஒரு தேவையும் இல்லை!! உங்களை யாரும் அதில் இணைத்து பேசவும் இல்லை!!

அப்படிப்பட்ட சூழலில் இன்று, ஒரு அதிரடி அறிவிப்பு தலைவி மேல் குற்றம்சாட்டி வந்திருப்பது, ஆச்சர்யமாக உள்ளது!! இப்படி எல்லாம் பட்டியல் போட்டு குற்றம்சாட்டும் அளவுக்கு எந்த ஒரு தவறும் இல்லை என்பது உங்களில் விளக்கத்தை படிக்கும் எங்களுக்கு விளங்குகிறது... உங்களை மதிக்கவில்லை உறுபினர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பது தான் தலையாய குற்றசாட்டாக உள்ளது!! வேறு வார்த்தையில் சொல்ல போனால் அன்று சில உறுப்பினர்கள் நேரிடையாக சொன்ன வளைந்து கொடுக்கணும் என்ற விவாததிற்கு உங்களில் இந்த குற்றசாட்டு வலு கொடுத்து விடுமோ என்ற அச்சம் தான் உள்ளது?

புதிய நகர்மன்றம் இந்த தலைவி தலைமையில் ஊரில் பாலாறும் தேனாறும் ஓட வைப்பார்கள் என்று யாரும் சொல்லவில்லை. குறைந்தபட்சம் நிர்வாக ரீதியான நடவடிக்கை டெண்டர், ஏலம் போன்ற பிரச்சனைகளில் தலையீட்டு ஒழுங்கு படுத்துவார்கள் , லஞ்சம், ஊழல் கட்டுபடுத்துவார் என்ற நம்பிக்கையில் தான் ஆதரித்தோம்,, நாங்கள் கண்டவரை பட்டியல் இட கூடிய அளவுக்கு எந்த குறையும் காணவில்லை,

ஆனால் அவரில் நடவடிக்கைகளுக்கு சில உறுப்பினர்களில் ஒத்துழைப்பு ஆரம்பத்தில் இருந்தே இல்லை என்பதை குடியரசுதின கொடியேற்றத்தில் இருந்து நகரமன்ற மாதந்திர கூட்டம் வரை கண்டுகொண்டிற்கிறோம், அவர்களின் ஒத்துழையாமைக்கு காரணம் அவர்களில் கொள்ளைக்கும், அவர்களை ஆட்டுவிப்பவர்களின் கொள்கைக்கும் தலையாட்டாமல் இருந்தது!

ஆனால் உங்களின் ஆதங்கம் உங்கள் அறிவுரையை கேட்கவில்லை, உங்களை மதிக்கவில்லை என்பது!! ஆக மொத்தத்தில் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் இன்று தலைமைக்கு எதிராக புறப்பட்டு விட்டீர்கள்!! அன்று ஒருவர் நினைத்தது(!) எப்படியும் கவிழ்த்து விடுவோம் என்று கங்கணம் கட்டி கொண்டு இருந்தவர்களுக்கு இன்று உங்கள் அறிக்கை அச்சாரம் போட்டுள்ளது!

மனிதர் என்ற முறையில் அவரின் தனிப்பட்ட நடவடிக்கையில், குணங்களில் குறை கண்டால் அதை உரியவரிடம் சுட்டி காட்டுவதுதான் அதற்க்கு பரிகாரம் தவிர இப்படி ஒரு நிர்வாகம் பல இடறல்களை தாண்டி நடந்து கொண்டிருக்கும் போது முறிக்கும் விதமாக உங்களின் தனிப்பட்ட சில பிரச்சனைகளை ஒரு பொதுதளத்தில் போட்டு கட்டுபாட்டை உடைப்பது சிறந்த செயல் அல்ல என்பது உங்களுக்கும் தெரியும்!!

இந்த தலைவியை தேர்தெடுக்க பாடுபட்டோர் ஊழலற்ற நகராட்சி ஊருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தானே தவிர, தலைவி எது செய்தாதலும் தலையில் தூக்கி வைத்து ஆட அல்ல , இப்போது குற்றம் சாட்டி இருக்கும் லுக்மான் அவர்களில் குற்றசாட்டில் தலைவி மீது தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றசாட்டோ, இல்லை நிர்வாக குறைபாடோ, இல்லை ஊழலுக்கு உடந்தையாகவோ அல்லது செய்வோரை தடுக்காமலோ இருந்து இருப்பதாக குற்றம் சொல்லி நிருபித்தால் எங்களை போன்றவர்களும் இன்றே தூக்கி எறிந்து விட்டு நீங்கள் காட்டும் நல்ல தலைமையை நோக்கி வருகிறோம்!!

இப்போது உள்ள குற்றசாட்டுக்கு தகுந்த முறையில் பதில் அளிக்க கூடிய பொறுப்பும், கடமையும் தலைவிக்கு உள்ளது என்பதால் விரைவில் உங்கள் பதிலையும் சேர்த்து எதிர்பார்கிறோம், அவர்கள் சொல்லுவதையும் கேட்டு விட்டு இரு பக்கங்களையும் ஆராய்ந்து பேசுவது தான் சரியான அணுகுமுறையை இருக்கும்.. அல்லாஹ் யாவற்றையும் மிக அறிந்தவன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by OMER ANAS (DOHA QATAR.) [17 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19401

கொஞ்சமாவது இந்த வலைத்தளம் நியாயமாக செயல் படுகிறது என்றால், குடாக் புகாரியின் கேள்விக்கு பதில் சொல்லட்டும். அல்லது லுக்மான் காக்காவின் தன்னிலை விளக்கத்துக்கு பதில் சொல்லட்டும். அல்லது தலைவி தன் நிலை விளக்கம் தரட்டும்.உண்மையினை மக்கள் தெரியட்டுமே!வாப்பா இவங்கோ உண்மையினை சொல்ல மாட்டாங்கோ!

காரணம்,ஐக்கிய ஜமாத்தை குடைந்த மெகாவுக்கு,தலைவி யார் என்பது முக்கியமில்லை. ஐக்கிய ஜமாத்தை தோற்கடிப்பதே முக்கியமாக இருந்தது. அதில் காரியம் சாதித்த மேதைகள் தன்னை அறியாமலேயே உறுப்பினர்கள் யார் வருவா என்று புரியாமல் போனது.இது அவர்களின் முதிர்ச்சி இன்மையினை காட்டுகிறது.

இதற்கிடையில் வந்த தலைவியோ மதில் மேல் பூனையாக இருக்கிறார்! இதில் ஊர் எப்படியா நன்மை பெரும்?நன்மை பெரும்? நன்மை பெரும்?

நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்தவுடன் தானும் கேட்டார்.
சிலர் அல்லும் பகலும் தெரு கல்லா இருந்து விட்டு அதிஸ்ட்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்!

விளித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்.
பின்போ கோட்டை விட்டோரெல்லாம் நாட்டை விட்டார்.
தூங்காதே தம்பி தூங்காதே! சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (kayalpatnam) [17 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19402

சகோதரர் லுக்மான் அவர்கள், தான் தூய்மையானவன் என்ற நிலையை உறிதிபடுத்த முயற்சிப்பதை உண்மைலேயே பாராட்டுகிறேன் .முன்னரும் பாராட்டியுள்ளேன்.அதே நேரத்தில் தலைவியை பற்றி கூறுகின்ற குற்றசாட்டுக்கு சகோதரர் ரிபாய் சொல்வதுபோல்.

கண்ணியத்திற்குரிய தலைவி அவர்களே, தாங்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஊருக்கு உழைக்கத்தான் இந்தப் பொறுப்பில் இருக்கிறீர்கள் என்பது உண்மையானால், இணையதளம் வரை வந்து விட்ட இந்த சகோதரர் லுக்மான் அவர்கள் அறிக்கைக்கு தகுந்த விளக்கம் தந்து உங்களது மானத்தையும், ஊர் மானத்தையும் காப்பாற்றுங்கள்!

18 உறுப்பினர்களின் பேச்சையும் தலைவி அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால் அந்த 18 பெரும் அவர்களின் பகையாளிகள் அல்ல. தலைவியின் தன்னுடைய நிலைப்பாடு சரியானதுதான் என்ற தீவிர தன்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை

தலைவிமேல் நீங்கள் சொல்லும் குற்றசாட்டு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் இமயமலை அளவு போன்றதல்ல என்பது உங்கள் விளக்கதிலேயே தெரிகிறது. அவர்களின் சுயநலத்தையோ, ஒருசிலருக்கு சாதகதன்மையையோ,சில பண முதலைகளின் பக்கம் சாய்ந்தோ , ,ஊழல் ஊறிய செயலோ, அல்லது நமக்கு இவ்வளவு கிடைக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வளவுதான் கிடைக்கும் என்று சொல்லி தலைவியே ஊழல் பணத்தை பகிர்ந்தளித்தார் என்பன போன்ற ஈனசெயல் பட்டியலை தலைவியின் மீது சுமத்துகிறீர்களா?

அல்லது நாங்கள் 18 பெரும் புண்ணிய புதல்வர்கள் , எந்த தேவைக்கும் ,ஆசைக்கும் அப்பாற்பட்டவர்கள், அப்படிபட்டவர்களிடத்தில் தலைவி தன் எண்ணத்தை திணிக்கிறார் என்கிறீர்களா? நாங்கள் 18 பெரும் அப்பழுக்கற்ற யோக்கியர்கள் எங்கள் எண்ணப்படி தலைவி ஆட மறுக்கிறார் என்கிறீர்களா?

உங்கள் கூற்று வாதப்படி உண்மை என்று வைத்துகொண்டாலும், ஆடியோவில் பேசிய கருப்பு ஆட்டைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லையே. அவரும் சேர்ந்து தானே 18 பேர்கள்.

தலைவியை தாக்க துணிந்த உங்களுக்கு அந்த கருப்பு ஆட்டை அடித்து விரட்ட துணிவில்லையே ஏன்? அந்த கருப்பு ஆடு யாரென்று சகோதரர் முஸ்தாக் அவர்கள் போட்டு உடைத்து விட்டார்.

அந்த கறுப்பு ஆடு எங்கிருந்து யாரால் எந்த சக்தியால் நிறுத்தப்பட்டு, நோட்டுகள் பறக்கவிட்டு ,வெற்றிபெற்று பின்பு பதவி வழங்கப்பட்டு, அந்த கருப்பு ஆட்டை பற்றி அணுவளவும் கூட தெரியாது என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்ல முடியுமா ?

சொல்ல மாட்டீர்கள். உங்கள் உள்நோக்கம் குறிக்கோள் அந்த கருப்பு ஆட்டை பற்றியதல்ல, .தலைவியை தகுதி இழக்க செய்வது ஒன்றேதான் உங்கள் லட்சியமாக இருக்கிறது.

நாங்கள் 18 பேரும் பாலாரும் ,தேனாறும் பெருக்கெடுத்து காயல் நகரை சூழ்ந்துகொள்ள சபதம் எடுத்து முயற்சித்து கொண்டிருக்கிறோம். இந்த தலைவி அதற்க்கு முட்டுகட்டையாய் இருக்கிறார். இருக்கலாமா? என்ற பொருள் பட லுக்மான் அவர்கள் கேள்விகனைகளை காயலர்களின் மீது தொடுக்கிறார். கண்ணிய மிகு காயல் கண்மணிகள் தான் பதில் கூற வேண்டும்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. லுக்மான் காக்காவிற்கு இந்த லுக்மான் மௌலானாவின் வாழ்த்துக்கள்...!
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR) [17 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19404

அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் தன்னிலை விளக்கம் மிக அருமை.அந்த ஒலிநாடாவில் கேட்ட குரல் யாருடையது என்று விளங்காத எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு தங்களின் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது.பொதுவாழ்வில் தவறு செய்தவர்களை விட தவறு செய்யாதவர்கள் பயப்படும் காலம் இது.எனவே உங்கள் சுய விளக்கம் இங்கே முக்கியமே.அது உங்கள் அடையாளமாகவும் பிற்காலத்தில் உணரப்படும்.

அதே வேளை,தலைவியைப் பற்றிய தங்கள் கருத்து கொஞ்சம் அதிகப்படியோ என்றே எனக்கு தோன்றுகிறது.தனது நிர்வாகத்தில் தவறுகள் நடந்துவிடக்கூடாதே என்ற முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க நினைத்ததே இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம்.அவர்களைப் போலவே,தவறு செய்யக்கூடாது என்ற ஒரே நேர்கோட்டில் பயணிக்கிற நீங்களே அவர்களை குறை கூறுவது (அதுவும் இந்த இடத்தில்) சற்றும் பொருந்தா ஒன்று.

அந்த ஒலிநாடாவை கேட்டீர்கள்தானே...... அது போன்ற சிங்கங்களுக்கு மத்தியில் காட்டின் தலைமை பதவியில் அமர்ந்த மானின் நிலமையில்தான் தலைவி அவர்களை பார்க்கிறேன். கடந்த முறை தலைவராக இருந்த பெரியவர் அவர்களையே இந்த சிங்கங்கள் படுத்திய பாடு உங்களுக்கு தெரியும்தானே...

அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்ற உங்களின் நேர்மை உங்களுக்கு பெருமை அல்ல அது கடமை...அது தவறியவர்களுக்கு அது சிறுமை...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by ansari (abu dhabi) [17 June 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19406

இந்த அறிக்கை இல் சகோதரர் லுக்மான் அவர்கள் தான் அந்த உரையாடலில் இல்லை என்பதையும் அப்படி அதில் கலந்து கொண்டது யார் என்பதையும் சொல்லி இருந்தால் நன்று .அது இல்லாமல் எதற்கு தேவை இல்லாமல் நகர் மன்ற தலைவரை பற்றி விளக்கம் தரு கி றார் என்பது தரிய வில்லை.அந்த குறையை தனியாக ஆறு மாதத்தில் தலைவர் என்று தனியாக சொல்லி இருக்கலாம் . ஒருவளை அடுத்தவரின் குறையை மறைகின் ராரோ அப்படி பார்த்தாலும் தலைவி குறையும் மறைக்கப ட வண்டிய ஓன்று தான் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [17 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19407

சகோதரர் லுக்மான் அவர்கள் சொன்னது போல் தலைவி நடந்து கொள்வாரே யானால் கண்டிப்பாக வருந்ததக்கது .ஒரு சமபவத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மறைந்த நமதூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி VMS .லெப்பை மாமா அவர்கள் ஒரு பழுத்த காங்கிரஸ் காரரும் கூட .மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி யோடு கூட தொடர்பு உள்ளவர் அப்படி பட்ட அருங்குனாளர் விளக்கு மாமா அவர்கள் 1989 ஆம் ஆண்டு தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்முதலமைச்சராக நமதூருக்கு வருகை தந்த போது காயல் மாநகர் DMK சார்பில் வரவேற்பு கொடுக்கபட்டது மிகப்பெரிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர், காங்கிரஸ் DMK பரம விரோதிகளாக இருந்த நேரத்தில் கூட DMK நிருவாகிகளோடு கலந்து ஆலோசித்து நமதூர் நல விசயமாக ஊர் நலம் சம்பந்தமாக கலைஞ்சரை சந்தித்து DMK மேடையில் ஏறி பொன்னாடை போர்த்தி மனு கொடுத்தார்கள்.

மற்றுமல்ல எந்த விஷயம் ஆனாலும் நமதூர் முக்கியஸ்தர்களிடம் ஆலோசனை பெற்றார்கள் .தன்னுடைய சொந்த காரிலே தான் அரசு அலுவலகம் செல்வது வழக்கம் . நானும் தூத்துக்குடி கலைக்டர் திரு ஆறுமுகம் அவர்களை சந்திக்க சில முறை சென்று இருகிறேன் ( அப்போது நான் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் )என்ன பெருந்தன்மை பெரியவர் சிறியவர் என்று பாராமல் அரவணைத்து கலந்து ஆலோசித்து செயல் பட்ட VMS விளக்கு மாமாவை இந்நேரம் நினைத்து பார்கிறேன் .

அடுத்து அதிகாரி களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் விரட்டி வேலை வாங்கிய எனது பாட்டனார் பாவலர் அப்பா அவர்கள் பேரூராட்சி தலைவர் ஆக இருந்த சமயம் நடந்த சம்பவத்தை பெரியவர் ஜகரிய அப்பா அவர்கள் என்னிடம் சொன்னது. பேரூராட்சி தலைவராக பாவலர் அப்பா அவர்கள் இருந்த போது குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக அன்றைய மாவட்ட ஆட்சி தலைவர் திரு பத்மநாபன் அவர்கள் திருநெல்வேலியில் கலந்துரையாடல் நடத்தினார் . நமதூர் தண்ணீர் பிறர்சினை பற்றி பாவலர் அப்பா அவர்கள் பேசிய போது இடை மறித்து கலைக்டர் காயல் பட்டினம் பேரூராட்சி பாக்கி நிறைய அரசுக்கு தர வேண்டும் .அதை உடன் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியபோது இபோது கூட்டப்பட்ட கூட்டம் தண்ணீர் பிறர்சினை பற்றி தான் அதற்காக மட்டும் தான் அரசு இந்த கூட்டத்தை கூட சொல்லியுள்ளது தண்ணீர் தர முடியுமா முடியாதா என்று கோபமாக கூறி யுடன் திரு பத்மநாபன் அவர்கள் பாவலர் அப்பா விடம் மன்னிப்பு கேட்டு உடனே அவன செய்யுமாறு கட்டளை இட்டார்கள்.

இப்படி பல்வேறு பட்ட சம்பவங்கள் கூறினார்கள். அது போன்று MKT அப்பா, வாவு செயத் அப்துல் ரஹ்மான், போன்ற பெரியவர்கள் போன்று நடப்பு தலைவியும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட உறுப்பினர்கள் பொது நல மன்றங்கள் மற்றும் நமதூர் பெரியோர்களுடன் கலந்து ஆலோசனை செய்து பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

பதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வர வேண்டும் என்ற பாடல் வரிகளை நினைவூட்ட விரும்புகிறேன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by ராபியா மணாளன். (புனித மக்கா.) [18 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19408

குத்தாலத்துலெ இடி இடிச்சா கோயாம்புத்தூருலெ மழை பெய்யுதாம்!

பனை மரத்துலெ தேள் கொட்டினா தென்னை மரத்துலெ நெரிகட்டுதாம்!

என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு அன்னைக்கே எனக்கு சந்தேகம் வந்திச்சு! அடுத்த செய்தி தன்னிலை விளக்கம்ன்னு வந்ததும் அது உறுதியாயிடுச்சு.

லுக்மான் அவர்களே! தாங்கள் கவுன்சிலருக்காக போட்டியிட்ட போதே சத்தியம், சாத்தியம்,என அறிக்கை வெளியிட்டு தங்களுக்கென்று ஒரு தனி இமேஜை உருவாக்கினீர்கள். உண்மைதான்! உங்களை யாரும் லஞ்சம் வாங்குபவர் என்றோ? ஏமாற்றுப் பேர்வழி என்றோ இதுவரை சொன்னதில்லை! தாங்களும் அப்படிப் பட்டவர் இல்லை!

இரு கவுன்சிலர்கள் ஈனத்தனமாக வருமானம் ஈட்டுவதைப் பற்றி கலந்துரையாடிய கருமாந்தரம் இத்தளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டபோது சம்பந்தா சம்பந்தமில்லாமெ தாங்களே முன் வந்து நான் நல்லவன், நாணயமானவன், முஆபலாவுக்கு வரத் தயார்ன்னு கருத்து எழுதினீங்க.

இது எப்படி இருக்குன்னா? பரீட்சையிலெ பிட் அடிச்ச மாணவனை வாத்தியார் வகுப்பில் கண்டிக்கும்போது சம்பந்தமே இல்லாத ஒரு மாணவன் தானாகவே முந்திக்கொண்டு (தங்களைப் போலவே) “சார்....நான் ரெம்ப நல்லவன் சார். பிட்டே அடிக்க மாட்டேன். அல்லாஹ் மேலெ சத்தியம் வேணாலும் பண்ணுறேன் சார்”ன்னு சொல்லுவதைப் போல் உள்ளது. இதைக் கேட்ட வாத்தியாருக்கு அந்த மாணவன் மீது எந்த விதமான நம்பிக்கை வருமோ? அந்த விதமான நம்பிக்கைதான் இப்ப உங்க மேலெ எங்களுக்கு வந்திருக்கு.

நுழலும் தன் வாயால் கெடும்,
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி,
எங்க அப்பன் குதருக்குள்லே இல்லெ
என்பது போன்ற இப்பழமொழிகளுக்கேற்ப தாங்கள் தற்போது நடந்து கொண்ட விதம், எங்கே தங்களின் அந்த இமேஜைப் பாதிச்சிடுமோ?ன்னு பயமாயிருக்கு!

அனுபவமின்மை, அனுசரணையின்மை, ஆளுமைத் திறன் இன்மை, பிறர் சொல் கேளாமை, தன்னிச்சை, திடீர் முடிவு, இப்படி பல விதமான அர்ச்சனைப் பூக்களை தலைவி மீது அள்ளி வீசும் தங்களிடம் இத்தளத்தின் அறிவுஜீவிகளான கருத்தாளர்கள் அற்புதமான பல கேள்விக் கனைகளைத் தொடுத்துள்ளார்கள். அத்தனைக்கும் பதில் சொல்ல தாங்கள் கடமை பட்டுள்ளீர்கள்.

நீங்க சொல்லுறதைக் கேட்டு நடக்கணும்,
உங்களை அனுசரிச்சு அதாங்க வளஞ்சு கொடுத்து போகணும்,
கூட்டம் போடச் சொன்னா போடணும்,
அதில் நீங்க சொன்ன...ஸாரி.. சொல்லிக் கொடுத்த கேள்விகளைத்தான் தலைவி கேட்கணும்,
அதிகாரிகளை திட்ட மாட்டிருக்காங்க,
மெம்பரைத்தான் வாங்கு வாங்குண்னு வாங்குறாங்க,
இது போன்ற சப்பைக் குற்றச்சாட்டுகளைத் தலைமைக்கு தாங்கள் வைக்கும்போது, உங்க சொல் கேட்டுத்தான் நடக்கணும்னா அப்புறம் தலைவி எதற்கு? தலைமை எதற்கு?

நகர்மன்றத் தலைவி மீது ஏதேனும் ஊழல் குற்ச்சாட்டுகள் அல்லது வீண் விரயங்கள் இருந்தால் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

பொதுவாகத் தமிழ் நாட்டிலுள்ள நகர்மன்றங்களின் உறுப்பினர்கள் யாவரும் உத்தம நபிகளாரின் திண்னைத் தோழர்கள் அல்ல! சத்திய வழியில் சற்றும் சருகாமல் நடப்பதற்கு! ஆபிதா அவர்களின் ஆணித்தரமான சில முடிவுகளால் மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கும் சில உறுப்பினர்களும், சில ஊள்ளூர் கொடைவள்ளல்களும், ஊழல் நடத்த வழியின்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பது உண்மையிலும் உண்மை!

உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை, மதிப்பு மரியாதை, எதிர்பார்ப்பு, இவைகள் ஏராளம்! எனவே, பிறர் பொறுப்புகளைக் குறை கூறும் முன் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தாங்கள் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் துணை நிற்பான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by salai s nawas (singapore) [18 June 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 19410

உங்களின் சுய விளம்பரம் ஜாஸ்தியா போச்சு.

ஒன்னே ஒன்னு தெரிஞ்சிகோங்க!!! குறையற்றவன் இறைவன் ஒருவனே... உங்களுக்கு தெரியாமல் உங்களுக்குள்ளும் பல குறைகள் இருக்கும். அதையெல்லாம் வெளிச்சம் போட்ட காட்ட முடியும்?

- நகராட்சி ஆரம்பம் முதலே, அது எப்படி நடக்கிறதென்று பார்ப்போம் என்று சவால் விட்டு போன எத்தனை உறுப்பினர்கள்

- எந்த நல்ல திட்டத்தை சென்னைக்கு கொண்டு சென்றாலும், என் தயவு இல்லாமல் எதுவும் ஊருக்கு நல்லது நடக்கவிட மாட்டேன் என்று மார்தட்டும் ஒருவர்

- எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்கும் துணை தலைவர்

இவர்களையெல்லாம் வைத்துகொண்டு நல்லாட்சி நடத்தமுடியாதுதான், அதனால்தான் இவர்களை அடக்கி ஆட்சி நடத்துகிறார்.

குறை இருப்பின் அதற்குரிய கண்ணியத்தோடு சுட்டிகாட்டுங்கள். வெளிச்சம் போடாதீர்கள்.

- அன்புடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Salai.Mohamed Mohideen (USA) [18 June 2012]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 19411

முந்தைய கமன்ட்டின் தொடர்ச்சியாக....

தன்னிலை விளக்கத்தில்... தான் கரை படியாதவன் என்பது ஒகே.தான் செய்த சாதனைகளை கூட சொல்லியிருக்கலாம் . அக்குரலுக்கு சொந்தக்கார்கள் மீது… தான் நகரமன்ற கூட்டத்தில் கேட்டறிந்து அவர்களுக்கு சட்டபடி தகுந்த தண்டனை வாங்கி தருவேன் என்று உறுதி கூறி இருந்தால் 'சபாஷ்.. great job' எனலாம். ஆனால் தலைவியை சந்தடி சாக்கில் இழுத்ததின் அவசியம் மட்டும் விளங்க மாட்டேங்குது.

ஒரு சகோதரர் குறிப்பிடதுள்ளது போல... இதனை தலைவியிடம் நேருக்கு நேர் சொல்லி இதனை சரி படுத்தியிருக்கலாம். இதனை மார்க்க பற்று மிக்கவர்கள், ஒற்றுமை விரும்பிகள், பிறருக்கு களங்கம் விளைவிக்காத நல்லவர்கள் என்று அறிய படுபவர்களிடம் இந்த நற்பண்பை எதிர்பார்க்கலாம். பொதுவாக அவர்களிடம் இவைகள் உண்டு. அது இவ்விசயத்தில் நடந்ததா என்று தெரியவில்லை.

"இனி அவர்களை புறக்கணித்து விட்டு, ஆலோசனைகள் நடத்தினால் மட்டும்தான் நான் கலந்து கொள்ள இயலும்" - இது இவர்களுக்கு மட்டும்தானா? இது எல்லோருக்கும் பொருந்தும் என்றால்... நிச்சயம் உங்களால் ஒரு கூட்டத்தை கூட கலந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது என்று எண்ணுகின்றேன். ஏனென்றால் கடந்த ஆறு மாதத்த்தில், இவர்களை போன்று பலர் உள்ளனர் (குறைந்த பட்சம் ஒன்றிரண்டு பேராவது ???) என்று நிச்சயம் உங்களை போன்றோர் அறிந்திருப்பீர்கள். ஏன் கண் கூடாக அல்லது காது பட அறிந்திருப்பீர்கள்.

இங்கே நம் சகோதரர்கள் (துதாபடிகள் என்று எண்ணினாலும் பரவா இல்லை) நிறைய நியாமான கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்க்கு பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நடுநிலையாளர்கள் அனைவரும் 'உங்களைபோன்று நல்லவர்கள்/கரை படியாதவர்கள் ' என்று அறிய பட்டவர்களுக்கு, இது மாதிரி நடந்தால் கூட... சம்பந்தபட்டவர்களிடம் இதுபோன்ற அத்தனை கேள்விகளையும் இன்சா அல்லா நிச்சயம் கேட்போம் என்பதில் எவ்வித மாற்று கருத்து இல்லை.

ஒரு வேண்டுகோள். கரை படியாதவராக மட்டும் இருந்தால் மட்டும் போதாது அல்லாவா... கடந்த ஆறு மாதத்தில் ஒவ்வொரு கவுன்சிலர்களும் (தலைவரையும் சேர்த்து) தங்கள் வார்டுக்கு புரிந்த சாதனைகளை பொதுமக்களுக்கு தெரியபடுத்துங்கள். அதனை சம்பந்தபட்டவர்கள் (வார்டு மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற சர்வே ஒன்றையும் நமதூர் இணையதளங்கள் செய்ய முன்வர வேண்டும்) என்ன சொல்கிறார்கள் என்பதனையும் அறிந்து கொள்ள ஆவல்!!

Moderator: பிற ஊடகங்களை மேற்கோள் காட்டும் வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. பல கருத்தாளர்களின் இதுபோன்ற வாசகங்களுக்கும் இவ்வாறே தணிக்கை செய்யப்பட்டுள்ளது. கருத்தாளர்கள் இத்தளத்தில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தமது கருத்தைப் பதிவுசெய்ய அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by A.Lukman (kayalpatnam) [18 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19412

சகோ .ஹாமீத் ரீபாய் ,அஸ்ஸலாமு அழைக்கும்.

தங்களின் கேள்விக்கான பதில்கள் .

1 ,அந்தக்குரல்கள் 10 வது மட்டும் 7 வது வார்டு உறுப்பினர்களின் குரல் போன்று உள்ளது .அல்லாஹ் அறிவான். சம்பவத்தின் போது நான் அந்த இடத்தில இல்லை .

2 ,தலைவிக்கி எதிராக அணைத்து உறுப்பினர்களையும் அவர்கள் சித்தரிப்பதை போல் பேசியதால்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க நேர்ந்தது.

3 ,தலைவியிடம் குறைகளை நேரில் சொன்னபிறகுதான் அவர் அதை கண்டுகொள்ளததால்தான் வெளியிட நேர்ந்தது.

4 ,என் வார்டில் என்ன செய்தேன் என்பதை நான் தம்பட்டம் அடிக்க விரும்பவில்லை .என் தெரு மக்களிடம் கேட்டு பாருங்கள்.

5 ,தலைவிக்கும் சேர்த்து தான் மக்கள் வாக்கு அளித்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடவேண்டாம் .

7 ,இதுவரை என் வார்டில் எனக்கு நல்ல பெயர் தான் உள்ளது தாம், என்னை கெட்டவன் என்று சொன்னால் நான் கவலை படப்போவதில்லை .

8 ,புகார்கள் முறைப்படிதான் தெரிவிக்கப்படுகிறது .

9 ,அப்படி நான் செய்ய முடியாத பணிகளை என் வார்டில் தலைவி முன்னின்று நடத்தும் சூழல் இதுவரை ஏற்படவில்லை ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு அவர் தலைமை வகித்ததை நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால் ரேஷன் கடையை எங்கள் பகுதிக்கு கொண்டு வந்ததில் தலைவியின் பங்கு எதுவும் இல்லை M J செய்யது இப்ராகிம் அவர்கள் தான் இதில் பெரும் பங்கு வகித்தார்கள்.

9 ஆ ,முந்தைய மன்றம் எடுத்த முடிவிற்கு நான் பதில் சொல்ல முடியாது.

இறுதியாக, ரீபாய் அவர்களே நானும் உங்களைப்போல் தான் தலைவியை ஆதரித்து வந்தேன் இனியும் நல்ல விசயங்களில் தொடர்ந்து ஆதரிப்பேன் .நீங்கள் வெளியில் இருந்து பார்க்குறீர்கள் அதனால் குறைகள் உங்களுக்கு சரியாக தெரிவதில்லை. நாங்கள் உள்ளே இருந்து பிரச்சனைகளை சந்திதுக்கொண்டிரிக்கிறோம் அதனால் குறைகளை சொல்கிறோம் .தயவு செய்து கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதை விட்டுவிட்டு கண்களை திறந்து பாருங்கள் அப்போதுதான் சில குறைகளும் தென்படும்.

பல பேர் இப்போது படம் பார்த்து கதை எழுதுகிறார்கள்.

A .லுக்மான்
1 வது வார்டு உறுப்பினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by MAHMOOD HASAN(mammaash) (QATAR) [18 June 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 19414

என்ன இது சிறு புள்ளதனமா இருக்கு... எங்க அப்பன் குதற்குள்ள இல்லைன்னு சொன்ன மாதிரி இருக்கு...

சும்மா நான் நல்லவன் நா நல்லவன்னு சொல்றத விட்டு விட்டு எவன் நல்லவன் இல்லையோ அவன கண்டிக்கிற வழிய பாருங்க ...

அத விட்டு போட்டு தலைவி ந சொன்னா நிக்க மடிக்றாங்க ந சொன்னா உக்கார மாடிக்ராங்கனு சின்ன பிள்ளைங்க மாதிரி சொல்றத நிப்பாட்டிட்டு ஏன் அப்படி தலைவி பண்றாங்கன்னு யோசிச்சி அவங்களோட உக்காந்து பேசுங்க இதெல்லாம் நிர்வாக பிரச்னை....

பிறகு எங்க வீட்ல தண்ணி வரலை..எங்க முடுக்குல தண்ணி கட்டிட்டு தலைவிதான் காரணம் என்று சொல்லி கொண்டிருந்தவர்களுக்கு இது போன்ற அறிக்கை எல்லாம் ஹல்வா சாப்ட மாதிரி ..அறிக்கை இடும் போது யோசித்து இடுங்கள் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227) [18 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19415

தன்னிலை வாசகங்களில் (1) தலைவி அவர்கள் சில உறுப்பினர்களிடம் கடுகடுத்த முகத்துடன் கடுஞ்சொற்களை உபயோகித்த சம்பவங்களும் உண்டு.

இது மழலை பள்ளி நடத்தும் தலைவரும் மற்றும் நகரமன்ற தலைவியுமாகிய பொறுப்புள்ள பெண்ணுக்கு உகந்த நாகரீகம் அல்ல..! தவறான செயல்..! தலைவி தன்னை திருத்தி கொள்ள வேண்டும். கண்டிக்கத்தக்கது..!

தன்னிலை வாசகங்களில் (2)

எனவே எனது சக நகர்மன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பது என்னவென்றால் இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்களை புறக்கணித்து விட்டு, ஆலோசனைகள் நடத்தினால் மட்டும் தான் நான் கலந்து கொள்ள இயலும். கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.

லுக்குமான் அவர்களை பாராட்டுகிறேன்.. மேலும் பொது மக்களாகிய நாங்கள் 18 உறுபினர்களின் குரல் வாய்ஸ் கேட்டு பழகியது இல்லை.. ஆனால் நீங்களோ.. உறுப்பினர்களிடம் தினமும் நகர் மன்றத்தில் சந்தித்து பேசி வருவதால் அந்த கேடு கெட்ட உரையாடலில் ஈடுபட்டவர்களின் குரல் வாய்ஸ் உங்களுக்கு தெரியவில்லையா...?

தலைவி அவர்களின் கடுகடுத்த முக பாவனை, உறுபினர்களிடம் பேசுவதில் கடுஞ்சொற்க்கள், இப்படி பல குறைகளை தலைவியை அடையலாம் சுட்டி காட்டி வெளிபடுத்தும் நீங்கள் அந்த கேடு கெட்ட உரையாடலின் குரலுக்கு சொந்தகாரர்கள் யார்..! அவர்கள் பெயரை சுட்டி காட்டி குறிப்பிட்டு இந்த தன்னிலை விளக்கத்தில் தெரியபடுத்தி இருக்கலாமே...?

இந்த அறிக்கை லஞ்சம் வாங்க துடியாய் துடிக்கும் அதிகாரிகளுக்கும், சில உறுப்பினர்களுக்கும், தேர்தல் நேரத்தில் பண முதலைகள் ஆப்பு வாங்கி வலி அனுபவித்தவர்களுக்கு இது இந்த ஒருதலை பட்ச அறிக்கை வர பிரசாதமே..!

இந்த அறிக்கை ஒருதல பட்சமாகவே தோன்றுகிறது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (kayalpatnam) [18 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19418

ஆஹா பூச்சைகுட்டி வெளியில் வந்து விட்டது.பல பேர்களின் கிடுக்குபிடி கேள்வியில் கருப்படுகளின் விபரத்தை வேண்டா வெருப்போடு, இருந்தாலும் இருக்கலாம் என்று லுக்மான் அவர்கள் ஒப்புகொள்கிறார்.

எப்படிப்பட்ட ஈனத்தமான ஊழல் விவகார பேச்சின் பறிமாற்றங்கள். அதன் சுவடு தெறிந்த அந்த நிமிடமே ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டிய கடமை,நான் உண்மையான உறுப்பினர் என்று சொல்லும் உங்களுக்கு உண்டல்லவா?

அதைவிட்டு விட்டு நாங்கள் 18 உறுப்பினர்களும் கூட்டாக இருந்தும் தலைவி எங்களை கண்டுகொள்ளவே இல்லை,எங்களக்கு முக்கியத்துவம் இல்லை இப்படியொரு அநியாயம் நடத்தும் தலைவி தேவையா?என்பது தானே உங்கள் எண்ணாம்.

உங்கள் எண்ணப்படி எல்லோரும் உங்கள் பின்னல் வருவார்கள் என்று வைத்துகொண்டால், தலைவி அவர்கள் ஊழலின் உச்சாணியாக இருக்கவேண்டும்,என்னுடைய ஆலோசனைப்படிதான் நகராட்சி நடக்கவேண்டும் என்று ஆணையிடும் அசுரர்களின் அடிவருடியாக இருக்கவேண்டும், எந்த விஷியத்தையும் மக்கள் முன்வைப்பதாவது மண்ணாங்கட்டியாவது, நமக்குண்டானத்தை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்துவிட்டு, எல்லோருக்கும் பிரியமானவர் போல, பச்சோந்தி போல்பாவலா காட்டிவிட்டு பங்களாவில் உள்ளவர்கள் போடும் பாதையில் பவனி வந்து பொருளாதாரத்தில் போதிய வாழ்வை பெருக்க நினைக்கும் தலைவியாக இருப்பார்களேயானால் உங்கள் 18 உறுப்பனர்களின் பின்னால் ஒரு படையே புறப்பட தயாராகி இருக்கிறது .

ஆனால் 18 ல் எத்தனை பெருச்சாளிகளை உங்கள் சோத்துமூட்டையில் கட்டிகொண்டு இருக்கிறீர்கள் என்றுகூட உங்களுக்கு தெரியாமல் சோத்து மூட்டைக்கு ஆபத்து என்று கொக்கரிக்கும் உங்கள் குரல் உண்மையான குரல்தான் என்று உங்களை படைத்த, நீங்கள் 5 வேலை தொழும் அந்த அலாஹ்வை சாட்சியாக வைத்து கூறமுடியுமா?

உணமையாக நாம் வாழவேண்டும் என்பதுமட்டுமல்ல முக்கியம், மாற்றாரின் மீது புகார் செய்யும் பொழுது அது உண்மையாக மனசட்சிபடிதான் இறைவனுக்கு பயந்து நேர்வழியில் தான் குற்றம் கூறுகிறோம் என்ற பயம் இல்லாவிட்டால் நீங்கள் செய்யும் எந்த இபாததும் இறைவனிடம் போய் சேருமா என்பதை உங்கள் மனதையே கேட்டு கொள்ளுங்கள்!. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Muthu Ibrahim (Hong Kong) [18 June 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 19419

இப்படி தலைவிக்கும் - உறுபினர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தால் நம் நகர்மன்றமும் fail ஆகும், நகர்மன்ற தீர்மானங்களும் fail ஆகும். என்னத்த சொல்ல....என்னத்த செய்ய......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 June 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19422

அதிர்ச்சியடைகிறேன். தாங்கள் மனம் வெதும்பி இந்த இனைய தலத்தில் சொன்னதை இலங்கையில் ஒரு கொடைவாசச்தலத்தில் இருந்து பார்க்கும் துரதிர்ஷ்டம். குளிருக்கு பதிலாக புழுக்கம் ஏற்பட்டது. நீங்கள் சொல்வது உண்மையானால் இதை ஒரு பொதுக்கூட்டம் போட்டு உங்களை போன்ற ஒத்த கருத்துள்ளவர்கள் மக்கள் மன்றத்துக்கு வாருங்கள். இணையதளங்களை எல்லோரும் பார்க்கும் வாய்ப்பு இல்லை. காக்கும் கரங்கள் மேடையையும் இதற்கு பயன்படுத்தலாம். தவறில்லை.

பணியை துறந்து செல்வதால் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. தலையணையை மாற்றுவதால் தலைவலி போய்விடாது. எனவே ஊர் நன்மையை கருதி செயல்படுங்கள். தகுதியுள்ளவர்கள் ஒதுங்கி கொண்டால் தகுதியில்லாதவர்கள் பதவிக்கு வந்து ஆட்டம் போடுவார்கள். அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

கடந்த கால நகர்மன்றங்கள் இப்படி சுறுசுறுப்பாக வெளிப்படையாக இயங்கியதில்லை. தலைவர் அவர்கள் ஒரு பெண் என்பதால் அவர்களுக்கு இயற்கையிலேயே அல்லாஹ் சில குறைகளை வைத்திருக்கிறான். இல்லாவிட்டால் 1 ,24 ,000 நபிம்மார்களை அனுப்பியவன் அவர்களில் ஒரு பெண் நபியை அனுப்பியிருக்கமாட்டான? நமது குறைகளை வெளியில் சொல்வதால் நமக்கு தானே அசிங்கம் நமது பல்லை குத்தி நாமே நாற்றம் பார்கலாமா? சிந்தித்து செயல்படுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [18 June 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19428

கவுன்சிலர் லுக்மான் அவர்கள் எனது கேள்விகளுக்கு தந்துள்ள விடைகள் முழுமையானவைதானா என்பதை அவரும், நானும், நீங்களும் நன்கறிவோம். ஒருவேளை நேரமின்மையால் முழு விளக்கம் தராதிருக்கலாம். நேரம் வரும்போது தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

எனினும், அவரது நேரத்தை மிச்சப்படுத்த அவரே பதிலளிப்பது போல் உள்ள அவருடைய முந்தைய கருத்துப் பதிவின் சில வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கடந்த நகர்மன்றத் தேர்தல் முடிந்து, அனைவரும் பதவியேற்ற பின், துணைத்தலைவர் தேர்தலும் முடிந்து, பட்டாசு - பரிவாரங்களுடன் வெற்றிவிழா எல்லாம் கொண்டாடி முடித்த பின்பு, அப்பாய்ண்ட்மெண்ட் கமிட்டிக்கான உறுப்பினர்கள் தேர்தலின்போது போட்டியிட்டு சில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட பின்னர், கவுன்சிலர் லுக்மான் அவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்த கருத்துக்கள்தான் இது!

செய்தி எண்:
http://kayalpatnam.com/showcomment.asp?id=13672

இச்செய்திக்கு லுக்மான் அவர்கள் அனுப்பிய கருத்தில் பொட்டில் அடித்தாற்போலுள்ள வரிகள் இதோ...

“இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள் காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள். நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே இருக்கலாம்.

ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே. ஒருவேளை தன்னை விட யாரும் நல்லவர் என்ற பெயர் எடுதுவிடக்கூடதே பயமோ என்னவோ. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.”

இதுதான் அந்த வரிகள்...

என்ன, சரியா புரியலையா? சரி விடுங்க! உங்களுக்கும் பழைய செய்தியையெல்லாம் கின்டிப்பார்த்து படிக்க எங்கே நேரம்? இதோ அவரது முழு கருத்தையும் நானே தருகிறேன். கருத்தின் முடிவில் அடியேனும் சில வாசகங்களை உதிர்த்துள்ளேன். படிக்காம விட்டுறாதீங்க. இதோ கவுன்சிலர் லுக்மான் அவர்கள் பேசுகிறார்கள் கேளுங்கள்:-

Comment Reference Number: 13672

அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

இங்கு பதவிகள் பங்குவைகப்படுகின்றன.

யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட
யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.

அரசியல் பதவிக்கான தகுதிகளே வேறு.
அது இல்லாதது என்னிடம் உள்ள குறைதான். ஒப்புக்கொள்கிறேன்.

இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது. அங்கு
எடுக்கப்படும் முடிவுகள் இங்கு
அமல்படுதப்படுகின்றன. எண்ணிக்கைகள் வேறுபடுவதில்லை.

அது இரவு இது பகல்.

“இரண்டரை ஆண்டு காலக்கெடுவில்
எல்லோருக்கும் பதவிகள்..........”
கேட்க அழகாகத்தான் இருக்கிறது.

விட்டுக்கொடுப்பர்களா பார்ப்போம்.
இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு

மீண்டும் சிலர் காட்டில் மழைபெய்யலாம்.
நீர்க்குமிழிகள் போன்று வாக்குறிதிகள்
நிலைக்குமா பார்போம்.

இவன் தானும் படுக்க மாட்டான்;
தள்ளியும் படுக்கமாட்டன்.
என்னைப்பற்றி ஒரு வுறுப்பினர்
இன்னொரு வுருப்பினரிடம் சொன்னதாக
அவர் என்னிடம் சொன்னார்
அவருக்கு என் நன்றி.

இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள் காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள். நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே இருக்கலாம்.

ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே. ஒருவேளை தன்னை விட யாரும் நல்லவர் என்ற பெயர் எடுதுவிடக்கூடதே பயமோ என்னவோ. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

மக்கள் மாற்றத்தைதான் விரும்பினார்கள். அதனால்தான் 16 ம பெற்றுபெருவாழ்வு வாழமுடியாமல் 16 ம் போயிற்று.

ஆனால் நாங்கள் மாறவில்லையே...

காத்திருங்கள் மக்களே 2016 வரும்.
பிறகு 2021 ....2026 ...2031 ........

இறுதியில் கியாமத்.....
அப்போது நாம் விரும்பாவிட்டாலும்
நிச்சயம் மாற்றம் உண்டு.

90 -95 % வாக்குபதிவு தேவை இல்லை.
எ இங்கு எந்த பதவிக்கு யார் வரவேன்றும் என்பதை பெரிய மன்னர்கள் முடிவு செய்கிறார்கள்.

அவர்தம் மந்திரிகளும் மச்சான்களும் அமல்படுதுகிரார்கள்.

மக்கள் பார்பதில்லை...
ஆனால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

result அடுத்த கூட்டத்தில் அல்ல இறுதி கூட்டத்தில்....
ஆம் மறுமையில் மறந்து விடவேண்டாம்.

வாக்களித்த அறுவருக்கும்
வாக்களித்து என் பணிச்சுமையை கூட்ட விரும்பாத பதிநோருவருக்கும்,
அவர்களுக்கு வாக்களித்த கண்ணியமிக்க வக்களர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இப்போது முடிவு செய்யுங்கள்
நரகத்தின் அடிதட்டா
சொர்கத்தின் மேல்தட்டா.

இன்னும் அவகாசம் இருக்கிறது
வாருங்கள் தோழர்களே தோழியரே
ஒன்றாகக்கூடி நன்றாக செயல்படுவோம். நேர்வழியில்.

A .லுக்மான்
1ஆவது வார்டு கவுன்சிலர்“

இதுதாங்க கவுன்சிலர் திருவாளர் லுக்மான் காக்கா அவர்களின் முழு கருத்து! நல்லா தட்டு தட்டுன்னு தட்டியிருக்கிறார். அவர் அப்போது உதிர்த்த இந்த கருத்துக்களின்படி அவருக்கு மேல்தட்டு என்றால், இப்போது என்ன தட்டு? ஒருவேளை இப்போ மேல்தட்டுன்னா, அப்போ சொன்ன கருத்துக்கு என்ன தட்டு??

இப்போ நான் கேட்க வருவது என்னன்னா, அப்பாய்ன்ட்மென்ட் கமிட்டி தேர்தலின்போது இருந்த சூழ்நிலை இப்போது அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. இப்படியிருக்க, அன்று தங்களால் விமர்சனத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளாக்கப்பட்ட உங்கள் சக உறுப்பினர்கள் இன்று பாவமே செய்யாத மலக்குமார்களாகிவிட்டார்களா? அதாங்க, திருந்திட்டாங்களா??

இல்லே... ஒருவேள நீங்க மன்னிச்சிட்டீங்களா?

ஆக, ஒருவர் உங்களது திருவாயால் விமர்சனத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளானால், அவர் திருந்தவே மாட்டார் என்ற நிலையிலும், நீங்கள் மன்னித்துவிடுவீர்கள். காரணம், இது என்ன உங்கள் வியாபாரமா, வைராக்கியம் காட்டுவதற்கு?? நகர்மன்றம்தானே??? போனா போகுது!

அன்று பாத்திலாக (வீணாக) இருந்தது
இன்று ஹக்காகிப் போனது!

இன்று ஹக் பாத்திலாக இருக்கிறது.
நாளையே இந்த பாத்திலும் ஹக்காகும்.

சாரி, நாளையே என்பதை திருத்திக்கொள்கிறேன். நாலு மாசம் கழித்து!

எல்லோரும் ஒரே குரல்ல உரக்க சொல்லுங்க!!!
தலைவி சரியில்லே............
தலைவி சரியில்லே...............
தலைவி சரியில்லே.................

என்ன? தலை வலிக்குதா?? எனக்கும்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [18 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19429

லுக்மான் அவர்களின் கருத்தில் தவறில்லை. தலைவி அவர்கள் மிகுந்த முன்ஜாகிரத்தை உணர்வுடன் செயல்படுவதையும் தவறு என கூற முடியாது சில வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்து விட்டதே.... அதுவே நமது ஆதங்கம். தலைவி அவர்கள் இதற்க்கு தன்னிலை விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by OMER ANAS (DOHA QATAR.) [18 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19432

எல்லா கருத்தாளர்களும் இது வரை நடந்த நகராட்சியையும், அதன் தலைவர்களையும் லஞ்சவாலர்களாக சித்தரிக்கவில்லை! அல்ஹம்துலில்லாஹ்! மாற்றாக உறுப்பினர்களின் லஞ்சத்துக்கு ஒத்துபோனதாகவும் யாரும் சொல்லவில்லை. மாற்றாக வருடத்திற்கு நான்கு முறை கூட வராத தலைவர்கள் என்றும் உருப்படாத நிர்வாகம் போல் நேற்று முளைத்த லக்கான் கோழி குஞ்சுகள் இன்று யாரோ ஒரு துபாய் தன வந்தரின் மகுடிக்கு பாம்பாய் ஆடிக்கொண்டு அடுத்தவர்களை குறை கூற விளைகிறார்கள்.

ஆனால் இன்றோ உத்தமர் ,தலைவிக்கு துணை நிற்ப்பவர் என்று லுக்மான் காக்காவிற்கு , முந்தய கருத்தில் உத்திரவாதம் கொடுத்து விட்டு அதே லுக்மான் காக்கா தலைமை சரியில்லை என்று அறிக்கை விடும் போது சிலருக்கு கசக்கிறதா என்ன? உண்மை சில சமயம் கசக்கத்தானே செய்யும்! நண்பர்களே! மனசாட்ச்சி உள்ளோருக்கு தெரியும் mega யாருக்காக செயல் பட்டது என்று!

தினமும் பஞ்சாயத்துக்கு வந்து போகும் தலைவி சாதித்த காரியத்தை பட்டியலிட முடியுமா சகோதரர்களே! சொல்லுங்கள் கேட்க்கின்றோம். எடுத்ததற்கு எல்லாம் சந்தேகமே நாளை இந்த பெண்ணின் சாதனையாக நம் ஊர் பேசும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Salai.Mohamed Mohideen (USA) [18 June 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19435

சகோதரருக்கு ஒரு சபாஷ் !! ஒரு வழியாக தைரியமாக அக்குரல்களை வெளி கொணர்ந்துளீர்கள்.

"குலையுடன் கூடிய தென்னை மரங்கள்" ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் போல் தெரிகின்றது. கொளுத்தும் வெயிலுக்கு இதமான 'இளநீரை' தர வேண்டியவர்கள். பாவம் அவ்-வார்ட் மக்கள்... அவர்களுக்கு ஒட்டு போட்டு வெற்றி பெற வைத்ததற்கு சரியான 'சவுக்கடி' கொடுத்துள்ளனர். ஊரின் குலையை அடி மண் வேரோடு அறுக்காமல் இருந்தால் சரி.

இத்தனை வெட்ட வெளிச்சமான பின்னரும் கூட இவர்கள் இன்னும் இப்பதவியில் நீடிப்பார்கள் என்கின்றீர்களா என்ன?? நாமெல்லாம் 'ம** விட மானத்திட்க்கு' முக்கியம் தருபவர்கள் அல்லவா.

" இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது" - தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என்று parellel நகராட்சி மன்றத்தை நடத்துபவர்களையும், அதற்க்கு துணை / பணவுதவி புரிபவர்களையும் இதே மன தையிரியத்துடன் வெளிக்கொணருங்கள். வல்ல இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை புரிவானாக !!

"காக்கும் கரங்கள் மேடையையும் இதற்கு பயன்படுத்தலாம். தவறில்லை" என்கின்றார் ஒரு அன்பு சகோதரர். --- 'தேர்தல் விழிப்புணர்வு' தந்த பாடங்கள் போதுமானது. மீண்டும் இவர்களை போன்ற நல்லதொரு தொண்டு அமைப்புகளை இழுக்காமல் இருப்பதே சாலச்சிறந்தது!!

மனிதன் என்ற முறையில் குறை நிறைகள் நிச்சயம் ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது. கருத்து வேறுபாடுகள் மனகசப்புகள் நீங்கி, நகர் மன்றம் நல்ல படி தூய்மையாக செயல்பட ... மாற்ற பட வேண்டிய குணாதசியங்களை மாற்ற வேண்டியவர்கள் மாற்றி நம் நகர்மன்றம் என்றும் சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள். வல்ல இறைவன் அருள் புரிவானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. தன் நிலை மறந்த விளக்கம்
posted by S.A.Muhammad Ali (Velli) (Dubai) [18 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19439

கல்லறைக்கு போகும் முன்னும் கையூட்டுதான் பெரிது என்று எண்ணும் கும்பலுக்கு மத்தியில் உங்களை போன்ற ஒருவர் இருக்கிறார் என்று ஆறுதல் பட்ட என்னை போன்றவர்களுக்கு உங்களின் இந்த அறிக்கை வருத்தத்தை தருகிறது.

மூச்சுக்கு மூச்சு இறைவன் மேல் சத்தியம் செய்து நான் லஞ்சம் வாங்க இல்லை என்று கூறும் உங்களுக்கு லஞ்சம் வாங்கும், வாங்க துடிக்கும் உறுப்பினர்களை மக்களுக்கு இனம் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏன் இல்லை. மாறாக அவர்களுக்கு பரிந்து பேசுவது ஏன்? இமை குற்றம் கண்ணுக்கு தெரியாமல் போனதோ?

நகராட்சி என்ன ஊழல் புரிவதற்கா? அல்லது கார்ப்பரேட் முதலாளிகள் நிழலில் வழிநடத்துவதற்கா? நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் உங்கள் அனுபவமின்மையை பறை சாட்டுகிறது.

ஏதாவது தவறு நடந்தால் தலைவியின் மேல் பழியை போட்டு நாம் தப்பி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட விளக்கமாகவே தெரிகிறது.

தலைவர் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது. அனைத்து உறுப்பினர்களும் தன்னலமற்றவராக பொது சேவை செய்யும் எண்ணத்துடன் இருக்க வேண்டும்.

உங்களை பற்றி வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கே தெரியும் போது தலைவிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சந்தர்பம் நீங்கள் சற்று அவசரப்பட்டு அறிக்கை விட்டதாக தெரிகிறது.

துணிந்து நில்லுங்கள். சூழ்நிலைகளை மனதில் கொண்டு எது நல்லது என்று நீங்களே முடிவு எடுங்கள்.
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும் உள்ளவர்களின் தோலை உரித்து காட்டுங்கள். நீங்கள் தன்னிலை விளக்கம் அளிக்க அவசியமில்லாமல் போகும்.

இப்படிக்கு
S.A.Muhammad Ali Velli


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [18 June 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19440

அஸ்ஸலாமு அலைக்கும். எங்களின் அருமை காக்கா. லுக்மான் அவர்களுக்கு.எம் முடைய வாழ்த்துக்கள்.முதலில்.

தங்களுடைய தன்னிலை விளக்கம் '' ஓகே தான். உங்களுடைய நேர்மை / நல்ல மனசு இவைகளுக்கு எப்போதும் அல்லாஹ் துணை நிர்பானாகவும். உங்களை தேர்வு செய்த கோமான் தெரு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.சந்தேகம் இல்லை.

தாங்கள் கூறியது போன்று தலைவி இப்போது தானே புதியதாக பதவிக்கு வந்து உள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரதில் தங்களின் எண்ணம் & எங்கள் யாவர்களின் எண்ணம் போல நிச்சயமாக இன்னும் நல்ல படி செயல் ஆற்றி நமது ஊர் நகர் மன்றத்தை இந்த தமிழ் நாட்டிலேயே ... முதல் நகர் மன்றமாக மாற்றி காட்டுவார்கள் என்கிற முழு நம்பிகை உள்ளது. தங்களை போன்ற நல்ல மனம் படைத்த நம் உறுபினர் களின் முழுமையான சப்போட்டும் / ஒற்றுமையும் தான் நம் தலைவிக்கு கண்டிப்பாக இப்போதைய சூழ் நிலைமையில் வேண்டும். நிச்சயம் நீங்கள் எல்லோரும் கொடுப்பிர்கள் என்று நம்புகிறோம். நம் ஊரின் நல்ல முன்னேற்றம் தான் நமக்கு அவசியம் தேவை. இளம் துடிப்பும் / செயல் திறனும் உள்ளவர். நாம் இவரை ஒரே குறை கூறி கொண்டு. இவரை சரியானபடி செயல் படுத்த விடாமல்.தடுபதால் யாருக்கு நஷ்டம்??? நமக்கு தானே.நம் ஊர் வளர்ச்சிதானே பாதிக்கும்.

ரயில் இப்போது தானே அதன் பட்டி ( தண்டவாளம் ) மீது ஏற்ற பட்டு உள்ளது.கொஞ்ச தூரம் பயணம் சிறப்பாக போகட்டுமே.அதன் பின்பு தானே நமக்கு முழுமையாக தெரியவரும்.இன்ஷா அல்லாஹ் இந்த ரயிலின் பயணம் மிகவும் சிறப்பாக அமையும் என்று நாம் யாவர்களும் நம்புவோமாக. காரணம். இந்த ரயிலின் ஓட்டுனர் ( தலைவி ) மிகவும் கெட்டிக்காரர் + திறமையானவரும் கூட / இந்த ரயிலில் பயணிக்க கூடிய பயணிகள் ( நம் ஊர் மக்கள் தான் ) மிகவும் நல்லவர்களும் / பொறுமை யானவர்களும் கூட / இந்த ரயில் போககூடிய ஒவ்வரு ஸ்டேசன் மாஸ்டரும் ( நம் உறுப்பினர்கள் தான் ) கூட தான் கெட்டிக்காரர்கள். ஆதலால் நமக்கு எந்த பயமும் இல்லை.இந்த நம் நகர் மன்றம் என்கிற ரயில் சிறப்பாகவே ஓடும் என்கிற முழுமையான நம்பிக்கையோடு நாம் காத்து இருப்போம். நம் என்ன படி ரயில் இந்த 5 வருடதில் நல்லபடி சேர வேண்டிய ஸ்டேசனை சென்று அடையும்.

பொதுவாக ஜனாப் .லுக்மான் காக்கா நீங்கள் யாவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல் பட்டால் தான்.சரிவரும். ஊருக்கும் நல்லது. தயவு செய்து தாங்கள் அனைவர்களும் பொறுமையை கடைபிடித்து.நம் மக்களுகாக உழைக்க வேண்டியது. மக்களாகிய நாங்கள் உங்கள் யாவர்களையும் தான் முழுமையாக நம்பி உள்ளோம்.

ஆமா தம்பி குடாக்.புஹாரி ஏன். மஹா டீமை குறை கூறவில்லையே. காரணம் என்ன ... மறந்து விட்டாயோ.நல்ல முறையில் இன்று நாள் வரை இந்த மஹா டீம் நன்றாக தானே ஊருக்கு நல்லது செய்து வருகிறார்கள்.பாராட்டு வதை விட்டு ... விட்டு நீ குறை கூறாதே...நல்லது ( பொது சேவை ) செய்பவர்களை ஊக்க படுத்தவும்.

இந்த தலைவியை தேர்ந்தெடுக்க பாடுபட்டவர்கள் தலை மறைவாகி விட்டார்கள் என்று நீ குறிபிட்டு உள்ளா ... இப்படி ஒரு மட்டமான என்னமா உனக்கு. இந்த தலைவிக்காக பாடு பட்ட எல்லோரும் .... இன்றும் ....இப்போதும் / எப்போதும் பக்காவாகதான் ஒன்றா துணையாக உள்ளார்கள். தற்போது வரைக்கும் நாம் இவரிடம் முழுமையாக எந்த ஒரு தவறும் காணாத போது....எப்படி இவர்கள் பிரிவார்கள். இந்த தலைவியை கொண்டு நல்லதோர் நகராட்சி தர முடியும் என்று தான் நிரூபணம் ஆகி உள்ளது.புரிந்ததா.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி அங்கே உமக்கோர் இடம் வேண்டும்....!!!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [18 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19441

அன்புள்ள ஏ. லுக்மான் காக்கா அவர்களுக்கு,

இது உங்களுக்குத் தேவைதானா? வேலிக்குள்ளிருந்த பாம்பை எடுத்து.... அதாங்க பனியனுக்குள்ளே விட்ட கதையாகிப் போயிடுச்சே?

எட்டு மாத கால நகராட்சியில் தலைவி சாதிச்சது இருக்கட்டும். உங்கள் தலையில் கொட்டி நீங்க என்ன.... சாதிச்சீங்கன்னு கருத்தாளர்கள் கேட்டால் அதற்கும் தாங்கள் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய் தெருவாசிகளிடம் போய் கேளுங்கள், அல்லாஹ் அறிவான் என மழுப்பி பதில் கூறியுள்ளீர்கள்.

கருத்தாளர்களின் நியாயமானக் கருத்துப் பதிவிற்கு தங்களின் விளக்கம் படம் பார்த்து கதை எழுதுகின்றார்கள் எனும் குற்றச்சாட்டுதான். விடுங்க!

இவங்களாவது படம் பார்த்து தானே கதை எழுதுகின்றார்கள்? இன்னும் சிலர் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்கின்றார்களே? அவர்களை என்னவென்று அழைப்பது?

இறுதியாகக் கேட்கின்றேன். தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? எதற்காக காய் நகத்துகின்றீர்கள்? ஏன் இந்த தடுமாற்றம்?

உங்கள் பழைய கருத்துக்களைப் படித்துப் பார்த்த போது பல விஷயங்கள் தெளிவாகியது. காக்கா! இப்போதைக்கு தங்களுக்கு சற்று ஓய்வும் அமைதியான சூழ்நிலையும் தான் தேவை. வீணாக நீங்கள் மனதைப் போட்டுக் குழப்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.

தாங்கள் நிலையான ஓர் முடிவுடன் நியாயமான குற்றச்சாட்டுகளோடு பிறர் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.

இப்ப சொல்லுறோம் தாங்கள் நல்லவர் தாம்! நல்லவரே தாம்! அல்லாஹ் மீது சத்தியமா நீங்க லஞ்சம் வாங்கவே மாட்டிங்க... தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மனக் குழப்பத்திலிருந்து விரைவில் நிம்மதி கிடைக்க வல்ல நாயனிடம் கையேந்துகின்றேன்.

இனி தன்னிலை விளக்கம், பதில் என்று இழுத்துக் கொண்டே போகவேண்டாம். எல்லாவற்றிக்கும் ஓர் தீர்வு அல்லாஹ்விடத்திலிருந்து நிச்சயமாக உண்டு!

எனவே மனம் தளர்ந்து விடாதீகள். வஸ்ஸலாம்.
என்றும் அன்புடன் உங்கள் அருமைத் தம்பி,
ராபியா மணாளன். புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by AbdulKader ThaikaSahib (Riyadh (Now @ KPM)) [19 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19443

ஜனாப் A. லுக்மான் அவர்களே.... செப்டம்பர் 10, 2011 அன்று www.kayalpatnam.com-இல் வெளியான செய்திக்கும் தங்களின் தன்னிலை விளக்கத்தின் ஆரம்பமும் முரண்பாடாக உள்ளதே???

http://www.kayalpatnam.com/shownews.asp?id=7206

News ID # 7206

“நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 நபர்கள் விருப்பம் தெரிவித்து மனு செய்திருந்தனர். அவர்கள் விபரம்:

1. A. லுக்மான்
2. M.M. அஹ்மத் லெப்பை
3. நெய்னா
4. M.M. பாரூக்
5. மீராதம்பி
6. ஷாஜஹான்

கூட்டத்தில் விலாவாரியாக ஆலோசிக்கப்பட்டு A. லுக்மான் என்பவர் தகுதியான நபராக கருதப்படுவதால் அவர்களை நமது வார்டின் சார்பாக போட்டியிட ஆதரவு தருவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.”
**********************************************
தாங்கள் நகர சபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் ஒருவர் என்றும், அந்த ஆறு நபர்களில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் இச்செய்தி மூலம் தெரிகின்றது, ஆனால் தங்களின் தன்னிலை விளக்கத்தில், “நகர்மன்ற உறுப்பினர் பதவி என்பது நான் ஆசைப்பட்டு இதற்காக கடும் முயற்சி செய்து பெற்றது அல்ல. இந்த பொறுப்பு எங்கள் கோமான் ஜமாஅத்தால் என் மீது அமானிதமாக தரப்பட்டதாகும்.” என்று சொல்றீங்களே?
*****************************************
இதில் எது உண்மை??????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. பதில் தருவீர்களா காக்கா?.
posted by kavimagan kader (qatar) [19 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19444

மரியாதைக்குரிய லுக்மான் ஹாஜி அவர்களிடம் நான் இரண்டே இரண்டு கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். நண்பர் ஹமீத் ரிஃபாய் அவர்களது கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளித்து, பின்னர் நீங்கள் எழுதிய, உங்களது கருத்துக்களிலிருந்தே உங்களது சொல்லும், செயலும் மாறுபட்டது என்பதனை அவர் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றார்.

எனது கேள்விகளுக்கும் பதில் அளித்து,தங்களது நாணயத்தை உறுதிபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

அ) நகர்மன்றத் துணைத்தலைவர் தேர்தலின் போது,லட்சக் கணக்கில் நடந்த குதிரை பேரத்தை நடத்தியவர் யார் என்பதும், அதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் ,உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தைரியம் இருந்தால் அல்லாஹ் மீது ஆணையிட்டு பதில் கூறுங்கள்.

ஆ) சென்னையில் துவங்கி உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் ஒரு கும்பல்,நகர்மன்றத் தலைவிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த தொடர் சதியில் ஈடுபட்டு வருவதைக் குறித்து தாங்கள் அறிவீர்களா? இல்லையா?

எனது இரண்டு கேள்விகளுக்கும் உங்களால் நேரிடையாக பதில் தர முடிந்தால், உங்களது எளிமை மற்றும் நேர்மையின் புகழுக்கு, அது மென்மேலும் புகழ் சேர்க்கும். இல்லையெனில் நீங்களுமா இப்படி என்று எண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. கேப்பில் கிட வெட்டும் கணவான்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [19 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19445

நகராட்சி மன்ற தேர்தலில் "மெகா" ஆற்றிய பெரும் பொறுப்பையும், அதன் மூலம் அதர்மத்திற்கு கிடைத்த பேரிடியையும் தாங்கமுடியாத சிலர், எப்படியாவது மெகாவிற்கு ஒரு களங்கத்தை உண்டுபண்ண வேணடும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உலாவந்த சிலர், அதற்க்கு தங்களின் சூழ்சிகள் பலிக்காததால் நகர்மன்ற தலைவியை சமயம் கிடைக்கும் போதெல்லாம் உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்வைத்து சாடுவதற்கு முன்வந்துள்ளனர்.

மேற்கூறிய சகோ லுக்மான் அவர்களின் சுய விளம்பரத்திற்காக, யாரையோ திருப்திபடுத்துவதர்க்காக தேவை இல்லாமால் நகர் மன்ற தலைவியை சாடுகிறோம் என்று தனக்கு தானே ஒரு அவப்பெயரை சம்பத்தித்துக் கொண்டிருப்பதை இந்த இணையதளத்திலேயே நாம் கண் கூடாகக்கானுகிறோம்.

பாக்கி உள்ள எல்லா கவுன்சிலர்களுடைய பேச்சையும் கேளாமல் என் பேச்சை கேட்டிருக்க வேணடும் என்கிற தோரனியில் அவர்கள் காயை நகர்த்தி இருப்பதும், தனி மனித ஒழுக்கம் என்று தனக்கு தானே டமாரம் அடிக்கும் இவர்கள், நகர் மன்ற தலைவியின் மேல் சேற்றை வாரி இறைத்து எந்த ஒழுக்கத்தை பறை சாற்றவாம் ?

உடனே, இவைகளை எதிர்பார்த்திருந்த ஒரு சில நிழலில் குளிர்காய நினைக்கும் குள்ள நரிகள், இதுதான் சமயம் என்று தங்களின் புத்திசாலித்தனத்தை உலக அரங்கில் பறை சாற்றும் விதமாக, லுக்மான் காக்கா சொன்னது எல்லாமே சரி தான் இப்போது மெகா எங்கே போச்சு? என்று தேர்தலில் பெற்ற தோல்வியை இன்னமும் மனதில் இருத்தி மெகாவை சாடியிருக்கிறார்கள். இது உங்களின் அறைவேக்காட்டு தனத்தைதான் மக்களுக்கு படம் பிடித்து காட்டுகிறது.

ஏன், உங்களுக்கு ஒரு கருத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் போய் விட்டது?. நீங்கள் கருத்து பதிவு செய்யும் போது உங்களின் மனதின் துர்நாற்றமும் கூடவே வருவதால்தான் மக்களுக்கும் உங்களின் உண்மையான முகம் என்ன என்பது தெளிவாகிறது.

நான் அவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்க்க விரும்புகிறேன் " இந்த தேர்தலில் தலைவி வெற்றி பெற்றது அவர்கள் ஜனநாயக முறையில் பெற்ற வாக்குகளாலா அல்லது மெகா தன்னிச்சையாக அவர்களை இப்பதவியில் அமரசசெய்ததா ???

மெகா என்பது ஒரு தனிப்பட்ட வழிகாட்டுதல் அமைப்பாகத்தானே செயல்பட்டது? தீமை விளக்கி நன்மை பயப்பது ஒரு கெடுதலா? அப்படி அதுவே ஒரு கெடுதல் என்றால், மெகா கண்டிப்பாக அதனை இனியும் செய்வதில் பெருமிதம் கொள்ளும்.

தேர்தலில் நீங்கள் செய்த சூழ்ச்சிதான் எத்தனை ??? கெட்ட பெயர்கள், மொட்டை கடிதங்கள், பயமுறுத்தல்கள் என்று ஒரு சராசரி மூஃ மீன் கூட செய்ய தயங்கும் அருவருப்பான நிகழ்வுகளை அரங்கேற்றியவர்கள் தானே ? இவை எல்லாவற்றிக்கும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேணடும்.

சகோதரர் லுக்மான் அவர்களே நீங்கள் நல்லவர்கள் தான் என்று எங்களுக்கு நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம் ஆனால் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் அதேபோலே சகோதர்கள் ரிபாஈ, CNASH, ஆதம் சுல்தான் காக்கா போன்றோர் உங்களிடம் கேட்டுள்ள கேள்விகளே போதும் என நினைக்கிறோம்,

ஏன் நீங்கள் மட்டும் முண்டி அடித்துக்கொண்டு நான் சத்தியமானவன் என்று பதற வேணடும் ? தயவு செய்து இதற்க்கு மேலும் நீங்கள் "நான் மட்டும்தான் சத்தியவான்" என்று பறைசாற்ற வேண்டாம். அதற்க்கு மேலும், ஒரு நிர்வாகத்தில் பொறுப்பான அங்கத்தினராக இருக்கும் நீங்கள், இப்படி பித்னாக்கள் உருவாக்கும் வகையில் மக்கள் மன்றத்தில் ஒரு பிரளயத்தை உண்டு பண்ணாதீர்கள் !!!

தவறு என்பது வேறு. நிர்வாக சீர்கேடு, லஞ்ச லாவண்யம் என்பது வேறு. தவறுகள் இல்லாத மனித இனமே இல்லை- ஆனால் அது மறுபடி மறுபடியும் நிகழாத வரை. தவறுகள் முறையான வழியில் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படலாமே. தனி மனித தவறுகளுக்கும் MEGA தான் பொறுப்பா?

நல்ல ஒரு தலைமை கிடைத்திருக்கிறது, அவர்களிடம் சில குறைகள் இருக்கலாம், ஆனால் நமதூர் நலனிற்காக ஒருவர் பொறை இருவர் நட்பு என்ற பொன்மொழிக்கேற்ப, பொறுத்துக்கொண்டு தலைமைக்கு பூரண ஒத்துழைப்பு நல்குங்கள். ஒரு செழிப்பான தாயகத்தை உருவாக்குங்கள். இல்லையேல், நாங்கள் கேள்விப்படுவது போல எல்லா கவுன்சிலர்களும் கைகோர்த்து நமது நகர் மன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போகிறார்கள், நல்லதொரு தலைமையை நாம் இழக்கத்தான் போகிறோம். இழப்பு நமக்குத்தானே ஒழிய, தலைவி அவர்கள் நிம்மதியாக அவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்து கொண்டிருப்பார்கள்.

எனதருமை காயலர்களே, நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தால் மெகா மீண்டும் உயிர்த்தெழும் ! மக்களால் பொறுப்பில் உட்காரவைக்கப்பட்டவர்களே !!! உங்களை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.

நகர் மன்றத்தில் நல்லாட்சி அமைந்திட விரும்பும் பல்லாயிர காயலர்களின் ஒருவன்,

சாளை ஷேக் ஸலீம்
அமீரகம்<

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Salai Sheikh Saleem (Dubai) [19 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19446

என்னுடைய பதிவில் ஒன்றை குறிப்பிட மறந்து விட்டேன்.

தலைவிக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் இந்த இணைய தளத்தில் பதிவாகிவிட்டதால், தலைவி அவர்கள் இந்த இணையதளத்திலேயே பதில் கூறுவது கடமையாகி விட்டது. எனேவ தயவுசெய்து, அட்மின் அவர்கள் இதையே ஒரு வேண்டுகோளாக வைத்து, தலைவி அவர்களின் பதில் அல்லது ஒரு நேர்காணல் பிரசுரிக்க வேணடும். செய்வீர்களா ? வஸ்ஸலாம்

சாளை ஷேக் ஸலீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by kudack bukhari (doha-qatar) [19 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19447

அஸ்ஸலாமு அழைக்கும்,

அன்பு K .D .N ,லெப்பை கக்கா அவர்களே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் ,நான் மெகா அமைப்பை குறை சொல்லுவதையே தொழிலாக கொள்ளவில்லை, லுக்மான் காக்கா அவர்களின் பகிரங்க குற்றச்சாட்டு இந்த அமைப்பினரால் நல்லவர் வல்லவர் படித்தவர் என்று அறிமுகம் செய்யப்பட்ட தலைவி மீது கூடவே தலைவியின் வெற்றிக்கும் அரும் பாடு பட்டவர்கள், இந்த தலைவிக்கு பிரச்னை என்று வரும்போது இந்த அமைபினரால் ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லை, ஏன் தலைவியால் கூட மறுப்பு அறிக்கை வெளியிடமுடியவில்லை. அதை தான் எங்கே போனார்கள் தலை மறைவாகி விட்டார்களா என்று கேட்டிருந்தேன் தாங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன் அது அல்லாது வேறு இல்லை,

மெகா அமைபினரின் நிறுவனர் மற்றும் செய்திதொடர்பாளர், இங்கே கத்தாரில் எங்களோடுதான் இருக்கிறார் ,அவர்களை நானும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் சந்திக்கிறேன் ,நான் சொன்ன தலைமறைவிற்கு அர்த்தம் அவர்கள் அமைப்பின் மூலமாக அறிக்கை தராதது தான் என்று புரிந்திருப்பீர்கள்

10 ஆண்டு காலமாக கவிமகநோடும் ,மெகா நிறுவனர் கரீம் காக்காவோடும் கிட்ட இருந்து பார்கிறேன் பொது வாழ்கையில் எவ்வளவு நேர்மையானவர்கள் சமூகசேவையில் எவ்வளவு ஆர்வம் உள்ளவர்கள் என்று நிட்சயம் உங்களை விட எனக்கு அதிகம் தெரியும் ,

சரி அதுபோகட்டும் காக்கா நீங்கள் யார் என்று சில நாட்களுக்கு முன்புதான் அறிந்தேன் நீங்கள் யாரோ ஒருவருக்கு பதில் சொல்லிருன்தீர்கள் கட்டக் T .V .S .கம்பெனி லெப்பை என்று, பார்த்ததும் ரொம்ப சந்தோசமாஹா இருந்தது ,நான் யார் என்று தெரியுமா காக்கா அதே கட்டக் &ஜெகத்பூர் சாம்கோ குடாக் S J ஹசன் அவர்களின் மகன் .

வஸ்ஸலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by ahmed hussain (dubai) [19 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19448

அஸ்ஸலாமு அலைக்கும்,

திருவாளர் ஹமீது ரிபாய் அவர்களுக்கு,

தாங்கள் முதலில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜனாப்.லுக்மான் அவர்கள் பதில் கொடுத்தும் தாங்கள் அடுத்த கட்ட முயற்சி எடுதுள்ளிர்கள். பாராட்டுகள் .

ஆனால் தங்களின் இந்த முயற்சியும் பயனளிக்காது என்று நினைக்கிறேன்.

என்னென்றால் ஜனாப்.லுக்மான் அவர்களின் தன்னிலை விளக்கத்தில் யாருக்கும் மலக்குமார்கள் ( அதாங்க, திருந்திவிட்டதாக ) என்று பட்டம் கொடுத்ததாக தெரியவில்லை. மாறாக அவர்களை புறகணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதை காணலாம் .

“இதற்கிடையில் நேற்று Kayalpatnam.com-ல் சில உறுப்பினர்களின் உரையாடல்களை வெளியிட்டதை காண நேர்ந்தது. இது என் மனதை மிகவும் பாதித்தது.

இதில் அந்த உரையாடலில் ஈடுபட்டவர்களின் யோக்கியதை வெளிப்பட்டது மட்டுமல்லாது, எல்லா உறுப்பினர்களையும் அவர்களுடன் இணைப்பது போன்று பேசியது. அவர்களின் எல்லா நோக்கங்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது.

இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அது சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும். அந்தக் காரியங்களில் நேர்மை இருப்பதும் சந்தேகம் தான். இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்களை புறக்கணித்து விட்டு, ஆலோசனைகள் நடத்தினால் மட்டும் தான் நான் கலந்து கொள்ள இயலும். கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.”

மேலும் தலைவி அவர்களின் செயல் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை எடுத்து சொல்லி இருக்கிறார் . "ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பாக முந்தைய மாதக் குறைத்தீர்க் கூட்டத்தின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப் பற்றி ஆராய வேண்டும் என்று கூறினால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த மாதக் கூட்டத்தை நடத்துகிறார்.

விளைவு முதல் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் சுமார் 70 மனுக்கள் வந்தது. படிப்படியாக குறைந்து ஒற்றைப்படை எண்ணிக்கையாகி விட்டது. மக்கள் இதன் மீது நம்பிக்கை இழந்து விட்டது தான் காரணம். மக்களின் குறைகள் தீர்ந்த பாடில்லை." ஜனாப்.லுக்மான் அவர்களின் முந்தைய கருத்தை நோண்டி நோண்டி படிக்க நேரம் இருந்த தங்களுக்கு ,அவர்களின் தன்னிலை விளக்கம் பற்றி படிக்க நேரமில்லை போலும் . எனவே தங்களின் இரண்டாம் கட்ட முயற்சியின் தோல்விக்கு வருத்தம் தெரிவிப்பதோடு அடுத்த கட்ட முயற்சிக்கு இறங்குமாறு ஊக்குவிக்குறேன் .

அதற்கு முன் மீண்டும் தலைவி புராணம் படாமல் ஜனாப். லுக்மான் அவர்களின் தன்னிலை விளக்கத்தை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு முயற்சி செய்யவும். வஸ்ஸலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by ahmed hussain (dubai) [19 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19451

அன்புள்ள முஹம்மது ரபீக் அவர்களுக்கு ,

1) இது உங்களுக்குத் தேவைதானா? வேலிக்குள்ளிருந்த பாம்பை எடுத்து.... அதாங்க பனியனுக்குள்ளே விட்ட கதையாகிப் போயிடுச்சே?

“வேலிக்குள்ளிருந்த பாம்பு -ஊழல் செய்யும் உறுப்பினர்கள் & நிர்வாக குறை பாடுள்ள தலைவி.

பனியனுக்குள்ளே விட்ட கதை - நகர் மக்களுக்கு எடுத்து காட்டியது”

2) எட்டு மாத கால நகராட்சியில் தலைவி சாதிச்சது இருக்கட்டும். உங்கள் தலையில் கொட்டி நீங்க என்ன.... சாதிச்சீங்கன்னு கருத்தாளர்கள் கேட்டால் அதற்கும்

தாங்கள் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய் தெருவாசிகளிடம் போய் கேளுங்கள், அல்லாஹ் அறிவான் என மழுப்பி பதில் கூறியுள்ளீர்கள்.

“ஏன்பா, அரசியல் வாதிங்க தான் நாங்கள் எங்கள் ஆட்சியில் இதை செய்தோம் , அதை செய்தோம் என்று மாறு தட்டுகிறார்கள் இப்போதாவது அதை மக்களிடம் கேளுங்களேன் பா”

3) கருத்தாளர்களின் நியாயமானக் கருத்துப் பதிவிற்கு தங்களின் விளக்கம் படம் பார்த்து கதை எழுதுகின்றார்கள் எனும் குற்றச்சாட்டுதான். விடுங்க!

இவங்களாவது படம் பார்த்து தானே கதை எழுதுகின்றார்கள்? இன்னும் சிலர் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்கின்றார்களே? அவர்களை என்னவென்று அழைப்பது?

“ உங்களை எவ்வாறு அழைப்பது !!!!!”

4) இறுதியாகக் கேட்கின்றேன். தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? எதற்காக காய் நகத்துகின்றீர்கள்? ஏன் இந்த தடுமாற்றம்? “சொல்லவருவது என்னவென்றால்”

“இதற்கிடையில் நேற்று Kayalpatnam.com-ல் சில உறுப்பினர்களின் உரையாடல்களை வெளியிட்டதை காண நேர்ந்தது. இது என் மனதை மிகவும் பாதித்தது.

இதில் அந்த உரையாடலில் ஈடுபட்டவர்களின் யோக்கியதை வெளிப்பட்டது மட்டுமல்லாது, எல்லா உறுப்பினர்களையும் அவர்களுடன் இணைப்பது போன்று பேசியது. அவர்களின் எல்லா நோக்கங்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது.

இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அது சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும். அந்தக் காரியங்களில் நேர்மை இருப்பதும் சந்தேகம் தான். இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்களை புறக்கணித்து விட்டு,ஆலோசனைகள் நடத்தினால் மட்டும் தான் நான் கலந்து கொள்ள இயலும். கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.”

மேலும் தலைவி அவர்களின் செயல் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை எடுத்து சொல்லி இருக்கிறார் .

"ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பாக முந்தைய மாதக் குறைத்தீர்க் கூட்டத்தின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப் பற்றி ஆராய வேண்டும் என்று கூறினால் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் அடுத்த மாதக் கூட்டத்தை நடத்துகிறார்.

விளைவு முதல் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் சுமார் 70 மனுக்கள் வந்தது. படிப்படியாக குறைந்து ஒற்றைப்படை எண்ணிக்கையாகி விட்டது. மக்கள் இதன் மீது நம்பிக்கை இழந்து விட்டது தான் காரணம். மக்களின் குறைகள் தீர்ந்த பாடில்லை."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [19 June 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19453

காயல் வலைதலங்களில் நகராட்சி தலைவியை எதிர்த்தும், ஆதரித்தும் பல விமர்சனங்கள் படு வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக நாம் தலைவியை பாராட்டியே ஆக வேண்டும். ஏன்?

சென்ற தலைவர் வாவு அப்துர் ரஹ்மான் ஹாஜியார் ஆரம்பத்தில் கமிஷன் வாங்கும் கவுன்சிலர்கள் விசயத்தில் சற்று உஷாரகவே இருந்தார்கள். ஆனால் சில ககவினர் நகர சபையை நடத்த விட மாட்டோம், ஒத்துழைக்க மாட்டோம் என்று மிரட்டியதாக செய்தி வெளியானது. அதன் பிறகு வாவு ஹாஜியார், தொலைந்து போங்க என்று எதையும் கண்டு கொள்ளாமல், தனது சொந்த காசை செலவழித்து ஏதோ சில நன்மைகள் செய்தார். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவு செக் மோசடி வரை சென்று நம் நகராட்சி நாறி போனது.

அதற்கு முந்திய தலைவி வஹிதா அவர்களை, ககவினரும், கட்சிகாரர்களும் மிரட்டி அதிமுகவில் இணைத்தனர்.

ஆனால் இன்றைய தலைவிக்கு மேலே கூறிய தலைவர்களுக்கு ஏற்பட்ட அதே மிரட்டல்கள் இரண்டும் ஒரு சேர்ந்து தாக்கினாலும், அதை தைரியமாக எதிர்கொள்கிறார்கள்.

அந்த தைரியத்திற்காக நாம் பாராட்டித்தானே ஆக வேண்டும்.

குறிப்பு: கக - 'கமிஷன் கவுன்சிலர்'


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Impressed in proactive
posted by Riyath (HongKong) [19 June 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 19454

Assalamu alaikum Mr. Lukman bhai,

Glad to see your message about you and your honest in latest corrupting political world. A bit disappointed to see few lines against your lead to others - i understood that after tried other approaches, you finally choose this source to pull president of councilor to consider your concern. Insha allah, we will recieve response soon as expected.

This kind (good or bad) of letter is must occasionaly to remind our people to think responsibility and current position of our town. I think - this is called transparent management.

Well, agree with you for no outcome of complaints though We have different ways (internet, box, phone) now to post our complaints, but no result or status (pending / cancel / rejected / completed). People like me came to the desicion that waste of time to post such complients and reduce in complaint eventually is not meaning the problems solved.

Apart from that, this news diverted from other news about the 2 culprits and hope our councilers will action aginst them legally.

A word proactive is powerfull that we do our work continuesly within our responsibility at any cause, growth will follow behind us.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. சகோ. லுக்மான் அவர்களே!
posted by Firdous (Colombo) [19 June 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19457

நகர்மன்ற தலைவரை அ.தி.மு.க வில் இணைய தாங்கள் நிர்பந்தித்தது உண்மையா? சகோ. ஹாமித் ரிபாய் அவர்களின் குற்றச்சாற்றில் வினவிருந்தார். அதற்கு உங்களது பதிலில் குறிப்பிடவில்லையே. தயவுகூர்ந்து எங்களை போன்றோர் உங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்காக தெளிவுப்படுத்தவும்.

குறை இல்லாதவன் இறைவன் ஒருவனே! சிருவிசயங்களில் பேதங்களை ஏற்ப்படுத்தி ஊழல் போன்ற கொடிய விசயங்களை அரங்கேற தாங்கள் ஒருபோதும் இருந்திடவேண்டம். தலைவர் மாற்றப்பட்டால் நமது நகர் மன்றத்தை சாக்கடையாக மாற்ற க.கவுன்சிளர்கள் காத்துகொண்டிருகிரார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Cnash (Makkah ) [19 June 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19459

தன்னிலை அறிக்கை என்ற பெயரில் தன் நிலை தடுமாறி ஒரு அறிக்கை விட்டு ஒருவகையா குட்டையை குழப்பி விட்டு விட்டீர்கள்...

அண்ணன் எப்போ எழும்புவான் திண்ணை எப்போ காலியாகும் என்றிருந்த வாய்களுக்கு அவல் இல்லை அல்வாவே போட்டு விட்டீர்கள்!!

உங்கள் உள்நோக்கத்தை அல்லாஹ் மிக அறிந்தவன்!! ஆனால் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம்...நாங்கள் அறிய கூடிய வரையில் வெளியில் தெரியும் செயல்பாடு, உங்கள் தடுமாறிய பேச்சுக்கள் அறிக்கை அதை வைத்து எங்களுக்குள் எழும் சில சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், இங்கே இந்த இணையதளத்தின் மூலம் பிரச்சனையை நீங்கள் வெளிச்சம் போட்டதால் பதில் சொல்ல கூடிய நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்!! அது படம் பார்த்து எழுதக்கூடிய விமர்சனமோ? இல்லை உங்களிடம் பாடம் கற்று எழுதிய விமர்சனமோ?

• முதலில், நீங்கள் எல்லா இணையதளத்திற்கும் அனுப்பிய அறிக்கை (தன்னிலை விளக்கம்), இதை ஒரு கடிதமாக சம்பந்தபட்ட தலைவி அவர்களுக்கே அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கலாமே, எல்லாமே அவர் மீது உள்ள தனிப்பட்ட குற்றசாட்டுகள்தானே?

அதே கடிதத்தில் உரிய பதில் கிடைக்க விட்டால், இதை அறிக்கையாக விடுவேன் என்று கூட அவரிடத்தில் எச்சரித்து இருக்கலாமே? அதை விடுத்து அவசரகதியில் அனைத்து இணையதளத்திற்கும் அனுப்பிய நோக்கம் என்ன?

வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் - முபாகலா என்றெல்லாம் பேசும் நீங்கள் சாதாரண இந்த மார்க்க நடைமுறையை கூட பேண தோணவில்லையா?

தனிப்பட்டவர் பற்றிய குற்றசாட்டை அவரிடம் சொல்லாமல் அடுத்தவரிடம் சொல்லுவது புறம்பேசுவதாக ஆகாதா? இல்லை நீங்கள் சொல்லும் குற்றசாட்டுகள் பொய்யாபோகும் போது அது அவதூறு என்ற நிலைக்கு எடுத்து செல்லாதா?

• முன்பு பணி நியமாக குழு தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க பட்டபோது, பதவிகள் எங்கோ யார் மூலமோ பங்கு வைக்க படுகிறது... Parellel நகர்மன்றம் நடக்கிறது என்றெல்லாம் சாடி மொகலாய மன்னர்கள், என்று கவிதையாக கொட்டி தீர்த்தீர்களே? அந்த மன்னர்கள் ஆட்சி இன்று மாறி விட்டதா? இல்லை நீங்கள் மாறி விட்டீர்களா?

• இதற்கு முன்பு நண்பர்கள் பட்டியல் போட்ட துணை தலைவர் தேர்வு, நியமன குழு தேர்வு, ஏன் உங்கள் மீதே ஒரு உறுப்பினர் தெரு விளக்குகளை தூக்கி சென்றார் என்று குற்றம் சொல்லியது (அது மட்டமான குற்றசாட்டு என்பது எல்லோருக்கும் தெரியும்) இது போன்ற எத்தனையோ நிகழ்வுகளுக்கு அறிக்கை விட்டு அவர்களை உலகுக்கு அம்பலபடுத்த தெரியாதவர்.. இன்று ஒரு உப்பு சப்பு இல்லாத பிரச்சனைக்கு உங்கள் சொல்லை கேட்கவில்லை என்ற காரணத்திற்காக இவ்வளவு நீள அறிக்கை விட்டு ஒற்றுமைக்கும் கட்டுபட்டிர்க்கும் வேட்டு வைத்து இருக்கிறீர்களே? இதுதான் ஒரு நல்ல உறுப்பினருக்கு அழகா?

• சில மாதங்களுக்கு முன்வரை தலைவியுடன் சென்னை சென்று வந்த பிறகு, அவரை பற்றியும் அவர் கணவரில் உபசரிப்பு , புன்முறுவல், குண நலன்கள் பற்றி எல்லாம் ஊருக்கு எடுத்து சொன்னீர்களே.. நீங்கள் உண்மையாளரா இருந்தால் இப்போது சொன்ன குற்றசாட்டை அன்றைக்கும் சொல்லி இருக்கலாமே, கடுகடுத்த முகம், கடுஞ்சொல், எல்லாம் இன்றைக்கு தான் கண்டீர்களா?

• இரண்டாம் பைப் லைன் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி நகர்மன்றமே நிறைவேற்ற நீண்ட யோசனைக்கு பிறகு தலைவி ஒப்புக்கொண்டார்கள்.......இப்படி எல்லாம் நீங்கள்தானே சான்றிதழ் கொடுத்தீர்கள்... மற்ற உறுப்பினர்களில் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா?

• அன்று சென்னையில் dcw ஆலை விரிவாக்கம் சம்பந்தமாக commissioner ஏற்ப்பாடு செய்த கூட்டத்தில் நம் நகரமன்ற தலைவி கலந்து கொண்டு அந்த ஆலை மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் DCW விரிவாக்க பணி தள்ளி போடப்படும், என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கும்போது கூட இருந்த நீங்கள் அவரின் குறையை சுட்டி கட்டி இன்று சொன்னது போல் அன்றே சொல்லி இருக்கலாமே, பழக பழக பாலும் புளிக்கும் என்பது உங்கள் விஷயத்தில் சரியாகி விட்டதோ!

• நீங்களும் ஒரு சாதாரண வார்டு உறுப்பினர்தானே, உங்களை போல பலர் இருக்கும்போது உங்கள் பேச்சை மட்டும் ஏன் அவர் கேட்டு நீங்கள் விரும்பிய வண்ணம் எதற்கு நடக்க வேண்டும்?

• எடுத்ததற்கெல்லாம் அல்லாஹ் மீது சத்தியம் செய்யும் நீங்கள்... இங்கே சில சகோதரர்களால் சொல்லப்படும், குற்றச்சாட்டான அதிமுகவில் தலைவியை இணைய சொல்லி வற்புறுத்தியது உண்மைதானா என்பதையும், அவர் மறுத்தார் என்பதையும்------- இல்லை என்று ஏன் இன்னும் நீங்கள் மறுக்கவில்லை என்று தெரியவில்லை

• அவர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர் ...நீங்கள் ஒன்றும் சோனியா காந்தி அல்ல ..அவர் ஒன்றும் மன்மோகன் சிங்கும் அல்ல .. உங்கள் ஆலோசனை படி ஆட்சி செய்ய ...உங்கள் விருப்பபடி நடக்க... ..மொத்தத்தில் நம்பிக்கை இல்லா தலைவி என்று இதன் மூலம் சான்றிதழ் அளித்து ...வழி காட்டி இருக்கிறீர்கள் காத்திருக்கும் கவுன்சிலர்களுக்கு!! எதனால் ஏற்படும் தீமைகளில் நீங்கள்தான் முதல் கையை நனைத்து இருக்கிறீர்கள்!!

• இறுதியாக நகரமன்ற தலைவிக்கும் பொறுப்பு உள்ளது.. இப்படி பகிங்கரமா இணையதளத்தில் குற்றம்சாட்டிய பின்னரும் மௌனம் காப்பது நல்லதன்று!!

உங்கள் புறத்தில் உள்ள நியாயங்களை நடந்தவை என்ன என்பதையும் உண்மையை உலகுக்கு உரத்து சொல்லுங்கள்.. நீங்கள் மக்களால், மக்களில் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கபட்டவர்? அவருக்கு பதில் சொல்ல கடமை இல்லை என்றாலும் உங்களை தேர்தெடுக்க மக்களுக்கு பதில் சொல்லும் கடமை உண்டு?

பொதுமக்கள் மனுக்கள் சம்பந்தபட்ட குற்றசட்டு.. ஏல பிரச்னை, முதல் அவர் தனிப்பட்ட முறையில் வைத்த குற்றசாட்டுக்கு உங்களிடம் இருது உரிய பதிலை எதிர்பார்க்கிறோம்... சகோ. லுக்மான் அவர்களின் விளக்கத்தை பிரசுரித்த இந்த தளத்திற்கு தலைவி உடைய பதிலையும் கேட்டு பெறும் கடமை இருக்கிறது... இணையதளம் இது சம்பந்தமாக தலைவியின் பதிலை தெரியபடுத்தவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [19 June 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 19460

அஸ்ஸலாமு அழைக்கும்,

அருமை தம்பி.S.M.H.புஹாரி .நீ யார் என்று எனக்கு எப்போவே தெரியும். நீ என் S.J. ஹசன் மாமா அவர்களின் மகனும் + என் நண்பர்களின் தம்பியும் கூட ..... என் கண் முன் வளர்த்தவன்..... நான் உங்கள் பாமிலி.மெம்பெர்களுடன். தான் பல வருடங்கள் தொழில் ரீதியாக ஒன்றாக வாழ்தவன். என்னை இந்த நல்ல நிலைமைக்கும் + என்னை சுறு சுறுப்புடன் திறமையானவனாக / ஒழுக்கமாணவனாகவும்.... ஆளாக்கியதே உங்கள் இல்லை.... இல்லை.... எங்களின் அருமை ஹாஜி .T.V.S காக்காவும் & என் அருமை காக்கா.T.V.AMEEN JAFFER அவர்களும்தனே.புரிந்ததா.

உண்மையில் எனக்கு இந்த மெகா என்கிற டீம் மெம்பர்களை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் இவர்களின் நல்ல செயல் பாற்றை ஊரில் நான் நேரில் கண்டு அகம் மகிழ்தேன். இந்த டீமையும் சரி & இப்போதைய நம் நகர் மன்ற தலைவியையும் சரி..... தேர்தல் நேரத்தில் நம் ஊரில் கடுமையாக எதிர்தவனில் நானும் ஒருவன். ஊருக்கு ( நல்லது ) யார் / எந்த அமைப்பும் / சரி நல்லது செய்தாலும் நாம் பாராட்ட தவறவே கூடாது. அப்போதுதான் இவர்களுக்கு நல்லது செய்ய கூடிய எண்ணம் + பக்குவம் ...வரும். சும்மாவே குறை கூறி கொண்டே இருந்தால்.... இவர்களின் எண்ணமும் மாறிவிடும் + நம் ஊருக்கு நல்லது நடப்பது கூட தடை பட்டு விடும் அல்லவா.....என்ன சரி தானே ......

ஒரு அருமை சகோதரர் சொன்ன வாசகத்தை நீயும்.பார்த்து இருப்பா என்று நினைக்கிறேன்.>>>>>>>>தான் ஆதரித்த ஒருவர் தேர்ந்தெடுக்கப் படாததால் அவரையும் அவரை ஆதரித்தோரையும் எப்படியெல்லாம் கேவலப்படுத்தலாம் என்று கற்பனை செய்கிறார்கள் என்று எண்னும் போது மனம் வேதனை அடைகிறது.<<<<<<<என்று இவர் கூறியது 100 % உண்மையான கருத்துதானே ???

ஏன் நம் மக்கள் இவர் கூறியது போன்று மன குழப்பத்துடன் இன்று வரை உள்ளார்கள்.நம் மனதை ப்ரியாக வைத்து ஊருக்கு நல்லது செய்பவர்களுடன் ஓன்று சேர்ந்து செயல் புரிவது தானே சரியானது...

ஓன்று மட்டும் நீ புரிந்து கொள் இந்த ..... மஹா என்கிற ஒரு மிக சிறப்பான அமைப்பு .... அது தனிப்பட்ட ஒரு நபரை கண் மூடி தனமாக .... ஆதரிப்பதாக தெரிந்தாலோ / நாம் கேள்வி பட்டாலோ கண்டிப்பாக நாம் அதை எதிர்க்க தயங்கவே கூடாது. ரொம்ப கூடிய காலத்திலேயே நம் ஊர் மக்கள் மத்தியில் அமோகமான நல்ல பெயரை எடுத்து விட்டார்கள். மாஷா அல்லாஹ் காரணம் இவர்களின் நல்லதோர் செயல்பாடு தானே காரணம். இவர்களின் இந்த நல்ல செயல் பாடு மென்மேலும் வெற்றி நடை போற்று ... தொடர வாழ்தி .... துவா செய்வோமாக.

தம்பி நீ தற்சமயம் இவர்களுடன் ஒன்றாக இருப்பதை நினைக்கும் போது மனதுக்கு மேலும் சந்தோசமாகவே இருக்கிறது. நல்ல டீம் முடன் தான் நீ ஒன்றாக இருக்கிறாய்.

உண்மையில் இந்த தலைவி நல்லவர் தான். நல்ல செயல் பாடு திறன் ( திறமை ) உள்ளவர். நாம் ஏன் கொஞ்ச காலம் பொருத்து இருந்து ( பாப்போம் ) பார்க்ககூடாது. நாம் நல்லதே நினைப்போம் .... நல்லதே நடக்கும். ஒரே நாம் தலைவியை குறை கூறி கொண்டு இருந்தால், நமக்கு தானே நஷ்டம் / கஷ்டம்......

தம்பி உன் விளக்கம் நியாயமானது தான்.புரிந்து கொண்டேன். ஜனாப் .லுக்மான் காக்காவுடைய அறிகையும் நியாயமானதுதானே. இவர்களும் நம் ஊர் மக்கள் மன்றம் முன் வைத்து உள்ளார்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்று நாம் இதையும் நினைப்போம்.

***** ஏன் தலைவியால் கூட மறுப்பு அறிக்கை வெளியிட முடியவில்லை என்று நீ கேட்டு உள்ளா .நாம் இதை எல்லாம் பெரிது பண்ணகூடாது . தலைவி அவர்களின் வேலை பழுவின் காரணத்தால் கூட மறுப்பு தர முடியாத சூழ நிலைமையாகவும். அல்லது இதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்று கூட நினைத்து. அவர்கள் ஒதுங்கி இருக்கலாமே.

ஆதலால் இந்த மேட்டரை இத்தோடு விட்டு விட்டு நாம் நம் தலைவி அவர்களையும் & நம் மரியாதை கூறிய மன்ற உறுப்பினர் யாவர்களையும் சிறப்புடன் செயல் பட முழுமையான ஒத்துளைப்பு கொடுக்கணும். இதுதான் நாம் நம் ஊர் மக்களுக்கு செய்ய கூடிய நல்ல காரியம்.சரியா........ வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. அல்லாஹ்வின் தூதர் நபிகள் கோமான் (ஸல்)அவர்கள் கூறினார்கள்
posted by சட்னி,செய்யது மீரான்,,,செயற்குழு உறுப்பினர் (மெகா) (ஜித்தா,சவுதி அரேபியா ) [19 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19462

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் நபிகள் கோமான் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடமும்) நல்லதை சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.. அறிவிப்பாளர் :உம்மு குல்தும் பின்த்து உக்பா (ரழி)அவர்கள் ஆதாரம் நூல்:புஹாரி :2692.. நன்றி:: அஸ்மா முஸ்லிம் தினசரி நாட்காட்டி -19 -06 -2012 -- அன்பளிப்பு :LKS JEWELLERS.,PARRYS-CHENNAI-600001

தவறு செய்தால் திருந்தியாகனும்
தப்பு செய்தால் வருந்தியாகணும்
பெருந்தலையாக இருந்தாலும் சரி அல்லது
வெறுந்தறுதலையாக இருந்தாலும் சரியே.......

தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிந்தும் தெரியாமால் நடந்து இருந்தால்
அது திரும்பவும் வராமால் பார்த்துக்கோ
தூக்கு தூக்கியாக இருந்தாலும் சரி
துதிபாடியாக இருந்தாலும் சரியே.....

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
நம்மை படைத்த இறைவன் இருக்கின்றான் மறவாதே...
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்
பொறுமையாக இருப்போம் எம் போன்ற புரிந்துணர்வுவாதிகளே....

உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நீ உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை மதிக்கும்..
பதவி வரும் போது பணிவும் வரவேண்டும்,
துணிவும் வரவேண்டும்...
ஆனால் துளியும் அகங்காரமும் ஆணவமும்
அடிவருடிகளை போல் அறவே வரக்கூடாது ...

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரித்தான மானமிகு லுக்மான் ஹாஜி அவர்களே தாங்கள் அளித்துள்ள தன்னிலை விளக்கம் தங்களின் தன்மானத்தின் வெளிப்பாடு.. உங்களை கடந்த தேர்தல் சமயம் முதன் முதலாக அறிந்தவர்களில் சிலர் அல்ல பலர் ரயில் பயண நண்பர்களை போல் பார்த்துள்ளார்கள் பழகி உள்ளார்கள் புரிந்து இருப்பிர்கள்.. வழியில் வந்த இவர்கள் வழியிலேயே போய்விட்டார்கள் இவர்கள் அன்னியப்பட்டதோடு நில்லாமல் அநாகரிகமாக நடந்து கொள்கின்றார்கள்.. எல்லாம் நன்மைகே. பனை மரத்து நிழல் மாதிரி ஆகி விட்டார்கள்..

உங்களை சிறுவயது பிராயம் முதல் இன்று வரை பார்த்து முழுமையாக தெரிந்த என்றும் மாறாத அன்புக்கு உரிய வீரம் விளைந்த மண்ணுக்குரிய உங்கள் கோமான் தெருவாசிகள் மற்றும் உங்கள் வார்டுக்கு சொந்தக்காரர்களான மக்கள்கள் ஒட்டு போட்டாலும் சரி போடாது இருந்தாலும் அவர்கள் மட்டுமே உங்களிடம் கேள்வி கேட்க தகுதி உடையவர்கள்.. நீங்கள் இது தவிர எங்களில் எவருக்கும் பதில் சொல்ல அவசியமில்லை. அவசரமும் இல்லை.. நீங்கள் அல்லாஹ்வை நம்புகின்றிர்கள் அவனுக்கே முழுமையாக அஞ்சுகின்றிர்கள்.இது போதும்.

இதில் கருத்து பதிவு செய்துள்ள எங்களில் யாரும் உங்கள் பகுதியை சார்ந்தவர்கள் அல்லர்.அது போல் நீங்கள் கூறும் இந்த சம்பவங்களை அருகில் இருந்து பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை, இதில் நாங்களோ பணம் சம்பாதிக்க வந்து அமெரிக்கா மற்றும் அரபு நாடு, மற்றும் கடல் கடந்து இருந்து கொண்டு ஏதோ முன்னர் ஆதரித்து ,எதிர்த்து விட்டோமே என்ற ஆதங்கத்தில் எழுதுபவர்கள்.

இதில் சிலரோ தனது இளமை காலத்தை எங்களைப்போல் அரபு நாடுகளில் தொலைத்து விட்டு இங்கு இருந்தது போதும் நீ என அரபிகள் துரத்திட உடுத்த உடையோடு ஊர் வந்தவர்களும் உள்ளார்கள்.

ஏதோ நீங்கள் ஊழலுக்கு துணை போவது போல் சித்தரிக்க முயல்கின்றார்கள் ஏகத்துவவாதிகள் நாங்கள் என்னமோ ஏகம்பரர்வாதிகளாம் எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

ஒலி நாடா பதிவு செய்தவர்தான் அவர் யார் என வெளியிடனும் இதற்க்கு நீங்கள் எப்படி பொறுப்பு ஆவிர்கள்.

ஒலி பதிவு செய்த புண்ணியவானே இப்பொழுது ஒளிப்பதிவு செய்ய கைபேசியில் காமராவே உள்ளதே அப்படி நீ செய்து இருக்கலாமே???? சும்மா இருக்கும் வாய்க்கு அவல் கொடுக்கும் நல்ல எண்ணமோ??????

காயலர்களே உஷார்!!! நீங்கள் உங்கள் அன்பானவர்களிடம் நேரடியாக பேசினாலும் அல்லது தொலை மற்றும் அலைபேசிகளில் பேசினாலும் சரி உங்கள் குரலை உங்களுக்கு தெரியாது பதிவு செய்து தளத்தில் பதிவு ஏற்றி உலாவ விட்டு விடுவார்கள்.

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.
உப்பு திண்டவன் தான் தண்ணி குடிக்கணும்..

நகர்மன்றத் துணைத்தலைவர் தேர்தலின் போது லட்சக் கணக்கில் நடந்த குதிரை பேரத்தை நடத்தியவர் யார் என்பதும், அதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் யார்??? என்பதும் ,உங்களுக்குத் தெரியுமாம்...

அது சமயம் ஊரில் இருந்த இந்த அன்னக்காவடிகள் திண்ணைத் தூங்கிகளாக இருந்து விட்டு உங்களிடம் வினா தொடுக்குகின்றார்கள்...

சென்னையில் துவங்கி உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் ஒரு கும்பல், நகர்மன்றத் தலைவிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த தொடர் சதியில் ஈடுபட்டு வருதாம் குறிப்பாக சென்னையில் இருந்து பணத்தால் இயக்கும் அந்த புண்ணியவான், கொடை வள்ளல் யார் ????? நிதி அளிப்பவர் ,சதி செய்பவர்??? என தேர்தல் காலம் தொடங்கி இதோ இந்த வினாடி வரை புலி வருது கதை போல் பூச்சாண்டி காட்டி வருகின்றர்கள்.. ஆனால் இதுவரை இவரை யார் என வெளிச்சம் போட்டு காட்ட தயங்குகின்றார்கள் ஆனாலும் இவர்கள் அல்லாஹ் ஒருத்தனுக்கு மட்டும் தான் பயப்படுவார்கலாம் .இன்டெர் நெட் உலகத்தில் நம்மை எல்லாம் இளிச்ச வாயான்கள் என நினைப்பு..

பொது மேடை போட்டு பேசினார்கள் தற்காலிக கோஷ்டிகளின் கூட்டம் ஆனால் இன்று வரை இந்த கருத்து யுத்தத்தில் கூட அதே புராணம் தான். இதை கூறி வரும் இவர்களில் ஒருவர் ஆவது உண்மையாளராக, தைரியசாலியாக, இறை விசுவாசியாக இருப்பார் இதை பார்த்ததும் நமக்கும் ஊருக்கும் அறிய தருவார் என எதிர்பார்த்தோம் ஆனால் இதை பற்றி லுக்மான் காக்கா நீங்கள் தான் சொல்லனுமாம் அவங்க தெரியாம தெரிஞ்சுகிருவாங்கலம். திருடனுக்கு தேள் கொட்டிய கதை மாதிரி இல்லை!!!!!! தில் இல்லை என்றால் இந்த தேய்ந்து போன பழைய பல்லவியை மாற்றி பாடுங்கள் அன்பர்களே. நண்பர்களே...

கறைபடாத கரத்திற்கும், அகத்திற்கும் உரித்தான இந்த உண்மையாளரின் விளக்கம் ஏற்று கொள்ள முடியாது நீங்கள் கருத்து பதிவு செய்யும் போது உங்களின் மனதின் துர்நாற்றம் மட்டும் அல்ல துவேச குணமும் கூடவே சேர்ந்து வருவதால்தான் மக்களுக்கும் குள்ளநரியான உங்களின் உண்மையான அகமும் முகமும் என்ன என்பது தெளிவாகி நீண்ட நாட்களாகி விட்டது .

கேப்பையில் நெய் வடியும் கேட்பவன் கேனயனாக இருக்கும் வரை .

அந்நிய நாடுகளில் உள்ளவரின் பெரும் பணம் பெற்றோம் கோடை மழையில் முளைத்தமாதிரி புதுஇயக்கம் கண்டோம் மேடை போட்டோம் நடுநிலை தவறினோம் கச்சை கட்டினோம் களத்தில் இறங்கினோம் காரில் தொங்கினோம் கடினமாக பிரச்சாரம் செய்தோம் பெற்றெடுத்த பெரியோரையும் கற்றறிந்த கல்வியாளர்களையும் ஊருக்காக நல்ல காரியங்களுக்கு வாரி வாரி அளித்தவர்களை வாரினோம் காட்டி கொடுத்தோம் கடுஞ்சொற்களால் வசை பாடினோம் நல்லவர்கள் வர வேண்டும் என்று போராடினோம் அதுவே நாம் கண்ட இந்த பச்சோந்தி, அய்ந்தாம் படை அமைப்பின் கருவும் கூட

ஆயினும் நம்மில் யாரும் அல்லது நம் குடும்பத்தில் யாரும் அதை விட நம் வீட்டு பெண்களில் யாரும் நல்லவர்கள் நேர்மை ஆனவர்கள் உண்மையானவர்கள் இல்லை என்பதாலோ அல்லது பஞ்சம் என்றோ போட்டி போட தயார் இல்லை என வேறு வழி இல்லாமல் இவருக்காக குறுக்கு வழிகள் எத்தனை உண்டோ அத்தனையும் மேற்கொண்டோம்.

கூடவே துணைக்கு நமது செய்திகள் பரப்பிட ஊடகமும் இருக்க நினைத்ததை சாதித்தோம் வெற்றியும் பெற்றோம் அரியணையில் உட்காரவும் வைத்தோம் ஆனால் ஆட்சியின் ஆயுள் இறுதி வரை கூடவே இல்லாது அந்தரத்தில் பாவம் இந்த அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு நாம் எல்லோரும் திரை கடல் ஓடி திரவியம் தேட மின் வெட்டே இல்லாத அழகான அரபு நாடும், குப்பைகள் இல்லாத சிங்கரா சிங்கைக்கும் வந்துட்டோம். இங்கு இருந்து கொண்டு அறிக்கை விடுகின்றோம் அடுத்தவரை குற்றம் சொல்கின்றோம் அந்தோ பரிதாபம் அந்தோ பரிதாபம் ..

ஏதோ அண்ணா ஹசராவின் ஆசி பெற்றவர்களாக சுவாமி ராம் தேவின் சீடன்களாக மாறி ஊழலை,லஞ்சத்தை ஒழிக்க புறப்பட்டு உள்ளோம்.

கும்மிடி பூண்டியில் இடியாம்
கூடுவாஞ்சேரியில் மழையாம்
குரும்பூரில் குடை பிடித்தானாம்...
குருகாட்டூரில் குளிர் காய்ந்தனாம் ....

நானும் எதுவும் எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன் ஆயினும் ஒரு சிலரோ தொடர்ந்து 2,3 என பதிவு செய்வதும் நம்மில் அனைவருக்கும் எச்சரிக்கை மணி அடித்து விழிப்பூட்டிய ஒரு உண்மை இறை விசுவாசியை மனநிலை சரி இல்லாதவராக, ஏதோ ஊழல் நடக்க அவர் துணை போனதாகவும், அவர் கண்டிப்புடன் அந்நிய பெண்ணான இவருக்கு கட்டளை போட்டதாயும், அதை விட மேலாக பொய்யனாகாவும் சித்தரிக்க முயற்சிப்பதும் மற்றும் அவரது பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தலையை நுழைத்தும் ,சகதி வாரி பூசியும் அவர் மனம் நோகும் வண்ணம் கருத்துக்கள் வருவதாலும் மேலும் இரண்டு மாத கால குற்றால சீசனில் கடை விரித்து சீசன் முடித்ததும் சுருட்டியதை போல் புதிதாய் வந்து போன சுவடியே இல்லாத ஒரு அமைப்பினை உருவாக்கிய என் மரியாதைக்குரிய மகா சன்னிதானம் சாளை சலீம் காக்கா அவர்கள், அவர்களின் அன்பு தம்பியும் என் எதிர் வீட்டுக்காரரும் சிறு பிராயம் தொட்டு அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும் நேரில் கண்டு மகிழ்ந்திட்ட சன்னிதானம் என் பாசமிகு தம்பி சாளை நவாஸ் , (மற்றொரு சன்னிதானம் அன்பு தம்பி பாசுல்கரீம் - காசு கொடுத்து விட்டு ஒதுங்கி இருந்து கொள்வாரோ???)

இப்படி எல்லாம் வரும் என்று முற்கூட்டியே விலகி கொண்ட மானமிகு ஹசன் சார் அவர்கள் உண்மையிலேயே நீங்கள் ஞானி தான்....பாராட்டுக்கள்

எங்களுக்கு சன்மார்க்க கல்வியை சளைக்காது ஊட்டிய மர்ஹூம்,சாம் ஒலி கவி சதக்கதுல்லாஹ் ஆலிம் (இறைவன் இவர்கள் கப்ரை வெளிச்சமாக்கி, விசாலமாக்கி வைப்பானாக ஆமீன்.) அவர்களின் இளைய மகன் என் அருமை தம்பி அப்துல் காதர், இந்த அமைப்பின் காயலில் என் போன்று செயற்ககுழு உறுப்பினராக இருந்த அருமை இளவல் ஹாமீத் ரிபாய் ,தேர்தல் சமயம் ஊரில் இல்லாது இதன் அனுதாபிகளாக குரல் கொடுத்த புனித மிகு மக்காவில் இருக்கும் சகோதரர்கள் ரபீக் ,சீனா மொஹ்தூம் முஹம்மது மற்றும் பலர் கருத்துக்கள் பதிவு செய்ய இந்த (மெகா) அமைப்பின் உள்ளூர் செயற்குழு உறுப்பினராக மட்டும் இல்லாது ஜும்மா பள்ளியில் நோட்டீஸ் கொடுக்க, பெரிய பள்ளி கதீப் ஆலிம் பெருந்தகை அவர்களிடம் இதனை பற்றி எடுத்து கூறி மற்ற இரண்டு ஆலிம் பெருந்தகை கதீப்களிடம் கையொப்பம் வாங்கியது போல் இவர்களிடமும் வாங்கிட துணை போனது,

ஆள்களை பிடித்து வந்து உறுப்பினராக சேர்த்தது, போகும் இடம் எல்லாம் காண்பவர்களிடம் கொள்கை பரப்பு செய்தது ,இதனை கொச்சை படுத்தியவர்களிடம் கோபம் கொண்டது, உள்ளூர் பிரதிநிதியாக கை ஒப்பம் போட அனுமதி தர எனக்கு வேண்டாம் என்று பிறருக்கு அந்த பதவியை கொடுத்தது, முதல் அறிமுக கூட்டத்தில் தொண்டனாக இருந்து வேலைகள் பார்த்தது,

இத்தனை தகுதிகள் ஒன்று சேர்ந்து எனக்கு இருக்க நான் மட்டும் உண்மையை தோலுரித்து காட்டாமல் இருந்தாலோ, வெறுமனே யாருக்கோ வந்தது என்றும் இருந்தாலோ வான் புவி படைத்து காக்கும் வல்ல இறைவன் தான் எம்மை மன்னிப்பானா??

எல்லாம் வல்ல அல்லாஹ்வே!!! நாங்கள் தெரிந்தோ? தெரியாதோ? இதில் நான் ஈடுபட்டு எனக்கோ, எனது சொந்தங்களுக்கோ, ஒட்டு மொத்த காயலுக்கோ களங்கம்,மனக்கஷ்டம்,பெரும் நஷ்டம் ஏதும் ஏற்பட்டு இருந்தால் பிழை பொறுப்பாயாக ஆமீன் ..

தலைவிக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் எல்லா இணைய தளத்திலும் பதிவாகிவிட்டதால், தலைவி இணையதளம் மூலம் பதில் கூறுவது கடமையாகி விட்டது. அதையும் பார்த்து முழுமையாக அறிந்து நாம் கருத்து பதிவு செய்யலாம் என்றும் மிகுந்த ஆவலுடன் காத்து இருந்தேன் மூன்று நாளைக்கு மேலாகியும் இது வரை வராத காரணத்தாலும் இதனை பதிவு செய்கின்றேன்.

அன்பின் அட்மின் அவர்களுக்கு;; எனது கருத்தை எந்த வெட்டும்,குத்தும் இல்லாமல் இது நாள் வரை அப்படியே வெளியிடு செய்தமைக்கு நன்றி. அது போல் இதையும் பிரசுரிக்க அன்புடன் வேண்டுகின்றேன். வஸ்ஸலாம்.

என்றும் அன்புடன்..
செயற்குழு உறுப்பினர் (மெகா)
சட்னி,செய்யது மீரான்.+966501592134
ஜித்தா,சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. இப்ப சந்தோஷம் தானே உமக்கு...? கருத்தெழுதி கை வலிக்குதய்யா...!!!
posted by ராபியா மணாளன். (புனித மக்கா.) [19 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19464

அன்பர்களே! ஒலிநாடாவில் ஆரம்பித்து தன்னிலை விளக்கத்தில் தலையைக் கொடுத்து பலி கிடாவாகி விட்டவர் ஒரு புறம்! தேமேன்னு கிடந்த சிம்மினி விளக்கை தொடைச்செடுத்து அதற்கு திரி போட்டு கொளுத்திவிட்டு இப்ப அது கொளுந்து எரியும் போது எரியுற நெருப்பில் தன்னிலை விளக்க எண்ணெயை ஊற்றி அதை இன்னும் காட்டுத் தீயாக்கியது இந்த இணையதளம்! இப்ப பத்திக்கிட்டு எரியுறது பலரது நம்பகத்தன்மையும், நாணயமும்தான்!

முட்டுக்கட்டைகளைத் தகர்த்து அதை மூலையில் விட்டெறிந்து முதல் இடத்தை தக்க வைத்த ஆபிதாவின் அமோக வெற்றி, ஆணித்தரமான வாக்குறுதிகள், ஆளும் திறன், அப்பழுக்கற்ற நிர்வாகம், கறைபடியாத கரங்கள், வளைந்து கொடுக்காத மனோபாவம். என்ன வந்த போதிலும் அந்த மகாராசாவை மரியாதை நிமித்தம் கூட சந்த்திக்க மாட்டேன் எனும் அசாத்திய தைரியம், பம்பரமாகச் சுற்றி ஸ்பார்ட் விசிட்டுக்கு பறந்து போகும் விவேகம், மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயந்து ஒதுங்காமல் உறுப்பினர்களையே உறைய வைக்கும் கண்டிப்பு, இது போல இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தம் இவைகளைக் கண்டு பருப்பு வேக மாட்டேங்கிறதேன்னு கவலைப்படும் கன(ரக)வான்களின் கைப்பாவையாய் ஆடாமல் காயலுக்கு நன்மை தரத் துடிக்கும் ஒரு நல்ல தலைவரை இந்த உத்தபுத்திரகள் UN FIT முத்திரையைக் குத்தி வழியனுப்ப முனைந்து விட்டார்கள். இன்னும் சிலர் நிச்சயமாக தலைவி இதற்கு மறு விளக்கம் கொடுக்க வேண்டும். கொடுத்தே தீர வேண்டும் என ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்கள்.

ராவனனால் கடத்தப்பட்ட சீதை பல நாட்களாக அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டு பின்னர் ராமனால் மீட்கப் படாள். தன் மனைவி பத்தினி என்று ராமருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் ராவனனின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த சீதை உத்தமிதானா? எனும் ஊரார் பழிச்சொல் அவள் மீது படியாதிருக்க தன் சீதையை தீக் குளிக்கச் சொன்னான் ராமன்! -இது ராமாயணம்.

இப்ப நம்ம நகர்மன்றம் அசோகவனமும் இல்லை! சேர்மன் ஆபிதா மறு விளக்கம் தரனும்ன்னு அவசியமும் இல்லை! இப்படி ஆளுக்காளு தன்னிலை விளக்கன்னு தனக்குத் தோன்றியதை எல்லாம் அறிக்கையாக விட்டுக் கொண்டிருப்பாங்க! அதுக்கெல்லாம் சேர்மன் ஆபிதா பதில் சொல்லிக் கொண்டிருந்தாங்கன்னா அப்புறம் காயல்பட்டணம் டாட் காமில் வேறெ செய்தி எதுவுமே வராது! போதும் சார்! புழுதியைக் கிளறி விட்டுட்டீங்க... ஒரே புகைப்படலமா இருக்கு இதுலெ தம் படை மாற்றான் படைன்னு தெரியாம யார்? யாரெல்லாம் முட்டி மோதிக்கொள்ளப் போறாங்களோ? இப்ப சந்தோஷம் தானே உமக்கு...? கருத்தெழுதி கை வலிக்குதய்யா...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. ஒரு தற்காலிக நிம்மதி...!!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [20 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19465

அப்பப்பா.. ஒரு சிறு சுனாமி வந்த மாதிரி ஆகிவிட்டது.

இதற்க்கு எல்லாம் ஒரு முடிவு.. விரைவில்.!!!!

இன்று அம்மா அவர்கள் (முதல்வர் அம்மா) ஒரு ஆப்பை கூர் தீட்டி வைத்து விட்டார்கள்.

இனி மக்கள் பிரதிநிதிகள் ஒழுங்காக இருக்கனும், வளைந்து கொடுக்கின்ற சமாசாரங்களை எல்லாம் செய்தால் "ஒரு மாதத்தில் அனைத்து உள்ளாட்சி மன்றங்களையும் கலைத்து விடுவேன்" என்று கடும் எச்சரிக்கை விடுவித்துள்ளார்கள்.

இனி அனைவர்களுக்கும் ஒரு தற்காலிக நிம்மதி...!!

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [20 June 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19470

திருவாளர் லுக்மான் அவர்களுக்கு மீண்டும் ஒரு சபாஷ்

நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தல் சமயத்தில் சென்னை மகாராஜா அவர்கள் உங்களை தொலைபேசியில் தொல்லை செய்து சில நிர்பந்தங்களை வழங்கி இதற்க்கு தாங்கள் சம்மதித்தால் உங்களை துணைத்தலைவர் ஆக்குகிறேன் என்றும், இல்லை என்றால் நான் கை காட்டும் நபரை தாங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் தங்களை வலியுறுத்தியதாகவும், அதை தாங்கள் மறுத்ததாகவும் முன்பு நீங்கள் நேரடியாக எங்களிடம் சொன்ன செய்தியை இப்போதும் ஒப்புக்கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?

சென்ற மதாங்களில் தலைவி அவர்களோடு சென்னை சென்றிருந்தபோது அதே சென்னை மகாராஜாவை சந்திப்பதற்கு தாங்கள் பலமுறை தலைவியை வலியுறுத்தியதாகவும், அதற்க்கு தலைவி அவர்கள் அவரை சந்திப்பதால் ஊருக்கு எதாவது நன்மை உண்டெனில் நிச்சயம் தான் சந்திக்க தயாராக இருப்பதாகவும், தனிப்பட்ட லாபத்திற்காக நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என மறுத்துவிட்டதாகவும் கூறியதாக அறிகிறேன். இது தங்களுக்கும் நன்கு தெரியும். இதை இப்போதும் ஒப்புக்கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?

நீங்கள் ஒப்புக்கொண்டால் - தலைவி மீது தற்போது தாங்கள் அளித்துள்ள அதிருப்தி வாசகங்கள் நேரடியாக முரண்படும்.

மறுத்தால், தாங்கள் அன்று சொன்னது வேற வாய், இன்று சொன்னது .......ற வாய் என்று ஆகும். இதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

இங்கே சிலர், தலைவியை மெகாதான் அரியணையில் அமர்த்தியதாக மாற்றி மாற்றி கூவுகிறார்களே? நானறிந்த வரை 8 ஆயிரத்து சில்லறை வாக்குகள் வாங்கி தனிப்பெரும்பான்மையுடன் இந்தப் பொறுப்பை அவர்கள் அடைந்தார்கள் என்றே கருதுகிறேன். ஆனால், இந்த சகோதரர்களின் கூற்றுப்படி, அந்த 8 ஆயிரத்து சில்லறை பேரும் தனது சுய அறிவை அடமானம் வைத்துவிட்டு மெகாவின் மெஸ்மரிஸத்திற்கு மயங்கி வாக்களித்தார்கள் என்று கூற வருகிறார்களா அல்லது சுய புத்தியுடன் சிந்தித்து வாக்களித்தார்கள் என்று சொல்ல வருகிறார்களா? (இதற்கு மறுப்பு எழுதும் சகோதரர்கள் கவனமாக எழுதுங்க! ஏனெனில், தலைவிக்கு வாக்களித்தவர்களில் - நம் நகரில் எங்கு அவங்களுக்கு வாக்கே கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அந்த தெருக்களின் பொதுமக்களும் - குறிப்பாக தாய்மார்களும் அடங்குவர்.)

ஆனா ஒன்னு லுக்மான் காக்கா! மொத்தத்துல உங்க தன்னிலை விளக்கத்தின் நோக்கம் முழு வெற்றி பெற்றுவிட்டது என்று நீங்க பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!

ஆம்! கேவலம் - நகராட்சியின் மக்கள் நலத் திட்டங்களுக்காக உள்ள பணத்தை எப்படி தின்று கொழுத்து ஏப்பம் விடுவது என்று வாய் பிளந்து ஏங்கிய சில மக்கள் பிரதிநிதி (?) கவுன்சிலர்களின் உரையாடல் வெளிவந்துள்ள நேரத்தில், அந்தக் குறை பெரிதாகவிடக் கூடாது என்று எண்ணி, அக்பர் அரசவையில் பெரிய கோடு போட்டு ஏற்கனவே இருந்த கோட்டை சின்னதாக்கிய பீர்பாலை எல்லாம் மிஞ்சி விஷயத்தையே திசை திருப்பிவிட்டீர்கள்!

வாழ்க உங்கள் இறையச்சம்! வாழ்க உங்கள் மார்க்கத் தோரணை!! வாழ்க உங்கள் முபாஹலா!!!

அன்பு தலைவி அவர்களே! திருவாளர் லுக்மான் அவர்களின் தன்னிலை விளக்கத்திலுள்ள தங்கள் மீதான விமர்சனங்களுக்கு நானும் கூட தங்களின் பதிலை அவசரப்பட்டு எதிர்பார்த்தேன்தான்! ஆனால் இப்போது சொல்கிறேன்: முக்கால் ஆண்டை மட்டுமே நிறைவு செய்திருக்கின்ற இந்த நகர்மன்றத்தில் இன்னும் மீதி உள்ள காலங்கள் முழுக்க இவர்களோடுதான் நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

எனவே இது மாதிரி தடுமாற்றமான தன்னிலை விளக்கங்களைக் கண்டு கொள்ளாமல் மன்னித்து - மறந்து, அவர்களுக்கு நல்லதை எடுத்து சொல்லி, மீண்டும் அவர்களோடு இணைந்து ஊர் நன்மைக்காக செயல்படுங்கள்!

உங்கள் மீது பொழியப்படும் விமர்சன மழைகளுக்கு உங்கள் பணிகள் மட்டுமே பதில் சொல்லட்டும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Mohamed Hassan (Jeddah) [20 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19472

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரி ஊர் தலைவி ஆபிதா அவர்கள் இப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒரு குற்றவாளி. சகோதரர் லுக்மான் காக்க சொல்லுகின்ற குற்றங்களுக்கு நமதூர் தலைவி அதற்கான தக்க காரணத்தை சொல்லியே ஆக வேண்டும் அப்பதான் இதற்கு சரியான முடிவாக இருக்கும்.

தன்னிலை விளக்கம் அளித்திருக்கும் லுக்மான் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மீதம் உள்ள மற்ற உறுப்பினர்களும் எதற்கும் யாருக்கும் பயபடாமல் உண்மையை நமதூர் மக்களுக்கு எடுத்து சொல்லுகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. சிந்தியுங்கள் காயலர்களே !!!!!!
posted by Ahmed Hussain (dubai) [20 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19474

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த காயலர்களே,

தன்னிலை விளக்கம் அளித்த ஜனாப்.லுக்மான் அவர்களை பற்றியே கேள்விகனைகளை தொடுக்க நேரம் இருந்த உங்களுக்கு அவர் குற்றம் சுமத்திய தலைவி இது வரை விளக்கம் அளிக்காமளிருப்பதையும் , அந்த உரையாடலில் ஈடுபட்ட இரு கனவான்களையும் மறந்து விட்டிர்களே!!!!!!!!!!!!!!!!!

சிந்திக்க மாட்டிர்களா !!!!!!!!! வஸ்ஸலாம் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. ஒத்துழையாமை !!!
posted by M Sajith (DUBAI) [20 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19477

இந்தியாவின் தனித்தன்மை என உலகெங்கும் பறைசாற்றும் ஒரு அம்சம், இந்தியா சுதந்திரம் வாங்கிய விதம்... தேசத்தந்தை என புகழப்படும் காந்தி அவர்கள் கற்றுத்தந்த 'ஒத்துழையாமை' வழி...

இந்த அனுகுமுறையால், திட்டமிட்ட தேதியிலிருந்து ஒரு வருடம் முன்னதாகவே சுதந்திரம் கிடைத்தது, ஆனால் இன்றுவரை அதன் (தயாரின்மையின்) தாக்கம் தீரவில்லை. அதே நிலைதான் நம் நகர்மன்றத்துக்கும்...

(காந்தியடிகளுக்கு தேசதந்தை பட்டம் முறையாக எப்போது வழங்கப்பட்டது எனக்கோரி ஒரு சிறுமி பதிவு செய்த RTI -ல் கேள்வி இன்னும் துறை துறையாக தடுமாறும் கதை சிலர் அறிந்திருக்க கூடும்)

சாதகமான ஒரு ரிமோட் கன்ட்ரோல் தலைமையை 'நிலைநாட்ட' நடந்த முயற்சிகளாக, பெரியவர்களும், ஜமாத்துக்களும் அத்தோடு இலவச இனைப்பாக சிங்கித்துறையும் கொம்புத்துறையும் மேடை ஏறியது. நினைத்தது நடக்கவில்லை..

அரசியலில் பழம் தின்று 'ஏப்பமும் விட்டவர்கள்' தேர்தல் முடிவு வந்த மறுநிமிடமே 'ஒத்துழையாமை' இயக்கத்தை துவங்கி, தனிக்கூட்டம் குதிரைபேரம் என துனைத்தலைவர் தேர்தலில் வெற்றியும் சூடி கொண்டாடியாகிவிட்டது..,

எப்படி நடக்கிறது பார்ப்போம், ஆறு மாதம் கூட தாங்காது என்றவர்கள் ஆறு மாதமும் தாண்டியதால், அடுத்த கட்ட நடவடிக்கையை துவங்கியுள்ளனர். இதில் ஒரு இணை சேதமாக (Collateral damage) கண்ணியத்திற்குறிய சகோதரின் இந்த அறிக்கை. தனக்கும் இதற்கும் சம்மதமில்லை என்பதை உறக்க சொல்லும் வேளையில் ஆதங்கத்தை வெளிப்படுத்த, அதை சாதகமாக்கும் (18 பேரின் ஒற்றுமை என்ற வாசகத்தை) சில சமூக ஆர்வலர்கள், கதையாசிரியர்களாக துடிக்கும் சிந்தனை சிற்பிகள்.

எல்லொருமே தலைவி என்ன செய்தாலும் சரி என சொல்ல எவரும் அவரை 'ஈமான்' கொண்டவரும் இல்லை... அல்லது அவர் நல்லதே செய்தாலும் தவறுதான் என தரம் தாழ்ந்தவருமில்லை.

முன்னர் ஊர் பெரியவர்களை உசுப்பேத்தி துவன்டவர்கள் இப்போது புதிய பலிகளை பயன்படுத்த முனைந்துள்ளனர்.

எப்படியாவது தலைமையை மாற்றவேண்டும், நம்பிக்கை இல்லாத் தீர்மாணம் கொண்டு வரலாம், துனைத்தலைவர் தலைமையில்லா இடத்தை நிரப்பலாம்... வளைந்து கொடுப்பதுடன் ... ஏன் வளைத்தும் கொடுக்கலாம் என பல ஏற்பாடுகள் நடப்பது தெளிவாக தெரிகிறது.

பார்ப்போம், இது எங்குதான் செல்கிறது என்று, அப்படி ஒரு நிலை வந்தால், இருக்கவே இருக்கு, RTI. எல்லா நடவடிக்கைகளையுமே நோன்டி இவர்களின் மீதமுள்ள காலத்தை இதற்கு பதில் சொல்லியே பதவியில் இருக்கும் மீதமுள்ள நாட்களை கழிக்க வைத்தாவது புரியவைக்க வேண்டிய நிலை வரலாம்.

மொத்ததில் எதுவானாலும், நகராட்சியில் ஊழலுக்கு வழிவிடப்போவதில்லை என்பதில் காயலர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. வாழ்க வசவாளர்கள்!...
posted by kavimagan kader (qatar) [20 June 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 19480

அன்பிற்கினிய சகோதரர் சட்னி செயத் மீரான் காக்கா அவர்களுக்கு! அஸ்ஸலாமுஅலைக்கும்!

ஒரே ஒரு பதிவில் மாத்திரம் எங்களுக்கு நீங்கள் சூட்டிய பெயர்கள், துதிபாடிகள், அடிவருடிகள், குள்ளநரி, பச்சோந்தி, அன்னக்காவடிகள், திண்ணை தூங்கிகள்,மகா சந்நிதானம் இன்னும் எத்தனையோ!

ஆனாலும் உங்கள் மீது எவ்வித கோபமும் இல்லை.காரணம் இப்படி எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதனை அல்லாஹ்வே அறிவான்.

எனது தந்தையின் மாணவர் என்ற முறையிலும், பல்வேறு தளங்களில் உங்களோடு இணைந்து சமூகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையிலும் உங்கள் மீது நான் இன்னமும் மரியாதை வைத்திருக்கிறேன்.

இந்த ஊடகத்தில் எங்களைப் புழுதி வாரித்தூற்றுவோர் பற்றி பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை சரி விஷயத்திற்கு வருகின்றேன்.

உங்களது நீண்ட அறிக்கையில், தனி நபர் தாக்குதலும், காழ்ப்புணர்ச்சியும், கீழ்த்தரமான வார்த்தைகளும், உங்களது பழைய கருத்துக்களுக்கு நீங்களே முரண்பட்டு நிற்பதும், இன்னும் பல்வேறு அருவறுப்பான வார்த்தைகளும், திரைப்பட பாடல் வரிகளையும் தவிர வேறெதையும் நான் காணவில்லை.

உங்களைப் பற்றி, உங்களது பாணியிலேயே நான் ஒரு பாடல் வடித்தால் உங்களால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாது. அந்த அசிங்கத்தை செய்ய நான் விரும்பவில்லை.

மெகா என்ற மாபெரும் அமைப்பு, மக்கள் சக்தியை தட்டியெழுப்பியபோது, உள்ளே வந்து விட்டு, மூன்று அல்லது நான்கு நாட்களில், எந்தவித ஆதாயமும் இல்லை என்று அறிந்து ஓடிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.

முதல் அறிமுகக் கூட்டத்தில் யார் யாருக்கோ பயந்து, ஒரு மூலையில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, கூட்டம் முடிந்ததும், மேடைக்குப் பின்னால் வந்து எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஓடி ஒளிந்த நீங்கள், ஒரு தொண்டனாக இருந்து வேலை செய்ததாக சொல்வது பச்சைப்பொய்.

அதன் பிறகு தேர்தல் முடியும் வரை எங்களோடு உங்களுக்கு எந்தத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் இல்லை என்பதுதான் உண்மை.

பெரியவர்களை நாங்கள் அவமானப்படுத்துவது போல சித்தரிக்கும் ஒரு கூட்டத்தோடு இணைந்து நீங்கள் குளிர்காய நினைத்தால் அது உங்கள் விருப்பம். மதிப்பிற்குரிய அப்துல் ரஹ்மான் ஹாஜியாரை நீங்கள் மரியாதைக்குறைவாக விமர்சித்ததையும், அதை தவறு என மெகாவின் ஆலோசகர் கே.வி.ஏ.டி.ஹபீப் மச்சான் அவர்கள் சுட்டிக் காட்டியதையும், அதற்குப் பதிலாக அவரையும் ஏனோதானோவென்று நீங்கள் விமர்சனம் செய்ததும், மாறாக அவர்களது நற்குணங்கள் மற்றும், நல்ல உள்ளத்தை நான் விரும்பும் நகர்மன்றம் என்ற கட்டுரையில் நான் பதிவு செய்திருப்பதும் இதே தளத்தில்தான் பதிவாகி உள்ளது என்பதனை மறந்து விட்டீர்களா?

இரண்டு மாதத்திற்கு முன்னர் கூட செயல் திறன் மிக்க தலைவி என்று நீங்கள் இந்த தளத்தில் பதிவு செய்த கருத்து எண்ணை நான் தந்தால் உங்களையும் துதிபாடி என்று நீங்களே அழைக்க வேண்டியது வரும்.

இதற்குமேல் உங்கள் பதிவில் வேறு எதுவும் இல்லை என்பதால், நல்ல குடும்பத்தில் பிறந்த உங்களை வேண்டி விரும்பி கேட்பது மற்றவர்களை அவமானப்படுத்த நினைத்து நீங்கள் அவமானப் படாதீர்கள் என்பதுதான்.

உரைநடையில் நான் எழுதியிருப்பது உங்களுக்குப் புரிய வில்லையெனில், உங்களைப் பற்றி கவிதைகள் ஆயிரம் ஆயிரம் எழுதி உங்களுக்கு மின்னஞ்சல் செய்ய நான் தயார். காரணம் பொது தளத்தில் உங்களை கேவலப்படுத்த நான் விரும்பவில்லை.

லுக்மான் ஹாஜி அவர்களிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவரால் பதில் தர முடியாது என்பதனை நான் அறிவேன். அவரும் அறிவார். அல்லாஹ்வும் அறிவான்.

நண்பர்களே! யாரிடமும் கையேந்தி பிச்சை எடுக்காமல், நாங்களே செலவு செய்து நகர் நலனுக்காக உருவாக்கிய திறந்த புத்தகம் மெகா. தேர்தலுக்குப் பிறகு, தலைவி அவர்களை நான் சந்தித்தது இரண்டு முறை மாத்திரமே. ஒன்று அவரது தந்தையும், எனது தோழ வாப்பாவுமான மர்ஹூம் பாளையம் இப்ராஹீம் அவர்களது வஃபாத்தை ஒட்டியும், மற்றொண்டு கே.வி.ஏ.டி.அறக்கட்டளை சார்பாக குப்பை வண்டியை வார்டுக்கு அர்ப்பணித்த விழாவிலும்தான். இந்த ஆறு மாத காலத்தில் ஒரேஒரு முறை, அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது தாயின் இத்தா கூட முடிவுறா நிலையில் ,தனது தங்கைக்காக திருநெல்வேலி மருத்துவமனையில் இருக்கின்றார்கள் என்று அறிந்து,நலம் விசாரிக்கவும், அவர் மேல் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவும் அலைபேசியில் பேசினேன்.

நாங்கள்தான் அவர்களை இயக்குவது போல் அவதூறு எழுதுபவர்களை குறித்து எதுவும் சொல்வதற்கு இதற்கு மேல் இல்லை. நாங்கள் இயக்கி செயல்படும் அளவுக்கு அவர் ஒன்றும் பினாமியாக முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரும் இல்லை.

நாங்கள்தான் அவர்களை இயக்குவது போல் அவதூறு எழுதுபவர்களை குறித்து எதுவும் சொல்வதற்கு இதற்குமேல் இல்லை.

திருமணமாகி பத்தாண்டுகள் உருண்டோடியும் எனது வீட்டுக்கு, ஒரு ரேஷன் கார்டு கூட இன்று வரை இல்லை. அதற்குக் கூட அவர்களிடம் போய் நான் நின்றதில்லை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

நேர்மையான முறையில் விமர்சனம் செய்யும் சகோதரர்களை நாங்கள் மதிக்கிறோம். நாங்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறு செய்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம். அதை விட்டு விட்டு, காழ்ப்புணர்ச்சியில் கருத்தை விதைப்பீர்களேயானால், அல்லாஹ் உதவியால் அதனை நீங்களே அறுவடை செய்ய வேண்டிய நாள் விரைவில் வரும் எண்டு கூறி நிறைவு செய்கிறேன்.

மா ஸலாமா.

நாங்கள் எந்த விமர்சனமும் யாரைப் பற்றியும் செய்யாத நிலையிலும், இச்செய்தியிலுள்ள தன்னிலை விளக்கத்திற்கு விமர்சனம் அளிப்பதை விட்டுவிட்டு, செய்திக்குத் தொடர்பேயில்லாமல் எங்களை சாடுவதற்கு இத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ள எவ்வித கத்திரியுமின்றி சிலருக்கு - குறிப்பாக ஒருருக்கு வாய்ப்பளித்துள்ள அட்மின் அவர்கள், அதற்கு நான் அளித்துள்ள இந்த நாகரிகமான விளக்கத்தையும் நிராயுதபாணியாக (கத்திரிக்கோல் இன்றி) வெளியிடுவார் என்ற நம்பிக்கையுடன்,

கவிமகன் காதர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. கருத்து என்பது சட்னி, சாம்பார் அல்ல...! சளிச்சுப் போச்சேன்ணு தூக்கி எறிய...!!!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (புனித மக்கா.) [21 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19483

காயல்பட்டினம் நகர்மன்றம் 02 -வது வார்டைச் சாந்த ராபியா மணாளனின் தன்னிலை விளக்கம்.

கருத்துப்பதிவாளர் என்பது நான் ஆசைப்பட்டு இதற்காக கடும் முயற்சி செய்து பெற்றது அல்ல. இந்த பெருமை எங்கள் காயல்பட்டணம் டாட் காம் வாசகர் வட்டத்தால் அமானிதமாக தரப்பட்டதாகும்.

நான் கருத்துப் பகுதியில் வெற்றி பெறுவதற்காக செலவிட்ட தொகை Rs / ௦= மட்டும்தான்.

வாசகர் வட்டத்தில் கருத்தாளனாக நான் பொறுப்பேற்ற போது, இறைவன் மீது சத்தியமாக பொய்யான கருத்துக்களை எழுதவும் மாட்டேன். யாராவது அப்படி எழுதும்படி சொன்னாலும் அதைச் செய்யவும் மாட்டேன் என்று கூறிய வாக்கை இன்று வரை கடைபிடித்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் இனியும் கடைபிடிப்பேன்.

நான் பொய்யான விசயத்தை எழுத வேண்டும் எனக் கருதவில்லை. முறையான வழியில் அல்லாமல் வரும் எல்லாக் கருத்துக்களும், எண்ணங்களும் பொய் போன்றதுதான்.

எழுதிய ஆரம்ப காலத்தில் மாற்றுக் கருத்துடையவர்களை (சட்னி மீரான் அவர் என் பெயரைக் குறிப்பிட்டுள்ளபடியால் அவரது பெயரை நான் குறிப்பிடுகின்றேன்) பற்றி சில கருத்து வேறுபாடுகள் சொல்லப்பட்டாலும் எல்லோர்களுக்கும் முன் நான் எழுத்துக்குப் புதிது என்பதால் உடனடியாக யாரையும் குறை சொல்லக் கூடாது என்று எண்ணி அவற்றையெல்லாம் புறக்கணித்து அவரது வேறுபாடுகளுக்கு ஆதரவாக இல்லாவிடினும் அமைதியாகவே நாங்கள் (கருத்தாளர்கள்) பலர் இருந்து வந்தோம்.

நல்ல கருத்தைத் தர வேண்டும் என்ற ஆர்வம் சட்னி மீரான் அவர்களுக்கு இருந்தாலும் அதை எழுத்தில் கொண்டு வருவதில் தீர்க்கமான எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை. தனக்குள்ள திறமை என்ன என்பதை மிகுந்த முயற்சி எடுத்து அறிந்து கொண்ட அவரால் அந்தத் திறமையின் வெளிப்பாட்டை கருத்தாளர்களிடம் சாடுவதில் காட்ட தெரிந்ததே தவிர நிரூபித்துக் காட்டத் தெரியவில்லை. கருத்துப்பேழையில் உள்ளவர்களுக்கு பொறுமை மிக அவசியம். அதற்காக நான் அடங்கிப்போகச் சொல்லவில்லை. சட்னி மீரான் அவர்கள் சில கருத்தாளர்களோடு கடுகடுத்த எழுத்துக்களால் சில கடுஞ்சொற்களை உபயோகித்த சம்பவங்களும் உண்டு.

எங்களைப் போன்ற சில கருத்தாளர்களின் ஆலோசனைகளை பரிசீலிப்பதற்கு கூட அவர் தயாராக இல்லை. குறிப்பாக ஒவ்வொரு செய்தியிலும் நடக்கும் நிகழ்வுகளை கருத்தாளர்களின் எண்னங்களின் பிரதிபலிப்பை முழுமையாகப் படித்து, அதன் பின்னர் தான் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை ஆராய வேண்டும் என்று கூறினால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த கருத்தை எழுதத் துவங்கிவிடுவார். விளைவு, முதலில் ஒற்ரைபடை எண்ணிக்கயில் வந்து கொண்டிருந்த கருத்துக்கள் படிபடியாக கூடி இப்போது ஐம்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. மக்கள் விழிப்புடன் இருப்பதுதான் இதற்கு காரணம். கருத்தாளர்களின் பிரச்சனை தீர்ந்த பாடில்லை.

ஆடியோ ஒலிப்பதிவு ஆகட்டும், தன்னிலை விளக்கத்திற்கு கருத்து எழுதுவதாகட்டும் இவற்றில் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றி முற்கூட்டியே ஆலோசனை செய்யாமல் பிரச்சனை முற்றிய பிறகு முடிவு காண முயற்சி செய்கிறார். இதைப் பற்றி எச்சரித்தாலும் அதை புறக்கணித்து விடுகிறார்.

இதேபோல் நகராட்சி தேர்தலாகட்டும், ஐக்கியமாக இருக்கும் சில பேர், அவைகள் பிரச்சனையாகட்டும், சரியான நேரத்தில் அவரால் சரியான கருத்தை எழுத முடியவில்லை.

இது சம்பந்தமாக என் போன்ற கருத்தாளர்களின் ஆலோசனைகளையும் ஏற்க மறுப்பதால் கருத்தாளர்களில் பலர் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சனைகள் எப்படி தீர்ப்பது என்று முடிவெடுக்க கடந்த 17.06.2012 அன்று வெளி வந்த செய்திக்கு (தன்னிலை விளக்கத்திற்கு) தக்க பதில் கருத்துக்களை காயல்பட்டணம் டாட் காமிற்கு அனுப்பிக் கொடிருந்தோம்.

ஒட்டுமொத்தமாக எங்கள் கருத்துக்களையும் அவர் நிராகரித்துவிட்டார். ஒரு போனில் கூட அதைப் பற்றி பேசுவதற்கு தயாரில்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக எல்லா கருத்தாளர்களையும் உங்களுக்கு பல சன்னிதானங்களின் மகா மகிமையைத் தெரிய முடியாமல் போனதால் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கூறி எங்களையும் கொச்சைப்படுத்தினார்.

இதன் பிறகு இவருக்கு பதில் எழுதி எந்த உபயோகமும் இல்லை என நான் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பல கருத்தாளர்கள் எவ்வளவோ எடுத்து எழுதியும் அவர் அதைப் பற்றி ஆலோசிக்க முன்வரவில்லை.

இதற்கிடையில் நேற்று Kayalpatnam.com-ல் சில கருத்தாளர்களின் பதிவுகளில் நகர்மன்றத் தலைவி செய்தது மாபெரும் மன்னிக்க முடியாத குற்றம் என்பது போல் உள்ள சில கருத்துக்களை காண நேர்ந்தது இது என் மனதை மிகவும் பாதித்தது.

இதில் அந்தக் கருத்துக்களின் யோக்கியதையும் வெளிப்பட்டது மட்டுமல்லாது, எல்லா கருத்தாளர்களும் அவர்களுடன் இணைப்பது போன்று எழுதியிருந்தது. அவர்களின் எல்லா நோக்கங்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது.

இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எத்தனை கேள்விக்கணைகளைத் தொடுத்தாலும் அது நம்மைச் சேர்மன் ஆபிதாவின் அனுதாபி, ஊர் பெரியவர்களை மதிக்கத் தெரியாத - நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள், திருவிழாவுக்கு கடை விரிப்பவர்கள். உடுத்த துணியோடு அரபிகளால் ஊருக்கு விரட்டப்பட்டவர் எனும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும். அவரது கருத்துக்களில் நேர்மை இருப்பதும் சந்தேகம்தான்.

பொதுநலச் சேவை என்று வந்துவிட்டால் இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது என சிலர் கூறலாம்.

என்னைப் பொருத்த வரை தனி மனித ஒழுக்கமும் சுய கௌரவமும்தான் முதலில் முக்கியம். அதன் பிறகு தான் பொதுநலச் சேவை.

நல்ல கருத்துக்களை நல்ல இணையதளங்களில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது என் கருத்து. அப்படியென்றால் இப்போது இருக்கும் இணைய தளங்கள் நல்லவைகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நான் எந்த தளத்திற்கும் நல்லவை என்றோ, கெட்டவை என்றோ சான்று தரப்போவதில்லை. அவர்களின் கெட்ட செயல்கள் எப்போது நேரிடையாக காண நேர்கிறதோ அல்லது ஆதாரபூர்வமாக தெரியவருகிறதோ அப்போது மட்டும்தான் அவர்களைப் பற்றி கருத்து கூறமுடியும்.

எனவே எனது சக கருத்தாளர்களிடம் தெரிவிப்பது என்னவென்றால் இந்த (ஆடியோ) உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்கள் வெட்கித் தலை குனிந்து தம் தவற்றை உணரும் வகையில் கருத்தெழுதுங்கள் அதை விட்டு விட்டு சேர்மனின் குறைகளை கிளறுவதால் இது போன்ற ஆடியோக்கள் என்ன? வீடியோக்களே வெளிவந்தாலும் அவைகள் திசை திருப்பப்படும் என்பது உறுதி! கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.

யார் என்ன எழுதினாலும் பரவாயில்லை நாம் நல்லதை எழுதினால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என சில நண்பார்கள் கூறலாம். மக்களுக்கு நன்மை கிடைப்பதற்கு பல நல்ல வழிகள் இருக்கின்றன. அதைச் செய்து நன்மைகள் பெற்றுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட கருத்துப் போர் தேவையில்லை.

இன்னும் சில காலங்கள் அவதானித்து, என் கருத்து மூலம் பொது வாழ்வில் நன்மைகள் செய்ய முடியுமா? என்று பார்ப்பேன். முடியாவிட்டால் இந்த மடி கனணியையேத் தூக்கி எறிந்து விடுவேன்.

இறுதியாக ஒன்று, நான் கருத்தெழுதிய நாள் முதல் இன்று வரை நான் யாரிடமாவது, அல்லது யார் கருத்தையாவது திருடிப் பெற்றிருந்தால், அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாவதாக!

என்னைப் பற்றியும் என் உள்ளத்தைப் பற்றியும் வல்ல அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். வஸ்ஸலாம்.

இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 02ஆவது வார்டைச் சார்ந்த ராபியா மணாளன் -M.N.L. முஹம்மது ரபீக். (புனித மக்கா) தன்னிலை விளக்கமளித்துள்ளார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. இன்று து ஆ தினம் ! நல்லவையே நினைத்து, தீயவைகளை அகற்றிட இறை யை இறைஞ்சிடுவோம் !!
posted by K.V.A.T.HABIB MOHAMED (DOHA - QATAR) [21 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19485

சிறப்பாக நடை பெற்ற புஹாரி ஷெரிப் து ஆ வில் கலந்து நம் ஊருக்காகவும் ..நம் நாட்டுக்காகவும் , இஸ்லாமிய சமுதாயத்துக்காகவும் வல்ல ரஹ்மானின் அருளோடு து ஆ கேட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் , நாங்கள் வெளி நாடுகளில் இருந்தாலும் நேரலை மூலமாக கேக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து எங்களையும் மகிழ்வித்த அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியினை காணிக்கை யாக்கிக் கொள்கிறோம்.

நம் நல்ல நாட்டங்கள் அனைத்தையும் , வல்ல அல்லாஹ் கருணையோடு கபூல் செய்து , நம் நகரில் தற்போது நிகழும் நிகழ்வுகள் அனைத்தையும் பிரயோஜனம் மிக்க நிகழ்வாக , செயலாக ஆக்கித்தந்து , சமுதாய ஒற்றுமை மேலோங்க செய்வானாகவும் ! ஹக்கை ஹக்காகவும் , பாதிலை பாதிலாகவும் மக்களுக்கு உணர்த்தி தெளிவு படச் செய்வானாகவும்!

அல்லாஹ்வுக்காக இந்த சமுதாயத்தை தீங்குகளில் இருந்தும் , தொலை நோக்கு பார்வையோடும் விழிப்படையச் செய்த , செய்துக் கொண்டிருக்கிற நல்ல உள்ளங்களை என்றென்றும் கிருபை கண்ணோடு நோக்குவானாகவும்! அவர்களின் தூய செயல் பாடுகளுக்கு என்றென்றும் துணை புரி வானாகவும் !

வழி தவறி , சமுதாயத்தை திசை திருப்புவோரின் எண்ணங்களை மாற்றி அமைத்து , அவர்களின் செயல் பாடுகளை என்றென்றும் அல்லாஹ்வுக்கும் இரசூளுக்கும் உகந்ததாக ஆக்கி அமைப்பானாக! இந்த சமுதாயத்துக்கு அல்லாஹ்வின் பெயரால் யாரெல்லாம் சேவை புரிய வந்திருக்கிறார்களோ அவர்களுக்கு , அவர்களின் பதவி காலத்திலேயே அலல்து அவர்களுக்காக கிடைக்கப்பெற்ற காலத்துக்குள், முடிந்த வரை சீரிய சமுதாயப்பணி ஆற்றி, இறை அருளையும் , மக்களின் து ஆவினையும் பெற்றிட எல்லாவித பக்க பலத்தையும் வல்ல அல்லாவின் அருளோடு கொண்டு திகழ து ஆ செய்வோமாக!

இந்த இணைய தளத்தின் நல்ல சேவைகள் சிறப்படையவும், இதன் மூலம் பொழுது போக்கும் நல்ல உள்ளங்கள் மகிழ் வடையவும், தேவையானவர்களின் தேவைகள் பூர்த்தி அடையவும் , எங்களைப்போன்றவர்கள் வெளி நாட்டில் இருந்தாலும் , ஊரில் இருக்கிறது போன்ற உணர்வினை தந்துக்கொண்டிருக்கிற இந்த சேவை மென் மேலும் சிறப்படையவும் இந்த தருணத்தில் து ஆ செய்வோமாகவும் ! ஆமீன் !

"மெகா" கருத்துக்கள் என்றும் பிரயோஜனமாக இருக்ற வகையில் முற்காலத்தில் அமைந்தது போன்று அமையட்டும் எப்பொழுதும் !

(அட்மின் ...சம்பந்தமில்லாத கருத்து என்று தள்ளுபடி செய்திட வேண்டாம். அப்படி என்றால் இங்கே எத்தனை கருத்துக்கள் இந்த செய்தியோடு சம்பந்தம்? நோக்கம் திசை திருப்பப் படாமல் இருக்க இந்த இனிய து ஆ பிரார்த்தனையோடு இத்தோடு முற்று புள்ளி வைக்கிறேன்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [21 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19487

யாரை தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவது, ஊருக்கு ஒழுங்கா வேலையே செய்தோமா இல்லையா, என்பதை விட்டு விட்டு நான் சுத்தம் நீசுத்தம் என அறிக்கை போர் வேறு.

மாதம் அறுநூறு ருபாய் சம்பளமாம் இதுல ஐநூறு தான் கிடைக்குதாம், இவனுவோ தூய்மையாய் சேவை செய்வார்களாம். கேக்குறவன் கே......ய் இருந்தால் எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம். ஒத்துமையாய் ஊருக்கு வேலை செய்வதை விட்டுவிட்டு நான் சுத்தம் நீ சுத்தம் னு அறிக்கை போர் வேற. ஒருபயலும் தன் சுய வாழ்வில் ஒரு பைசா கொடுக்காமல் தன் வேலையே முடிச்சேனு நெஞ்சை தொட்டு சொல்ல முடியாது. அது நகராட்சியிலாகட்டும், வேறு எந்த காரியத்திலாகட்டும். பைசாவ இல்லாட்டாலும் இனிப்பு, சந்தோசம், அன்பளிப்பு என கட்டாயம் கொடுதிருப்பானுவோ!

அப்படி நடக்க னுண்டா (மன்னிக்கவும் சினிமாவை உதாரணம் காட்டுகிறேன் அப்பத்தான் நச்சுனு ஏறும் ) இந்தியன் படத்துலே கமல் தாத்தா புள்ளைய பறிகொடுத்தது மாதிரிதான் இருக்கும். கடைசியிலே அவர் பழிவாங்குவார்.

நம்மட பயல்வோ ஒரு சாட்சிக்கு அழைத்தாலே துண்டைகாணோம் துணிய காணோம் னு ஓடுவானுவோ! இவனுவோ போடுற சண்டையில குரங்கு அப்பத்தை பங்கு வைச்ச கதையா அதிகாரிங்க பாக்கெட் நிறையுது.

எதோ தரமறிந்து மக்களுக்கு கஷ்டம் குடுக்காமல் வேலையே சகோதர பாசத்தோட செய்து குடுக்க பாருங்க! அத விட்டு குடுமி சண்டை வேறு. தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவனுவளே உரிமையோடு கேட்க கடமை பட்ட வனுவோ. அதை விட்டு விட்டு என்ன செய்தாளும் கண்ணை மூடிகிட்டு ஆதரிக்கிறது முட்டாள் தனம்.

ஒன்னுமில்லாமல் செய்து முடிக்க இருக்கிற அத்துணை பேரும் M.K.T அப்பாவுமில்லை! L.K. அப்பாவுமில்லை. V.M.S. லெப்பை அப்பாவுமில்லை வாவு செய்து அப்துர் ரஹ்மான் அவர்களும் இல்லை.

ரொம்ப அதிகமா ஆட்டம் போட்டா, நீங்க கண்ணை மூடினாலும் குஜராத்திலுள்ள வங்கி அதிகாரி மூலம் இறைவன் தோலுரித்து காட்டியது போல் தொண்டையை பிடித்து விடுவான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. Totally biased
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [21 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19489

Like "Every coin has two sides", "Every story has two sides" too.

If one feels comfortable in arriving at a judgement based on mere accusation(s) thrown against a particular person, he/ she should have had the courtesy to listen to the other side before pronounce his/her verdict.

Many commentators in this page became Police, Prosecutor and Judge all at the same time and trying their best to convict and sentence the accused to the exile based on untenable accusation(s).

These people are Unfair, Biased. They were not the only people who are doing injustice to the topic, but Admin too. Admin should have snipped /edited the accusation part saying, " Statement or comments not related to the subject".

Dear Admin: I like to highlight the quality of one of your commentators' statement who says, "சகோதரி ஊர் தலைவி ஆபிதா அவர்கள் இப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒரு குற்றவாளி".

How can you allow such an illogical, unreasonable and unjust statement to appear?.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. கற்பூரம் ஸ்பெஷல் ...!!
posted by M Sajith (DUBAI) [21 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19490

கருத்தில் குசும்பு எழுதும் ரபீக் சார், குசும்பையே கருத்தாக வடித்திருப்பது என்னையும் மறந்து சிரிக்கவைத்து விட்டது...

ஒரு உண்மையை ஊனமானக்குவதுதான் இந்த அறிக்கையின் நோக்கம் என்றால் - அதில் வெற்றி பெற்றதுக்கான பாராட்டுக்களை சகோ. லுக்மான் அவர்களுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஒலிப்பதிவில் தாம் இல்லை என்பதை, பரவலாக அனைவரும் நம்பும் தகவலை, மிக அருமையாக திசை திருப்பிய நேர்த்தி எல்லோருக்கும் வருவதில்லை.

இந்த கருத்துக்களின் மோதல்களில் 'கரு'வை காணாமலே போக்கியது வெற்றி இல்லையா?

அத்தோடு, AWS காக்காவின் சென்சார் அட்வைசில் உடன்பாடு இல்லை

காரணம், சில 'கற்பூரங்கள்' இனையத்தின் வாசகர்கள் அனைவருமே அம்னீசியா பாதிப்புள்ளவர்கள் என்ற நினைப்பில் ஒரு நாள் கூட செய்யாத வேலையை அடைப்புக்குறிக்குள் போட்டு, (அவர் வழக்கமாக கருதும்) "வாழமட்டைகளுக்கு" தன் தரத்தை கடைவிரித்து இருக்கிறார்.

நீங்கள் சிபரிசு செய்யும் சென்சரை பயன்படுத்தினால் இதுபோன்ற உளரல்கலும், சமூக சேவையில் 'பழம் தின்ற' அனுபவசாலியின் உளரல்கள், நேற்று பெய்த மழையில் முளைத்த இளவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் கைசேதம் எற்பட்டுவிடாதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. தூய பணிகள் தொடரட்டும். .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [21 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19491

பதில் கூறி என் பணியை குறைத்து விட்டார்கள். நன்றி கவிமகன் அவர்களே!

அடுத்து தலைவி அவர்களுக்கு, முன்னர் நான், தாங்கள் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அது தற்போது தேவையில்லை என்ற நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் புண்ணிய பனியின் பயணத்தை எந்த தங்கு தடையின்றி, எத்தயக்கமும் இல்லாமல் தொடருங்கள்.

அல்லாஹ்வின் மீது அச்சமில்லாதவர்களும் ,ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுபவர்களும், வக்கர குணத்தை விதைக்க முயலும் வீணர்களும் உங்களை எல்லா திசைகளிலும் சொல்லாலும், செயலாலும் திக்குமுக்காட வைக்க வேண்டுமென்ற வஞ்சக வலையை பின்னுகிறார்கள்.

அந்த வஞ்சக நெஞ்சுடையவர்களின் வார்த்தைகள் ஆகாயத்தில் அழகு நிலாவை பார்த்து ஐந்தறிவின் ஒப்பாரிஎன்று ஓரம் கட்டி விட்டு உங்கள் ஒப்பற்ற கைதூய்மையான தொண்டு தொடரட்டும்!

இப்புண்ணிய காயல் புனிதமாவதற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை தர உண்மையான எத்தனையோ இதயங்கள் உங்களுக்கு உறுதணையாக வரத்தயாராக உள்ளோம். தூய பணிகள் தொடரட்டும்!.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Salai. Mohamed Mohideen (USA) [21 June 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19503

தனக்கென்று வாசகர்கள் மத்தியில் நல்லதொரு “இமேஜை” உருவாக்கி வைத்திருந்த சகோதரர் அவர்களின் இந்த தன்னிலை விளக்கம் பல கமன்ட்களை படித்ததில் backfire (தனக்கே திரும்பி) ஆகிவிட்டது போல் தெரிகின்றது. ‘படம் பார்த்து கதை எழுதுகின்றார்கள்’ என்றதினால் இவைகளை இப்பொழுது இங்கு எழுதுகின்றேன்.

அந்த குரல்களுக்கு சொந்தக்கார்கள் யாரென்று பெரும்பாலானோருக்கு தெரியும். அதனை அச்செய்தியின் கமன்ட்களை படித்தால் உணரலாம். ஆனால் தானாகவே தன்னிலை விளக்கத்தின் மூலம் தேவையில்லாமல் அக்கேள்வியை கேட்டு சிக்கி கொண்டார்.

வாசகர்கள் வெளியூரில் / வெளிநாட்டிலேதான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எண்ணமும் செயலும் தன் தாய் மண்ணை பற்றிதான் உள்ளது. இறைவன் மீது ஆணையிட்டு (வல்லாஹி) கூற முடியுமா என்று வாசகர்கள் கேட்ட, இதுவரை மறுப்புரையே கூற படாத பல கேள்விகளே அதற்க்கு சாட்சி.

'தலைவியே!! ஆளும் கட்சியில் சேர்ந்து விடுங்கள்' என்று உத்தம புத்திரர்கள் கூட தூது போனதும், தங்க ராஜாவுக்கு கும்பிடு போட சொன்ன விவரம் வரை பலருக்கும் எப்பவே தெரியும். ஒரு சிலர் அதனை வெளியிடாது கண்ணியம் காத்தனர்... ஒரு சிலர் பொறுமை இழந்து அதை வெளியிடும் நிலைக்கு தள்ள பட்டனர்.

இரண்டாம் பைப் லைன் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டரை லட்சம் வரை கிடைக்கும் என்பதும் அதனை பாவம் புண்ணியத்திட்க்கு பயந்த ஒரு சிலர் கூட (அதனை வாங்காமல் விட்டால் எங்கே மற்ற கவுன்சிலர்கள் ஆட்டை போட்டு விடுவார்களோ என்று) அதனை வாங்கி வேற 'நல்லதொரு குமார் / படிப்பு காரியத்திற்க்கு' பயன் படுத்த திட்டமிட்டுள்ளது முதல் & அத்திட்டம் வந்தால் இரண்டரை லட்சம் கிடைக்கும் என்ற கனவோடும்... எங்கே அதனை நல்லவர்களும் வல்லவர்களும் அடைய விடாமல் கெடுத்து விடுவார்களோ என்ற மன பிராந்தியில் தினமும் காலத்தை தள்ளுவது வரை யாவரும் அறிந்ததே.

இன்னும் சில நாட்கள் கழித்து... பிறரை சுரண்டி கொழுப்வர்கள், தேர்தலில் முகத்திரை கிழிக்க பட்டவர்கள், கூஜா தூக்கிகள், ஊழல் பேர்வழிகள் எல்லாம் பினாமி (களின்) பெயரில் கட்டுரைகள் /கதைகள்/ செய்திகள்/ கமன்டுகள்/துணுக்குகள் / blogs/ பிட் நோட்டீஸ்களிலும் கூட வளம் வருவார்கள். யாராவது கேட்டால்… நாங்கெல்லாம் 'ஒன்று கூடி' கதை எழுதுகிறோம் (சினிமா தயாரிப்பது போல் ?) என்பார்கள். இது போன்ற பல படங்கள் அடுத்த ரிலீசுக்கு தயாராகி 'அனுசரணையாளர்களின்' அப்ருவலுக்காக கூட காத்திருக்கலாம்.

'ஆளும் கட்சிக்கு ஆள் சேர்க்கும் (part time job?) ‘ , 'கும்பிடு சாமிக்கு ஜே!!’ போட சொல்லும் மற்றும் "மேற்கூறியவர்களின்" கேள்விகளுக்கெல்லாம் ‘தலைவி’ பதில் தர வேண்டுமா என்பதனை சிந்திக்க வேண்டிய விஷயம். கேள்வி கேட்பவர் ஹக்கானவராக இருந்தால் அல்லது இவைகளில் நியாயமானவைகள் என்று எதுவும் இருந்தால் மட்டும் பதில் கூறுங்கள்!!

'ஈ - டெண்டேர்ணா' என்னான்னு தெரியாவிட்டாலும் கூட 'அடுத்தவனை குழிபறிக்க' சட்டத்தின் சந்து பொந்துகள் அத்து படி. ஒரு வருடம் (?) கழித்துதான் நகர்மன்றத்தில் தலைவர் மீது 'நம்பிக்கை இல்லாத தீர்மானம்' கொண்டுவர இயலும் என்ற விதியை நன்கறிந்த நம் அன்பர்கள் ஒன்று கூடி 'திட்டமிட்டபடி' நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு இப்போதிருந்தே காய் நகற்றும் அவர்களின் புத்திசாலித்தனம் யாவரும் அறிந்ததே!!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய். டம்மி தலைவர் (puppet) கிடைத்த மாதிரியும் இருக்கும்.... அந்த இரண்டரை லட்சதிட்க்கும் ஆபத்து வராமல் இருக்கும்.

"சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சியாளன். மறைவானவற்றின் மீதான அறிவு அவனுக்கே உரியது!!"

பெண் தலைமை கூடாதென்றும்… ஏதோ ‘மெகா’தான் ஆட்சிக்கு அவர்களை அமர வைத்தது போல சித்தரித்து, தன் ‘சுய சிந்தனையுடன்’ ஒட்டு போட்ட பொதுமக்களை கேவல படுத்துகின்றார்கள். மாதங்கள் எட்டாகியும் இன்னும் ஒரு சில சகோதரர்கள் / தரப்பினர், பொது மகா ஜனத்தால் தேர்ந்தெடுக்க பட்ட தலைவியின் வெற்றியை...
‘பெரியவர்களின்’ தலைமைக்கு ஏற்பட்ட ஒரு 'அவமானமாகவே' இன்று வரை தவறாக கருதுவதும் & தலைவியின் வெற்றியையும் செயல்பாட்டையும் ஜீரணிக்க முடியாத சங்கடத்தில் இருப்பதை அவர்களின் கருத்துக்கள் வாயிலாக உணர முடிகின்றது.

அதற்க்கு காரணம், பெரியவர்கள் மீதுள்ள 'முரட்டுத்தனமான' அன்பு / மதிப்பு அல்லது அவர்கள் தங்களின் சொந்தக்காரர்கள் / தெரு - முஹல்லா – ‘கொள்கை’ வாசிகள், நல்லவர்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம். இன்னும் சிலர் 'மெகா' என்ற அமைப்பை அவமானபடுத்துவதற்கான வாய்ப்பாக எண்ணி தவறு செய்தவர்களை நியாயமும் கூட படுத்துகின்றார்கள்.

"அன்பானவர்களிடம் நேரடியாக/போனில் பேசினாலும் ... உங்களுக்கு தெரியாது பதிவு செய்து தளத்தில் பதிவு ஏற்றி உலாவ விட்டு விடுவார்கள்" - இக்கருத்து அக்கயவர்களுக்கு ஆதரவளிக்கின்றதா அல்லது எதை எதோடு ஒப்பிட்டு பேசபட்டுள்ள ஒரு (3rd class ??? ) முயற்ச்சி என்று தெரியவில்லை.

மெகாவையும் அதன் சேவையையும் எங்கேயோ கடல் கடந்து வாழும் நம் சகோதரர்கள் உணர்ந்ததை கூட ... ஒரு செயல் உறுப்பினாராக நம் அன்புச்சகோதரர் உணராமல் போனது மெகாவின் துரதிஸ்டமே. அதற்கான விளக்கத்தை கவிமகன் காதர் அவர்களின் கருத்து பதிவில் அறிய முடிந்தது.

தலைவியின் செயல்பாட்டில் மீதுள்ள உங்களுடைய நியாயமான அதிருப்திகளை / கேள்விகளை கேட்க்கும் அதே நேரத்தில் ஊழலுக்கும் அநியாத்திட்க்கும் எதிராக குரல் குடுங்கள்!!

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நமதூர்… இனிமேல் கடந்த காலம் போல் இருக்காது. ஊழல் புரிபவர்களுக்கும், நமதூரை ஏதோ அவர்கள் அப்பன் வீட்டு சொத்து போல கண்ட்ரோல் பண்ண நினைப்பவர்களுக்கும், அவர்களின் கூஜா தூக்கிகளுக்கும்… என்றைக்கு நம் மக்கள் இன்டர்நெட் இணையதளங்கள் அளவுக்கு விழிப்புணர்வு பெற்றனரோ அன்றே ‘சாவு மணி’ அடிக்கப்பட்டுவிட்டது என்பதனை தோண்டித் துருவும் செய்திகள் வாயிலாகவும் மற்றும் அதில் நமது சகோதர / சகோதரிகள் ஆழமான கருத்து / உணர்வு பதிவுகளே அதற்கு சாட்சி.

உங்களுடைய பொன்னான நேரத்தையும் வசதி வாய்ப்பையும் வல்ல ரஹ்மானுக்கு பயந்து நன்மையான காரியங்களில் மட்டும் செலவு செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் வெளிச்சத்துக்கு வருவீர்கள்... பிறருக்கு ஒரு முன்மாதிரியாக மக்களால் போற்ற படுவீர்கள்.

இறுதியாக இந்த சகோதர கருத்தியல் யுத்தத்தினால் 'பலனை' அறுவடை செய்ய போவது 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்' என்று எண்ணும் கழுகு கூட்டங்களும், எடுபடிகளும் /ஜால்ராக்களும்தான்.

இவர்கள் தலையெடுக்க நம்மை அறியாமலேயே நாமே இதற்கு வழி வகுக்க கூடாது. காலம் எப்பொழுதும் இப்படியே இருந்து விட போவதில்லை. எஎ பாசத்திற்குரிய நமது பெரியவர்களும் நகராட்சி தலைவியும் மாற்று கருத்து கொண்ட அன்பர்கள் அனைவரும் ஒன்று சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்பொழுது ஊழல் மற்றும் அராஜக பேர்வழிகளுக்கு ஒத்த குரலில் சாவு மணி அடிக்கப்படும்.

ஒற்றுமை எனும் அந்த விடியலை நோக்கி நாம் பயணிப்போம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. பாட்டுக்கு பாட்டு
posted by Salai Sheikh Saleem (Dubai) [22 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19509

சட்னியார் ஒரு சகாப்தம்

அன்பு சட்னியாரே!

இரயில் பயணங்களில் வந்துபோக நாங்கள் ஒன்னும் வழிப்போக்கர்கள் இல்லை. எங்களுக்கும் எங்கள் தாயகத்தை செழிப்பானதாக்க கனவுகள் உள்ளது. ஆனால் நம்பினோருக்கு துரோகம் செய்ய உம்மளவுக்கு நாங்கள் இன்னும் பக்குவப்படவில்லை.

கிடைத்த சந்தர்ப்பத்தில் நடந்த சீர்கேட்டின் பிரதிபலிப்புகளை ஒலி வடிவில் பதிவுசெய்தால், ஏன் வீடியோ எடுக்கவில்லை என்று ஒரு எக்காளம்!

ஏன் ஒரு டைரக்டர் கூட வைத்துக்கொள்ள வேண்டியதுதானே 'கட்' சொல்வதற்கு ? இதற்க்கு கூடவா நீர் இன்னும் ஸ்கூல் போக வேணடும்?

ஆனால் அங்கு கூட உம் துரோகத்திற்கு பாடம் எடுக்க மாட்டார்களே !

ஓலி நாடாவிர்க்கும் MEGA விற்கும் என்ன சம்பந்தம் ??? ஏன் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சு போட்டு - நீர் அதில் கழுத்தை மாட்டிக்கொள்கிறீர்?

MEGA என்றால் உங்களுக்கு ஏன் இந்த "மகா" பயம்?
இது ஒரு வழிகாட்டுதல் இயக்கம்தானே?

ஒரு கருத்தை மட்டும் சொல்லி நாங்கள்தான் ஒதுங்கிக் கொண்டோமே ?

ஏற்றோர் ஜனநாயகத்தை அனுபவித்தனர்.

இகழ்ந்தோர் இறுதி வரை மனக் குமுறல்களிலும் உண்மையை மறைப்பதிலும் இயற்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். இன்ஷாஅல்லாஹ் அது ஒரு போதும் முடியாது.

நிஜம் கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்

எனக்கு தில் இருக்கிறது நான் என் சொந்த பணத்தை ஊர் நன்மைக்காக வேண்டி செலவழித்தேன். பிறர் பணத்தில் குளிர் காய நினைக்கும் விஷயத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி எமக்கில்லை. கற்றுத் தரும் நிலையில் தாங்களிருக்கலாம். ஆனால் இந்தப் பாடப் பிரிவில் படிக்க எங்களுக்கு விருப்பமில்லை.

பலரது பக்கெட்டுகள் நிறைந்துள்ள போதிலும் மனதில் மட்டும் ஏனோ தளர்வுதான் காணப்படுகிறது.

ஆனால், அல்ஹம்துலில்லாஹ், எங்களின் பக்கெட் காலியானாலும் மனங்கள் நிறைந்திருக்கிறது.

நாங்கள் கொள்கையில் வெற்றி பெற்றவர்கள்! குளத்தைப் பகைத்துக்கொண்டு கால் கழுவாதவர்கள் நீங்கதான் என முகம் பார்க்கும் கண்ணாடியை முன்னிறுத்தி ஒரேயொரு முறை சொல்லும்! அது யாரென நொடிப்பொழுதில் தெரியும் உமக்கு.

நீர் "மெகா" வோடு இணைகிறீர் என்றதும், எங்களுக்கு முதல் வந்த மினஞ்சலே

"ஏனப்பா வேலிக்குள் போகிற ஓணானை ---------""

நீர் நிமிஷத்திற்குள் நிறம் மாறும் குணம் ஊருக்கே தெரிந்த ஒன்றாகி விட்டது

அந்த நிமிஷம் முதல் உம் பெயர் எங்களின் மின்னஞ்சல் பட்டியலிலிருந்து நீக்கம் செய்தோம். பிறகு, உமது ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டது

ஒரு கொள்கைக்கு கட்டுப்படுவதாக நடிப்பவர்களுக்கு இஸ்லாம் கொடுத்த அடைமொழியை அடைய ஏன் இத்தனை ஆசை உமக்கு?

சத்தியவானுக்கு கொடை பிடிக்கும் கர்ணனே

எங்கள் இளவல் கவிமகன் மற்றும் ரிபாஈ அவர்களின் கேள்விக் கணைகளுக்கு உங்கள் முபாஹலாவை - எதிர்கொள்ள சொல்லுங்கள்! அவர்களின் சுயரூபம் முக்காப்புலாவாகிவிடும்.

உம் பதிவிலிருந்து நீர் யாரோ உம்மிடம் சொல்ல சொன்னதை ஏதோ சொல்ல வருகிறீர் என்று மட்டும் புரிகிறது சொல்வதை திருந்த சொல்லும்! அப்போதுதான் எல்லோருக்கும் புரியும் உம் நிஜம்

தாங்கள் அரபு நாட்டில் இருந்து மற்றவர்களைப் புறம் பேசலாம் மற்றவர்கள் அரபு நாட்டில் இருந்து நன்மைகள் கூடவா செய்யக்கூடாது ?

MEGA விற்கு செய்த துரோகத்திற்கும் சேர்த்து நீர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரும்.. அவன் மன்னிப்பவன் எஜமான், ஆனால் நாங்கள் மனிதர்கள்.

குதிரை பேரம் பேசியவருக்காக வக்காலத்து வாங்கும் புரோகிதரே! உம் முகத்திரை கிழிந்து தொங்குவது உமக்குத் தெரியவில்லையா?

இத்தனை இருந்தும் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும்
சட்டினியாரே! உண்மையில் நீர் ஒரு சகாப்தம்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [22 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19523

அன்புச் சகோதரர் சட்னி செய்யது மீரான் அவர்களே! தாங்கள் இத்தளத்தில் பதிவு செய்துள்ள நீண்ட கருத்துப் பதிவு குறித்து என் மனதில் தோன்றிய பல கேள்விகளில் இரண்டை மட்டும் இப்போது கேட்கிறேன். பதிலளிக்கவும். தங்களது பதிலை அடிப்படையாகக் கொண்டு இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில கேள்விகளும் தங்களை நோக்கி வரும்.

கேள்வி 1: நகர்மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் - நகராட்சிப் பணத்தை எப்படியெல்லாம் தவறாக எடுக்கலாம், அதற்கு தலைவி எப்படியெல்லாம் தடையாக இருக்கிறார்கள் என்பது குறித்து உரையாடும் கேவலமான வாசகங்கள் அடங்கிய ஒலிப்பதிவை செய்தியாக வெளியிட்டது இந்த இணையதளம். இதில் மெகாவை தாங்கள் இழுத்துப் பேசுவதின் காரணம் என்ன?

கேள்வி 2: நீங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு மெகா அப்படி என்ன மாபாதக செயலை செய்துவிட்டது என்பதை தகுந்த ஆதாரத்துடன் விளக்கமாக சொல்ல முடியுமா?

வேலைப்பளு காரணமாக தாமதமாக இந்தக் கருத்தைப் பதிவு செய்வதற்கு வருந்துகிறேன். தங்களிடம் இருந்து தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்றைய மழை காட்சிகள்!  (16/6/2012) [Views - 3704; Comments - 4]
இன்று மாலையில் கனமழை!  (15/6/2012) [Views - 3707; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved